கடல் – விமர்சனம்

’பாவம்ன்னா என்ன?’

 
– நீங்க நல்லவரா கெட்டவரா பாணியில் இருக்க வேண்டும் என்று ரூம் போட்டு யோசித்து இப்படி ஒரு டயலாக் வருகிறது படத்தில்.
 
மணிரத்னம் படமாச்சேன்னு முதல் காட்சியிலேயே நம்பி வந்து உட்கார்ந்தோம் பாருங்க.. நாங்க தான் அது என்று பதில் சொல்லியிருக்க வேண்டும்.
 
ராஜீவ்மேனன் இயக்கிய ‘மின்சாரக் கனவு’ திரைப்படத்தில் கடைசி காட்சியில் பாதிரியாராகிப் போவார் அரவிந்த்சாமி. அதே மாதிரி, அதே இளமையோடு இந்தப் படத்தில் பாதிரியார் வேடத்தைத் தொடர்ந்திருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு ராஜீவ் மேனன்.
 
kadalசிலர் முழ நீள வசனம் வைத்து நாடக பாணியில் படம் எடுத்துத் தொலைப்பார்கள். சிலர் முழுக்க முழுக்க காட்சிப் படுத்துதலிலேயே கதையை புரிய வைத்து விடுவார்கள். மணிரத்னம் இது இரண்டையும் தாண்டி புனிதமானவர். காட்சிப் ‘படுத்தல்’களில் படுத்தி எடுத்து விடுவார். இருட்டிலேயே காட்சிகளை நகர்த்துவது.. வெளிச்சம் வேண்டுமானால் ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி போல விளக்கை அணைத்து அணைத்து கண்ணை நோகடிப்பது… ‘இப்படியே நேரா போய் வலது பக்கம் திரும்புங்க’ என்று சிம்பிளாக முடிய வேண்டிய வசனத்தை.. ‘போகணும்…. போகணும்.. நேரா..’ ‘ஏன்?’ ‘திரும்பணும்’. ‘எங்க?’ ‘ரைட்ட்ட்டிலே’ என்று வெகு மெல்லிய குரலில் காதில் ஹெட்ஃபோன் வெச்சு வசனத்தைக் கேட்கவிரும்பினாலும் காதில் தப்பித் தவறிக்கூட விழுந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடம் படம் எடுப்பவர். மீறி வசனத்தை ஒலிப்பதிவில் வேகமாகப் பேசிவிட்டால் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கண்ணைக் காட்டி விடுவார் போல மணி. அவர் வசனத்தைத் தாண்டி படு வேகமாக இ(ம்)சையைக் கூட்டி விடுவார்.
 
கடல் திரைப்படத்தில் ஆரம்ப காட்சியில் அர்ஜூன் படு ஜோவியலாக அறிமுகமாகிறார். அந்த ஓரிரு காட்சிகள் மட்டுமே படத்திற்கு காமெடிக் (?!) காட்சிகள். அதன் பிறகு படம் முழுக்க சஹாரா பாலைவனம் தான். அம்புட்டு வறட்சி – பல காட்சிகளில் கடல் தண்ணீரைக் காட்டியும்!
 
ஆரம்பக் காட்சியிலேயே அர்ஜூன் கையும் களவுமாக அரவிந்த்சாமியிடம் மாட்டிக் கொண்டு ‘என்னை வெளியிலே மாட்டி விட்டுடாதே’ என்று

arjun

 கெஞ்சுகிறார். அடுத்த காட்சியிலேயே அரவிந்த்சாமியைப் பிடித்து ‘உன்னை பழிவாங்காமல் விட மாட்டேன்’ என்று சபதம் போடுகிறார். அதற்கு அடுத்த காட்சியில் தான் அரவிந்த்சாமி அர்ஜூனை மாட்டி விடும் காட்சி வருகிறது. பெட்டி படுக்கையோடு அர்ஜூன் மீண்டும் சபதம் போட்டு விட்டுச் செல்வதால் இதில் எடிட்டரின் பிழை இருந்திருக்க வாய்ப்பில்லை. டைரக்டரின் சொதப்பல் தான் இது. அதே போல அரவிந்த்சாமி வெஜிடேரியன் தான் சாப்பிடுவார் என்று ஆரம்பத்தில் சொல்லி விட்டு பிறகு ஒரு காட்சியில் அவருக்கு சிக்கன் பிரியாணி வாங்கிச் செல்வது போல ஒரு காட்சி.
 
கார்த்திக் – ராதா ஜோடி அலைகள் ஓய்வதில்லையில் நடித்திருந்ததை (?!) விட அவர்களது வாரிசுகள் இதில் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். 
 
arvindபடத்தில் அதிக மெனக்கெடு ராஜீவ்மேனனுக்குத் தான். அதே கடலைச் சுற்றி தான் காட்சிகள் என்றாலும் பிண்ணிப் பெடலெடுத்திருக்கிறார். ராஜீவ் மேனனிம் முழு உழைப்பும் வீண்!x`
 
சர்ச்சுக்குள் பாதிரியாரை அடித்துத் துரத்துவது, இயேசு பிராணின் புகைப்படத்தை தூக்கி எறிய முற்படுவது என்று நிறையக் காட்சிகள். நல்லவேளை.. முழுப்படத்தையும் தடை செய்யச் சொல்லி சம்பந்தப்பட்ட மத அமைப்புகள் யாரும் கிளம்பி வரவில்லை.
 
ஏ.ஆர். ரஹ்மானுக்கு ரோஜா படக்காலத்தில் கொடுத்த அதே இருபத்தைந்தாயிரம் ரூபாய் சம்பளத்தை தான் மணி இன்னும் கொடுத்துக் கொண்டிருப்பாரோ?! பின்னணி இசை வழக்கம் போல கடும் இரைச்சல்!
 
கதை, திரைக்கதை, வசனம் ஜெயமோகன் என்று டைட்டிலில் பார்த்த நியாபகம். இதெல்லாம் படத்திலே இருந்திச்சா?! அடப்பாவிகளா, கண்ணுலேயே காட்டலை!?
 
கடல் – குழம்(ப்)பிய குட்டை!

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “கடல் – விமர்சனம்

 • February 10, 2013 at 11:31 am
  Permalink

  கதை, திரைக்கதை, வசனம் ஜெயமோகன் என்று டைட்டிலில் பார்த்த நியாபகம். இதெல்லாம் படத்திலே இருந்திச்சா?! அடப்பாவிகளா, கண்ணுலேயே காட்டலை

  அட்டகாசம்.. இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்,

  கே.எஸ்.பாலச்சந்திரன்

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 1, 2013 @ 7:38 am