வாழைக்காய் புட்டு

தேவையானவை

வாழைக்காய்- 2
உப்பு-தேவையான அளவு
காயம்- சிறிதளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்- 3
கறிவேப்பிலை- 5,6 இலைகள்

செய்முறை :

1. வாழைக்காயை நன்றாக அலம்பிக் கொள்ளவும்.

2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 டம்ளர் அளவிற்கு அல்லது வாழைக்காய் துண்டுகள் மூழ்குமளவிற்கு தண்ணீரை வேக வைக்கவும்.

3. வாழைக்காய் ஓரங்களைச் சிறிது நறுக்கி விட்டு 2 துண்டுகளாக நறுக்கி வென்னீரில் போடவும்.

4. வாழைக்காய் பாதி வெந்தும் வேகாத பதத்தில் எடுத்து ஆற விடவும். வாழைக்காய் சூடு ஆறினவுடன் தோலைச் சீவி விட்டு வாழைக்காய்ப்புட்டு அரிப்பில் துருவிக் கொள்ளவும்.

5. வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு, வெள்ளைஉளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிசம் செய்து கொண்டு. வாழைக்காய் துருவியதைப் போட்டு உப்பு போட்டு வதக்கவும்.

6. லேசாகத் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். துருவப்பட்டிருப்பதால் சீக்கிரம் அடிப்பிடிக்கவும் வாய்ப்பிருப்பதால் அடுப்பினருகிலேயே இருந்து கிளறி வரவும்.

7.காயம் போட்டு நன்றாகக் கிளறி விடவும். புட்டு வெந்தவுடன் உப்பு சரியாக இருக்கிறதா? புட்டு தயாராகி விட்டதா என்று சோதிதுக் கொண்டு வேறு பாத்திரத்திற்கு மாற்றி பரிமாறவும்.

கூடுதல் டிப்ஸ் :

1. ஒரே மாதிரி பொரியல் செய்து அலுத்தவர்களுக்கும் வித்தியாச சுவை விரும்பிகளுக்கும் இது அருமையான சைட் டிஸ்ஹ்.

2. வாழைக்காயைப் பிடிக்காதவர்களுக்குக் கூட புட்டு பிடிக்கும்.

3. இம்முறையில் செய்யும் வாழைக்காய் தோல் பொரியலுக்கு உதவாது.

4. வத்தக்குழம்பு, சாம்பார், மோர்க்க்குழம்பு போன்ற குழம்பு வகைகளுக்கு அற்புதமான பொரியல்.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “வாழைக்காய் புட்டு

  • July 13, 2010 at 2:08 pm
    Permalink

    தாளிக்கும் போது கொஞ்சம் கடலைப் பருப்பு ,நறுக்கிய வெங்காயம் +பூண்டு சேர்த்தால் இன்னமும் நன்றாக இருக்கும் .நான் இட்லி தட்டில் தோலோடு முழுதாக ஸ்டீம் பண்ணி விட்டு தோலை உரித்து விட்டு சீவிக் கொள்வேன் .

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 11, 2010 @ 7:46 pm