Hateless Hate crime

 

சமீப காலமாக அமெரிக்கா முழுதுமே வெறுப்பு, அதை சார்ந்த குற்றங்களுக்கு கடும் தண்டனை வேன்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதில் நியுஜெர்ஸி மிக கடுமையான மசோதா ஒன்றை கொன்டு வந்தது. அவசரமாக ஒரு தற்கொலை நிகழ்ந்த உடன் கொண்டு வரப்பட்ட மசோதா. நான் என்றும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரி இல்லை என்பதைக் காட்ட , மிக அதிக அதிகார மையம் கொண்ட அவர்கள் அமைப்பை மகிழ்ச்சிப்படுத்த, ஒரு பக்கம் அவர்கள் திருமணத்தை எதிர்த்த ஆளுனர், அடுத்த தேர்தலை மனதில் நிறுத்திக் கொண்டு வந்த மசோதா. இது இன்னும் சட்டமாக்கப்படவில்ல என்பதே இதில் விவாதிக்க இன்னும் நிறைய விஷயம் இருக்கிறது, இன்னும் சீர்படுத்த வேண்டும் என்பதை காட்டும்.
 
வெறுப்பு சார்ந்த குற்றத்தை நிருப்பிப்பது கடினம். ஒருவரின் மனதில் நினைப்பதை எல்லாம் தண்டிக்க வேண்டுமானால், பெரும்பாலோரும் அனைவருமே குற்றவாளிகளாத்தான் இருக்க முடியும். நாம் எல்லாருமே எப்போதாவது ஒரு நேரம் ஏதேனும் ஒருகருத்தை சார்புடைத்தே இருந்திருப்போம். நான் இந்தியாவில் பிறந்தவள் என்பதால் இந்தியர்களிடம் என்னையும் அறியாமலே ஒரு சார்பு இருக்கக்கூடும். பலருக்கும், மத அமைப்புக்கள் சார்ந்த பலருக்கும் ஓரின சேர்க்கை தவறு என்றும் குற்றம் என்றும் ஒரு கருத்து உண்டு. ஒரு 18 வயது மாணவன், வளர்க்கப்பட்ட விதத்தில் பெற்றோரோ மற்றோரோ எந்த வகை பாலியல் விஷயத்தை பேச தயங்கும் ஒரு சமுதாய அமைப்பில் வளர்ந்த ஒருவனுக்கு இயல்பாகவே ஒரு அசவுகரிய எண்ணம் இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. தன் அறையில் யாரோ ஒருவர், 30 வயதுடைய ஒருவர், பல்கலை கழகத்தின் மாணவர் அல்லாத ஒருவர் வருவது ஒரு அசுவகரியத்தை தந்திருக்கலாம்.அந்த வயதுக்கே ஆன   ஒரு ஆர்வம் வேவு பார்க்க தூண்டி இருக்கலாம். இரவி செய்தது மிக பெரிய தவறு என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது,ஆனாலும் முகமூடி அணிந்து ஒருவர் எழுதுகிறார் என்றால், அவர் யாராக இருக்கும் என்றெல்லாம் ஊகிக்க கூடிய மனப்பான்மை நம்மிடையே உண்டு. ஒருவர் தன் அடையாளத்தை விரும்பி மறைக்க நினைக்கும் போது, அதை கழட்டி இவர் யாரென்று சொல்வதில் ஒரு பெரிய சாதனை உண ர்வோடு அணுகும் பழக்கம் இருக்கிறது, பாப்பராசிகளை அனுமதிக்கும் பழக்கமும் உண்டு. இல்லை என்றால் கிசுகிசுக்களும், ஜர்னலிசம் என்ற முறையில் அந்தரங்களை பத்திரிக்கைகள் கடை விரிப்பதிலும் என்ன ஒரு ஆதாயம் இருக்க முடியும்? பொதுவாழ்க்கைக்கு வந்த ஒருவருக்கு தனிப்பட்ட அந்தரங்கள் கூடாதென்று நினைக்கிற சமூகம், இன்னொரு பக்கம் அந்தரங்களை ஊடுருவது தவறு என்றும் சொல்கிறது.பாதிக்கபட்டவர்கள் வழக்கொன்றூம் தொடராத வகையில் எல்லாமே சரிதான் பலருக்கு.
 
விடுதியில் இருந்த பலருக்கும் இந்த ஆர்வம் இருந்திருக்கிறது. இரவி நான் வேவு பார்க்க இருக்கிறேன் என்று சொன்னபோது, விடுதி காவலர் முதல் அடந்த நிகழ்வை பார்த்த நண்பர்கள் பலருக்கும் இது தவறு என்றும் அதை தடுக்க வேண்டுமென்ற ஒரு நினைவு கூட வரவில்லை. இவர்களும் கூட ஒருவகையில் குற்றம் இழைத்தவர்கள்தான்.
 
தவறு செய்த பிறகு தோழிக்கு மீண்டும் தகவல் அனுப்பி காவலரிடம் பொய் சொல்ல சொன்னது, அவசரமாக குறுந்தகவல்களை அழிக்க முனைந்தது எல்லாமே ஒரு பயந்து போன ஒரு இளைஞனின் செயலைத்தான் காட்டுகிறது. ஆனால் சட்டத்தின் முன் இவை பார்க்கப்படுவது குற்றமாக. வீட்டிலே எதையானும் குழந்தைகள் உடைத்துவிடும்போது அவசரமாக துப்புரவு செய்து அன்னையிடம் இருந்து மறைக்க முயல்வது போல, ஆனால் குற்றவாளியாகப்பார்க்கப்படும் போது இவை பெரிய தவறுகளாக கணிக்கப்படும். இதனால்தான் சட்டத்துறை பேராசிரியர் ஒருவர், தற்கால இளைஞர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆனால் பெரும் குற்றவாளைகள் அல்லர் என சொல்கிறார். பெரிய கிரிமினல் குற்றவாளிகளுக்கு எதையேல்லாம் காவலர்கள் அணுகுவார்கள், எவை சட்டத்தின் பார்வையில் குற்றம் என்பது தெரியும். எனவே அதிக கவனமாக தொலைபேசியில் பேசுவதை, மின்மடலில் எழுதுவதை தவிர்ப்பார்கள்.
 
மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்த சைபர்புல்லியிங் வழக்கில், தருணின் முதல் சட்ட திருத்த உரிமையே மீறப்பட்டது. நிரூபணம் ஆகும் வரை அவர் நிரபாரதி என்று இல்லாமல், ஊடகங்கள் அவரை ஒரு வில்லனாக சித்தரித்தது. கிளெமெண்ட்டியின் ஆண் நண்பருக்கு டைலரின் கடைசி பெயரே கூட தெரிந்திருக்கவில்லை. உண்மையிலேயே டைலர் கிளெமென்டி அவமதிக்கப்பட்டதாக உணர்ந்திருந்தால், இரண்டாம் முறையும் தன் ஆண் நண்பரை வரவழைக்க வேண்டிய காரணம் என்ன? அப்படி வரவழைத்ததே அவர் ரவியால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவில்லையா என்ற கேள்விகளுக்கும், தற்கொலை செய்த போது இருந்த அவர் அம்மாவிற்கு எழுதிய கடிதம், மற்றும் முன்னரே தற்கொலைக்கு முயன்ற காரணங்கள் வெளியே வரக்கூடாது என்பதற்காகவே தற்கொலைக்காக ரவியும் ஒரு காரணம் என்பதை குற்றப்பட்டியலில் சேர்க்கவில்லை. ஆனால் தற்கொலைக்கு முன் 39 முறை இந்த ட்வீட் செய்தியை பார்த்தான் என்று சொல்கிறார்கள். மேலும் இரவியின் செய்தியை பார்த்தாயா என்ற நண்பர்களின் கேள்விக்கு, அதை புகைப்படமே எடுத்துவைத்திருக்கிறேன் எப்படியும் இவனை வழக்கில் மாட்டிவிட்டு பழி வாங்குவேன், இவனது பெற்றோர்கள் ஒரு செவன் லெவன் நடத்துபவர்களாகா இருக்க வேண்டும் என்றும் சொல்லியது எதையும் வழக்கில் ஆதாரங்களாக  வரவிடவில்லை. டைலருக்கும் இரவியின் மேல் ஒருவித காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கிறது, உண்மையில் இந்தியாவில் வந்தவர்கள் என்றால் செவன் லெவன் நடத்தபவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கூட சார்ப்பு நிலை உடையது. ஆனால் ஒரு தற்கொலை இதை அனைத்தையும் வெளியே வரவிடவில்லை.
 
நிறைய வாசகர்கள் மாய்ந்து மாய்ந்து இந்தியர்கள் அழுக்கான சாலையில் தோசை சாப்பிடத்தான் லாயக்கு என்றும், கால் சென்டரில் வேலை பார்ப்பதுதான் சரி என்றெல்லாம் எழுதியவர்களை எந்த அடிப்படையில் கைது செய்வது? இன்னும் சிலர் இந்திய சமுதாயத்தில் அழுவது, அதுவும் பொது இடத்தில் அழுவது ஆணுக்கு அழகல்ல என்அது சொல்லி வளர்க்கப்பட்ட ஒரு சமூக சிந்தனை உள்ள இளைஞனின், திமிரான சிரிப்பைப்பார் இதை முதலில் முகத்தை உடைத்து அழியுங்கள் என்றெல்லாம் எழுதியவர்களின் உணர்ச்சி மிகவும் அன்பு நிறைந்ததோ?
 
பலருக்கு இரவியின் பெற்றோர்கள் ஏன் பேரத்தின் மூலம் சிறைத்தண்டனையை குறைத்திருக்கலாமே, ஏன் வேண்டாம் என்று சொன்னார்கள் என்ற கேள்வி இருக்கிறது. உண்மையில் வெறுப்பு அடிப்படையில் இந்த தவறை செய்தேன் என  அவர்கள் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. ஒப்புக்கொண்டிருந்தால் ஓரினசேர்க்கையாளர்களை இரவி வெறுத்ததாக பதிவு செய்திருப்பார்கள். அது வாழ்நாள் முழுதும் நிலைத்திருக்கும்.எத்தனையோ பேர் தினமும் நிறைய விஷயங்களை சொல்கிறோம். அவற்றை நடத்துவதில்லை. கோபம் அதிகமாக இருக்கும் போது நிறைய பேர் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று சொல்வார்கள் சிலருக்கு இந்தியர்களை, சிலருக்கு ஆப்பிரிக்க அமெரிக்கர்களை, ஐரிஷ் காரர்களுக்கு இத்தாலியரை கிறித்துவருக்கு யூதர்களை பிடிக்காமல் போகலாம். பிடித்துத்தான் ஆகவேண்டும் என்பதும் இல்லை. சகிப்புத்திறன் இருந்தால் போதும்.வெளிப்படையாகவோ, எழுத்தின் மூலமாக பயமுறுத்தல்கள் செய்வதுதான் சட்டப்படி குற்றம் ஆனால் நியுஜெர்ஸியின் சட்டம் நினைப்பதே குற்றம் என்கிறது. நினைவிற்கெல்லாம் தண்டனை கொடுத்தால் ஒருவர் கூடசிறைக்கு வெளியே மிஞ்ச மாட்டார்கள்.
 
இரவியை விசாரணை செய்ய காவலர்கள் கொண்டு சென்றபோது பெற்றோரிடம் எதுவும் சொல்ல வில்லை, சொல்லத்தேவையில்லை என்றாலும் கூட வீட்டில் இருந்த அன்னையிடம் விசாரணைக்காக அழைத்து செல்கிறோம் என்று சொல்லி இருக்கலாம். வழக்கறிஞர் தேவையில்லை என்று சொன்ன இரவியின் தந்தை வந்த பின்னும், உங்கள் பிள்ளை வழக்கறிஞர் தேவையில்லை என்று சொல்லிவிட்டார் நீங்கள் தலையிட தேவையில்லை என்றெல்லாம் சொன்னது சட்டப்படி சரியானாலும் மனிதாபிமான அடிப்படையில் தவறு. அதை நீதிமன்றத்துக்குள் அனுமதிக்க இயலாமல் இரவியின் வழக்கறிஞர் வாதாடி இருக்க வேண்டும்.
 
இரண்டாம் முறை பார்ட்டி என்றெல்லாம் சொன்னாரே தவிர எதுவும் நடக்கவில்லை.சொன்னதற்கே தண்டனையா? எல்லா கிரிமினல் வழக்கிலும் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லாமல் குற்றம் நிரூபணமாக வேண்டும்.அ ப்படி எதுவும் இல்லை, அரசு தரப்பின் சாட்சியே கூட இரவிக்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது வெறுப்பு உணர்ச்சி இருக்கவில்லை என்றுதான் சொன்னார். இதற்கு குற்றவாளியாக தீர்ப்பு சொன்ன ஜூரிக்கும் ஆசிய இந்தியர்கள் மீது காழ்ப்பு இருந்திருக்க வேண்டும். இப்போதெல்லாம் நியுஜெர்ஸியில் இந்த காழ்ப்பு உணர்ச்சி அதிகரித்துக்கொண்டே போகிறது. அதிலும் இந்தியர்களுக்கிடையே இருக்கும் பலவகைக்  குழுமங்கள், எதிலும் ஒன்றுபடாமல் சுயநலவாதிகளாக இருப்பது இந்த வகை வழக்குகளை எளிதாக்குகின்றன ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞன் எல்லா விலையுயர்ந்த காரை ஓட்டி வரும் போது நிறுத்தி பரிசோதிக்கும் காவலர்கள், ஆப்பிரிக்க அமெரிக்க பெயர்த்தியை வழிநடத்தி சென்ற ஒரு காகேசியன் தாத்தாவை கைது செய்து குழந்தை கடத்தலுக்காக விசாரணை செய்த காவலர்கள், அதை காவல் நிலையத்துக்கு தொலைபேசி சொன்ன பெண் என எல்லாரையும் கூட இங்கே காழ்ப்பு உணர்ச்சியின் அடிப்படையில் கைது செய்ய வேண்டும்.
 
பெரும்பாலான சிறைகள் இங்கே தனியாரால் நடத்தப்படுகின்றன. ஒரு சிறைக்கதைக்கு 50,000 முதல் 75,000 வரை அரசு வழங்குகிறது. அதிலும் குற்றவாளிகள் மிகவும் வன்முறை இல்லாதவராக இருந்துவிட்டால் செலவும் குறைவு. எனவே தான் சீர்திருத்தங்களைவிட சிறைக்கு அனுப்புவதே பெரிதென்றாகிறது. இரவி செய்த குற்றத்திற்க்கு தகுந்த தண்டனை அளிப்பதில் தவறே இல்லை, தண்டனை அளிப்பது நியாயமும் கூட. இன்னொருவர் அந்தரங்கத்தில் அத்துமீறுவதை சந்தோஷமாக செய்யும் பலருக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும். ஆனால் தேவையில்லாத குற்றத்தை சுமத்தி நிரூபித்து, அதற்காக 10 வருட சிறை தண்டனை அளிப்பதெல்லாம் தவறு. இன்னொரு மாணவனை சிறைக்கு அனுப்புவதால் எந்த பிரயோசனமும் இல்லை, அதற்கு மாறாக சமூக சேவை செய்ய நிர்பந்திர்க்கலாம். நினைவுகளுக்கு கூட வழக்கு பதிவு செய்தார், நாளை இரவியின் அடிப்படை உரிமையாக மேல்முறையீட்டுக்கூட இன்னொரு வழக்கு பதியலாம்.
 
நம் ஊரில் இலஞ்ச ஊழல்கள் கோரபற்கள் காட்டி சிரிப்பதுபோல சித்தரித்தால் இங்கே சிங்காரித்து இனிய சிரிப்பை கூட்டி நடனமாடும் மாது. எத்தனை வழக்குகள் நீதிமன்றமே வரமால் போயிருக்கின்றன? ஆனால் இது சிறிய வழக்கு, தற்கொலை நடக்காமல் போயிருந்தால் வெளியே விவரம் கூட வந்திருக்காத ஒரு செய்தியை பெரிதாக்கின ஊடகங்கள், ஓரின சேர்க்கையாளர்கள் அதிகார மையம் என எல்லாருக்குமே வெற்றிக்கான வாழ்த்துகள். இனி அடுத்த பலிகடாவை நோக்கி செல்ல வாழ்த்துகள்.
 
விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள வெள்ளைமாளிக்கைக்கான விண்னப்பத்தில் கையொப்பம் இடுங்கள்.
 
Petition Site: 
 
         Short URL: http://wh.gov/NM1
         Long URL: https://wwws.whitehouse.gov/petitions/!/petition/address-fact-media-driving-justice-system’s-decisions-18-year-old-rutgers-student-dharun-ravi-not/jqlNR9lP

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 21, 2012 @ 10:52 pm