குழிப் பணியாரம்

தேவையான பொருட்கள்

இட்லிமாவு- ஒரு கப்

தாளிக்க:

எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு- 2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்- 2
கறிவேப்பிலை- ஒரு இணுக்கு
காயம்- சிறிதளவு

செய்முறை:

1. அடுப்பை ஏற்றித் தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளித்து இட்லி மாவில் விடவும்.

2. பத்து நிமிடங்கள் ஊறிய பிறகு குழிப்பணியாரச் சட்டியைக் காய வைத்து எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூனால் மாவைக் குழிகளில் விட வேண்டும். பிறகு சிறிது எண்ணெய் விட வேண்டும்.

3. பணியாரம் வெந்த பிறகு திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும். சூடாகப் பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்

1. இதற்குத் தொட்டுக் கொள்ள மிளகாய்ப்பொடியும் தக்காளித்தொக்கும் நன்றாக இருக்கும்.

2. மாவில் மஞ்சள் தூள் சேர்த்தும் பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டும் செய்ய வித்தியாசமான சுவையாக அமையும்.

3. இட்லி, தோசையே சாப்பிட்டு அலுத்தவர்களுக்கு இது மாற்று இணை.

4. திடீர் விருந்தினரை அசத்தவும் சில நிமிடங்களிலேயே செய்து முடிக்கவும் ஏற்ற சிறந்த சிற்றுண்டி.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “குழிப் பணியாரம்

 • June 19, 2010 at 10:15 pm
  Permalink

  ”திடீர் குழிப்பணியாரம்” என்று குறிப்பிட்டிருக்கவேண்டும்:)
  அரை டீஸ்பூன் வெந்தயபவுடரும் சேர்த்து செய்தால் ஒரிஜனல்
  குழிப்பணியாரம்தான்!

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : May 31, 2010 @ 5:11 pm