2010 பாக்யராஜ்
தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகை சோனா. UNIQ Productions என்ற பேனரில் ‘2010 பாக்யராஜ்’ என்ற புதிய படத்தை தயாரிக்கிறார். முதன்முறையாக ப்ரேம்ஜி அமரன் கதாநாயகனாக அவருக்கு ஜோடி மும்பை மாடல் அங்கிதா. காமெடி வில்லன்ககள் வின்செண்ட் அசோகன் மற்றும் ஸ்ரீதர் ராவ்.
இந்த படத்தை திருமலை ராஜன் இயக்குகிறார். இவர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இசை யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் வாலி.
இது ஒரு பாவப்பட்ட ஒரு மனிதனின் யதார்த்த கதை. 2010ல் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை நகைச்சுவையோடு சொல்கிறார்கள். வழக்கமாக, திரில்லார் கதைகளில்தான் சீட் நுனிக்கே கொண்டு வருவார்கள், ஆனால் இதில் கொஞ்சம் வித்தியாசமாக காமெடி கதையில் முயற்சித்திருக்கிறார்கள்.
இப்படம் மே 3ம் வாரத்தில் திரைக்கு வருகிறது.
என்ன கொடுமை பிரேம்ஜி இது.