மேல் நாட்டு ஜோதிடம்
நாம் நமது தமிழோவியத்தில் ஜோதிடப் பாடங்கள் (நீங்களும் ஜோதிடர் ஆகலாம்) சுமார் 53 பகுதி வரை எழுதி இருந்தோம். இது வாசகர்களின் வரவேற்பை நன்கு பெற்றிருந்தது. சில வாசகர்கள் ”இன்னும் எழுதக் கூடாதா?” என்று கேட்டிருந்தனர். எழுதலாம். ஆனால் அதற்கு அவசியம் இல்லை. நமது ஜோதிடமானது கடல் போன்றது. அதை முழுவதும் எழுதுவது என்பது இயலாத காரியம். நாம் ஜோதிடத்திற்குத் தேவையான அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்துவிட்டோம். அதிலிருந்து மற்ற நூல்களைப் படிப்பதும், படித்துப் புரிந்து
கொள்வதும் எளிது. நாம் எந்தெந்த நூல்களைப் படிக்க வேண்டுமென்றும் எழுதி யிருந்தோம். ஆகவே மேலும் படிக்க விருப்பமுள்ளவர்கள் அந்தந்த நூல்கல்ளைப் படிக்கலாம்.
நமது ஜோதிடத்தைப் போல் மேல் நாட்டு ஜோதிடமும் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று. இது ஜோதிடர்களுக்கு நிச்சயமாக உதவும். இதை மனதில் கொண்டு மேல் நாட்டு ஜோதிட முறைகளையும் பாடமாக எழுத உள்ளோம். இதுவும் தெரிந்து இருப்பது நல்லதுதானே! தமிழ்மொழியில் இதுவரையில் நமக்குத் தெரிந்தவரையில் மேல்நாட்டு ஜோதிடத்தைப் பற்றிப் புத்தகங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதை வாசகர்கள் எப்படி வரவேற்கிறார்கள் எனப்பார்ப்போம்.
தமிழ்ப் புத்தாண்டிலிருந்து மீண்டும் சந்திப்போம்.