வாழைக்காய் பொரியல்

தேவையானவை

வாழைக்காய்- 1
சாம்பார்பொடி- 2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
காயம்- சிறிதளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. வாழைக்காயை நன்றாக அலம்பி, தோலைச் சீவி தனியே வைத்துக் கொள்ளவும்.
2. பிடித்த வடிவத்தில் வாழைக்காயைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
3. அடுப்பில் எண்ணெய்யிட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளைஉளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்து கொண்டு கடுகு வெடித்தவுடன் சீரகத்தைப் போட்டு வதக்கி விடவும்.
4. வாழைக்காய் துண்டுகளை தாளித்தவற்றுடன் போட்டு உப்பு போட்டு 1/4 டம்ளர் நீரிட்டு மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும்.
5. பாதி வெந்ததும் சாம்பார்பொடி, காயம் சேர்த்து திறந்து வைத்துக் கிளறி வரவும். அடிப்பிடிக்காமல் இருக்க எண்ணெய் இட்டு வரவும்.
6. வறுவலாகத் தயாரானதும் அடுப்பை அணைத்து விட்டு பொரியலை வேறு பாத்திரத்திற்கு மாற்றிப் பரிமாறவும்.

கூடுதல் டிப்ஸ்

1. சாதா நீரில் வேக வைப்பதை விட புளித்தண்ணீரைக் கரைத்து அதை விட்டு வேக வைத்து பொரியல் செய்தால் புளிப்பு வாழைக்காய் வறுவலாக ருசி அருமையாக இருக்கும். புளி நீரில் வேக வைத்தால் பொரியல் ஆக கூடுதல் நேரம் பிடிக்கும்.

2. உடல் எடை கூட விரும்புவோர் வாழைக்காயை உணவில் சேர்த்து வந்தால் எடை கூடும்.

3. வாழைக்காய் தோலைப் பத்திரப்படுத்தி அதிலும் பொரியல் செய்து அசத்தலாம்.

One thought on “வாழைக்காய் பொரியல்

  • January 24, 2013 at 9:27 pm
    Permalink

    காயம் என்பது பெருங்காயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது, நன்றி.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 15, 2010 @ 10:26 pm