வாழைப்பூ உசிலி

 

 
தேவையான பொருட்கள்
 
வாழைப்பூ- 1
கடலைப்பருப்பு- 1 டம்ளர்
மிளகாய்வற்றல்- 3 
காயம்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு 
 
செய்முறை:
 
1. வாழைப்பூவை இலைகளை நீக்கி ஒவ்வொரு பூவிலும் உள்ளே இருக்கும் கள்ளனை நீக்கி பூக்களாகச் சேர்த்து பொடியாக நறுக்கி 2 டீஸ்பூன் மோர் கலந்த நீரில் போடவும்(கறுக்காமலும் கசக்காமலும் இருக்கும்).
 
2. பிறகு வாழைப்பூ ஊற வைத்த தண்ணீரை அலசி விட்டு 1 டம்ளர் நீர் விட்டு வேக வைக்கவும்.
 
3. கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 
 
4. ஊற வைத்த பருப்புடன் உப்பு, காயம், மிளகாய்வற்றல் போட்டு நற நறவென்று அரைத்து ஒரு வாணலியில்(மைக்ரோவேவ் அவனில் 4 நிமிடங்கள்) வேக வைத்து எண்ணெயிட்டு உசிலியாக உதிர்க்கவும். 
 
5. வெந்த வாழைப்பூவையும் உசிலியையும் ஒன்று சேர்த்து சிறிது எண்ணெயிட்டு கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட சுவையான வாழைப்பூ பருப்புசிலி தயார்.

தொடர்புடைய படைப்புகள் :

2 thoughts on “வாழைப்பூ உசிலி

 • August 5, 2012 at 5:48 am
  Permalink

  பெண்களுக்கு உண்டான விஷயங்கள். ஆண்களும் செய்யலாம். ரொம்ப ஈசியா தான் தெரியுது. இதை உணவாக சாபிடலமா, இல்லை தொட்டுக்க பயன்படுத்த வேண்டுமா

  Reply
  • August 5, 2012 at 12:43 pm
   Permalink

   வாழைப்பூவை அடை, வடை, உசிலி, மசியல், குழம்பு, கூட்டு என்று வித விதமாகப் பயன்படுத்தலாம். மிகவும் சுலபமான முறையில் செய்யக் கூடிய வாழைப்பூ உணவுகளை உங்கள் மனைவிக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் நீங்களே செய்து அசத்தலாமே.

   Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 29, 2012 @ 11:56 pm