கோவக்காய் சாதம்

தேவையான பொருட்கள்

கோவக்காய்-20
பெரிய வெங்காயம்-2
சாம்பார் பொடி-2 டீஸ்பூன்
நிலக்கடலை-ஒரு கைப்பிடி
எலுமிச்சைச்சாறு-1 டீஸ்பூன்
எண்ணெய்-2 டீஸ்பூன்
கடுகு-1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு-2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு-2 டீஸ்பூன்
சீரகம்-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு இணுக்கு
உப்பு-தேவையான அளவு

செய்முறை

1.சாதத்தை விறைப்பாக வடித்து ஒரு அகன்ற பாத்திரத்தில் ஆற விடவும்.
2.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு,வெள்ளை உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்து கொள்ளவும்.
3.பெரிய வெங்காயத்தையும் கோவக்காயையும் நீளமாக நறுக்கவும்.
4.தாளித்த பொருட்களுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
5.வெங்காயம் வதங்கினவுடன் கோவக்காயைச் சேர்த்து உப்பு, சாம்பார்பொடி போட்டு கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
6.இடையிடையே மூடியைத் திறந்து கிளறி விடவும்.தனியே வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு நிலக்கடலையை வறுத்து கோவக்காய் கலவையுடன் சேர்க்கவும்.
7.கோவக்காய் வெந்தவுடன் அடுப்பை அணைத்து எலுமிச்சைச்சாற்றை விட்டு ஆற விட்டு சாதத்துடன் கலக்கவும்.

கூடுதல் குறிப்புகள்

1.பயணங்களுக்கு வசதியான எளிமையான செய்முறை இது. கோவக்காயை வட்ட வடிவமாக நறுக்கியும் செய்யலாம்.
2.சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த காய் கோவக்காய். இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
3.கோவக்காயைச் சாம்பாரிலும் கூட்டிலும் சேர்த்தும் பயன் பெறலாம்.
4.காரம் குறைவாக இருந்தால் இட்லி மிளகாய்ப் பொடியைச் சிறிது சேர்த்து கோவக்காய் சாதத்துடன் கலக்கலாம். இந்த ருசி அருமையாக இருக்கும்.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “கோவக்காய் சாதம்

 • June 28, 2010 at 11:55 am
  Permalink

  Hi,
  I tried today. It became perfect.

  Keep it up.

  Thanks&Regards,
  Jasindha

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : May 20, 2010 @ 12:58 pm