அன்புமணியின் தமிழ்நாட்டு பற்று

சமீபத்தில் மாஜி மந்திரி திரு. அன்புமணி ராம்தாஸ் அவர்கள் ஒரு பொன் மொழி உதிர்த்துள்ளார். தமிழ் நாட்டில் உள்ள காவிரியையும், வைகையையும் இணைக்க முயற்சித்தால் அதை அவர் எதிர்ப்போம் என்று கூறியுள்ளார். காரணம் காவிரி வடதமிழ்நாட்டு நதியாம். வைகை தென் தமிழ்நாட்டு நதியாம். வட தமிழ் நாட்டுத் தண்ணீர் தென் தமிழ்நாட்டுக்குச் செல்லக் கூடாதாம்.

என்னே இவர்களின் தமிழ்ப் மொழிப்பற்று, தமிழ் நாட்டுப் பற்று  மற்றும் இன உணர்வு ! இவ்வேஷதாரிகள் பேசுவது தமிழ் நாட்டு உயர்வு பற்றியும், ஈழத்திலுள்ள தொப்பிள்கொடி உணர்வு பற்றியும். இவர்களா ஈழத்தமிழரின் வாழ்வுக்குகாக போராடப் போகின்றார்கள் ?

தமிழ்நாட்குள்ளேயே நதிகள் இணைப்பை தடுக்கும் இவர்களா, கர்நாடகத்திலிருந்தும், கேரளாவிலிருந்தும் தண்ணீரை கொண்டு வரப்போகிறார்கள் ? இவர்களைப் போன்ற வேஷக்காரர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு கொண்டு 2011ல் வரும் பொதுத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 16, 2010 @ 11:26 am