கத்தி இசை – ஒரு பார்வை

vijay-samanthaவிஜய் – முருகதாஸ் – அனிருத் என்று பெரிய எதிர்பார்ப்பை கிளப்பினாலும், இதுவரை கொஞ்சம் கொஞ்சம் கேட்டிருந்த செல்ஃபி புள்ள, அப்புறம் செல்ஃபி புள்ள டைப்புலயே ஒரு ஹிந்தி பாட்டு, அந்த ராப் பிகினிங் வர்ற பாட்டு இதெல்லாம் வெச்சு கொஞ்சம் காதுக்கு கத்தியான ஆல்பமுன்னு ஒரு எண்ணம் இருந்தது. ஆனா, இன்னிக்கு நிதானமா கேட்டப்ப பாடல்கள் ரொம்ப unconventionalஆ பட்டுது. எனக்கு தெரிஞ்சு எந்த பாட்டுமே ரெகுலர் பல்லவி – இண்டர்ல்யூட் – சரணம் ஃபார்முலாவில இல்லை. பாடலோட ரிதமும் ஏத்தி இறங்கி போகுது. அனிருத் பயப்படாம நிறைய முயற்சி செஞ்சிருக்கார்.

1) பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா – கடல் மகுடியோட கசின் பிரதர். அது பிடிக்கிறவங்களுக்கு இதுவும் பிடிக்கும். எனக்கு பிடித்தது. ராப் ரொம்ப தமிழுக்காக வளைச்சமாதிரி இல்லாம, ஒரு ஃப்ளோ இருந்தது.

2) பாலம் – கொஞ்சம் ஹிந்தி லிரிக்ஸோட வர்ற இந்த பாட்டு ஒரு டீசண்ட் ட்யூன். சங்கர் மஹாதேவனோட கமர்ஷியல் பாடல்களுக்கான வழவழ கொழகொழ குரல்ன்னாலும், ஷ்வேதா மோகன் கலக்கல். எனக்கு ஆல்டைம் ஃபேவரைட் பெண் பாடகி சுஜாதா. ஷ்வேதா சுஜாதாவின் வாரிசு. பாடுவதிலும்.

3) நீ யாரோ – எனக்கு ஆல்பம்லயே பிடிச்ச பாட்டு இதுதான். ஒரு understated ஹீரோயிசம், பில்டப் இருக்கு பாட்டுல. பாபால “ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்’ பாட்டு டைப்புல இருக்கு. எனக்கு ஜேசுதாஸின் சற்றே முதிர்ந்த குரல் மிகவும் பிடிக்கும். ’காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்’ என சாதனா உருகினாலும் சரணத்தில் ஜேசுதாஸ் ‘நில்லாத காற்று’ என ஆரம்பிப்பதற்காக காத்திருப்பேன். ’கண்ணாமூச்சி ஏனடா’விலும் சித்ரா வெர்ஷனை விட அதிகம் தெரியாத ஜேசுதாஸ் வெர்ஷனே என் ஃபேவரைட்.
இன்னொன்னு இந்த பாட்டு படத்துக்கு ஒரு சீரியஸ்னெஸ், என்னவோ கதை இருக்குப்பான்னு ஒரு க்யூரியெஸ்னெஸ் தருது.

4,5) 2 தீம் ம்யூசிக்கும் ஜோர். இரண்டுமே ஸ்கிப் செய்யத் தேவையில்லாத லெவலில். அதுவும் வில்லனின் தீம் அடிபொளி.

6) செல்ஃபி புள்ள – சொல்லத்தேவையே இல்ல. அல்ரெடி ஹிட். எனக்கு இந்த உம்மா, கேமரா க்ளிக் சவுண்டு ஓவரா யூஸ் பண்ணாப்ல ஒரு சம்சயம். Regardless, செம பெப்பி பாடல்.

7) ஆத்தி – அக்மார்க் அனிருத் ஸ்டைல். கொஞ்சம் 3 தீம் ம்யூசிக் சாயல். பிக்சரைசேஷன் இன்னொரு லெவலுக்கு பாட்டை கொண்டு போயிருக்கு (வீடியோ டீசர் பார்த்துடுங்க)

பொதுவா, வளர்ற கம்போசர்ஸ் பெரிய ஸ்டார்களுக்கு ம்யூசிக் போடுறப்ப சிலசமயம் தடுமாறிடுவாங்க. அவங்களோட இயல்பான ஃப்ளோ இருக்காது. இமான் கூட 1,2 பாட்டு தவிர ஜில்லாவில தடுமாறினாப்ல தான் இருந்தது. ஆனா, அனிருத் எதையுமே சட்டை செய்யாம அவர்பாட்டுக்கு ஜாலியா இசையமைச்ச மாதிரி இருக்கு. முருகதாஸும் “இப்ப ட்ரெண்ட் மாறிடுச்சு. இந்த பையன் என்னவோ பண்றான்”ன்னு விட்டுட்டாப்ல தான் இருந்தது. எனக்கு இன்னொரு ஆச்சர்யம் என்னன்னா படத்துல விஜய்க்கு இண்ட்ரோ பாட்டே இல்லை. எனக்கு தெரிஞ்சு நாளைய தீர்ப்புல கூட இண்ட்ரோ பாட்டு இருந்தது. இது ஒரு சின்ன போல்ட் ஸ்டெப் தான்.

இளங்கன்று பயமறியாது. Way to go & அனிருத் !

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : October 17, 2014 @ 12:04 am