சுறா

அறிவிப்புகள்

1.இந்தத் திரைப்படத்தில் விஜய் செய்யும் சாகச சண்டைக் காட்சிகளை யாரும் வீட்டில் செய்து தங்களைக் காயப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, விஜய் ஒற்றை ஆளாகக் கடலில் நீந்தி வருவது, கப்பலிற்குக் கப்பல் தாவுவது, கட்டிடத்திற்கு கட்டிடம் தாவுவது ஆகியனவற்றைச் சொல்லலாம்.

2.புதுமையான காட்சிகளோ விஜய்யிடம்  கெட் அப் மாற்றங்களோ இருக்குமென்று அல்ப ஆசைகள் கூட இல்லாமல் இந்தப் படம் பார்க்கப் போக வேண்டும்.

3.படம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் புத்தியைத் தீட்டவோ லாஜிக் பார்க்கவோ கூடவே கூடாது.

4.வேட்டைக்காரன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் அருகிலேயே 'சுறா' ஓடும் திரையரங்கிற்குப் படம்  பார்க்க செல்லக் கூடாது. இடைவேளையின் போது திரையரங்கு மாறிப் போய் விட்டால் எந்தத் திரைப்படம் என்று குழப்பமாக இருக்கும்.

5. +2 பரிட்சையில் தவறியவர்கள் சுறாவை பார்த்து, தற்கொலை எண்ணத்தை கைவிட்டு செப்டம்பர் பரிட்சைக்கு படிக்கலாம்.

விமர்சனம்

கதை : குப்பத்து மக்களுக்கு மழையில் ஒழுகாத வெயிலில் எரியாத வீடுகளைக் கட்டித் தருவதையே தன் வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கிறார் விஜய். அதரப் பழசு.

விஜய் : துடிப்பும் ஆடலும் நன்றாக இருக்கிறது. இது ஐம்பதாவது படம், பேர் சொல்லும் படமாக வந்திருக்க வேண்டியது ஹீரோயிசப் பூச்சுக்களால் பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்.

தமன்னா : தமன்னா டூயட் பாடி ஆடவும் கவர்ச்சி விருந்தளிக்கவுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்

வடிவேலு : அனேக இடங்களில் கடி, சில இடங்களில் பரவாயில்லை.

வில்லன் : வெறும் டம்மி பீஸ்.

இசை :  'பொம்மாயி' பாடல் மட்டும் தேறுகிறது.

கொசுறு : கமர்சியல் பார்முலாவில் எடுத்த சில படங்கள் வெற்றி பெற்றதை நினைத்து அதே பாணியில் படங்களைத் தருவது ரசிகர்களை வெறுப்பிற்கும் சோதனைக்கும் உள்ளாக்கும். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த 'சோட்டா மும்பை' திரைப்படத்தையே 'சுறா'வாக ரீமேக்கியிருக்கிறார்கள்.

இயக்குனர் ராஜ்குமார் : பாவம் பொழச்சி போறார்.. முதல் படம். அடுத்த முறை ஒழுங்க படம் எடுக்கனும்னா..

தயாரிப்பாளர் : சங்கிலி முருகன். 11 வருடங்கள் கழித்து படம் எடுக்க வந்தவர். விதி வலியது.

'சுறா' படப் பாத்திரம் சுறாவிடம் நறுக்கென்று சில கேள்விகள்

1.மிஸ்டர் சுறா, நீங்க அறிமுகம் ஆகிற காட்சியிலே அவ்வளவு பெரிய கடலை எப்படி ஒத்தை ஆளா நீந்தி வர்றேங்க? இந்தப் படத்தோட ஹீரோ நீங்க, கடத்தல் பண்ணி பெரிய ஆளா வந்ததுக்குப் பதில் நீச்சல் போட்டியில் சாம்பியன் ஆகி பெரிய பணக்காரரா ஆகியிருந்தால் உங்க கிரேட் எகிறியிருக்கும்லே?

2. சுறா, படத்திலே ஒரு காட்சியிலே பயங்கரமா சண்டை போட்டுட்டு வில்லன் அடிபொடிகளை ஹாஸ்பிடலுக்கு அனுப்பிட்டு வில்லன் யாரு, எதுக்கு உங்களை அடிக்க வந்தாங்கனு யோசிக்க வேண்டிய நேரத்துலே நீங்க மட்டும் டையர்ட் ஆகாம 'வங்கக்கடல் எல்லை'னு பாட்டுக்கு மூணு பொண்ணுகளுடன் குத்து டான்ஸ் ஆடறேங்க? 

3.இடைவேளைக்குப் பிறகு கண்ணை மூடித் திறக்கிறதுக்குள்ளே பணக்காரர் ஆகிடறேங்க, கேன்டீனுக்குப் போயிட்டு லேட்டா வந்தவங்களுக்கு நீங்க எப்படி பணக்காரர் ஆனேங்கனு புரிய வச்சுருக்க வேண்டாமா?

4.இடைவேளைக்குப் பிறகு தமிழ் நாட்டுலே,கொளுத்துற வெயில்ல முழுக்கை ஷர்ட், அதிலும் கருப்பு உடை, அதுக்கு மேல ஜெர்கினுடன் வில்லன் ஆட்களைப் பந்தாடுறேங்களே, உங்களுக்கு வியர்க்கலையா? கஷ்டமா இல்லையா? 

5.படத்துலே உங்க அம்மாப் பாசத்தைக் காட்ட உடம்பு சரியில்லாத அம்மாக்கு மசாலா எல்லாம் அரைச்சு மீன் குழம்பு வச்சுக் கொடுக்கிறேங்களே? அதுக்குப் பதிலா ரசம் பண்ணிக் கொடுத்திருந்தா அவங்க சீக்கிரம் தெம்பாயிருப்பாங்களே.

6.பறந்து பறந்து பைட் பண்ணறீங்களே, உங்களுக்குச் சுளுக்குப் பிடிச்சிராது?
 

தொடர்புடைய படைப்புகள் :

8 thoughts on “சுறா

 • December 22, 2011 at 12:42 am
  Permalink

  Punching Review full of fun for a typical Funny Tamil Movie…good & sharp review..Mrs Gayathri Venkat..Keep Rocking..

  Reply
 • December 22, 2011 at 12:38 am
  Permalink

  oh….a punching review full of fun for a funny typical Tamil film…fed up of these sort of films…poor fans -their hard earned money spent on these non-sense movies…hope this review makes them sense that..SUPERB REVIEW PUNCH>>Mrs Gayathri Venkat..Keep Rocking like this..

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : May 17, 2010 @ 1:39 pm