பாஸ் என்கிற பாஸ்கரன்

'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்'-இது பழமொழி. 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தைப் பார்த்தவர்களுக்கு இது நிஜ மொழி. மக்களைக் குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கும் பாஸ் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள். இப்படி ஒரு படம் பார்த்து எத்தனை மாதங்களாயிற்று? இப்படி குடும்பத்துடன் சிரிப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது? படத்தைப் பார்த்தால் புரியும் செய்தி. 

தொடக்கம் முதல் இறுதி வரை சிரிப்புக் களேபரம் தான். சீரியஸான கதை இல்லை. ஆர்யா காலையில் நண்பர் சந்தானத்துடன் அரட்டை, மாலையில் படம், இரவில் குறட்டை என்று எந்தக் கொள்கையும் இல்லாமல் பொறுப்பாக(!) வாழ்பவர். ஓராண்டு கழிந்தால் இவரது தங்கையே இவருடன் வகுப்பில் தேர்வு எழுதும் அளவிற்கு முப்பதிற்கும் மேற்பட்ட அரியர்ஸ். மனிதர் இருந்தும் சளைக்காமல் அரியர்ஸ் தேர்வு எழுதச் செல்கிறார். இவர் பார்த்து அசந்த நயனதாரா தேர்வு அறையில் பேராசிரியையாக வந்து பிட்டடித்தாவது பாஸாக வேண்டும் என்ற ஆர்யாவின் கொள்கைக்கு வேட்டு வைக்கிறார். ஆர்யாவின் அண்ணன் சுப்புவிற்கு நயனின் அக்கா விஜயலெட்சுமியுடன் திருமணமாகிறது. நயனைக் காதலியாக்கத் துடிக்கும் ஆர்யாவின் எண்ணம் நிறைவேறியதா? ஆர்யாவிற்கு ஏற்பட்ட தடைகள் என்ன? அவரது எதிர்காலம் என்ன ஆகின்றது? என்ற சிற்சில கேள்விகளுக்குக் கேலியும் கலாட்டாக்களும் கலந்து விடை கிடைக்கின்றது. 

ஆஹா ஆர்யா, சூப்பர்யா, நடிப்பும் காமெடியும் அட்டகாசமாக வருகிறது. அலை பாயுதே மாதவன் சொல்லும் டயலாக்கை நயனிடம்Arya, Nayanthara சொல்லப் போக டைமிங் மிஸ்ஸாகும் காட்சியின் வழிசல், ஐடியா தந்த சந்தானத்தின் காலைத் தொட்டுக் கும்பிடும் நக்கல் என்று படத்தில் பிழிய பிழிய காமெடியை அள்ளி வீசியிருக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோ சந்தானம், இவர் ஆர்யாவுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியில் திரையரங்கே அதிர்கிறது. 'கடன் வாங்க எவ்வளவு தூரம் வர வேண்டியிருக்கு பாரு' என்று சந்தானம் ஆர்யாவிடம் சொல்ல, 'கவலைப்படாதே மச்சி, கடனைத் திருப்பி வாங்க அவன் நடையா நடக்கணுமே' என்று கூற சிரிப்பில் அதிர்கிறது. 'பார்டன்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்கும் ஆர்யாவிற்கு அவ உன்னைப் பாடச் சொல்றா என்று சந்தானம் சொல்லும் எல்லாமே சிரிப்புச் சரவெடிகள். எப்படி இருந்த நயன் இப்படி ஆகிட்டாங்களே என்பது போல் பொலிவிழந்து போயிருக்கிறது நயனின் முகம். இருந்தாலும் நடிப்பில் பாஸாகி விடுகிறது அவரது முகம். ஆர்யாவின் சேட்டைகளை ரசிக்கும் நயனின் கண்கள் ஆர்யா பார்க்கும் போது வேறெங்கோ பார்ப்பது காதலிகளுக்கே உரிய அழகான கர்வம்.  

Arya Santhanamசன் 'அரசி' தொடரின் பிரதான வில்லன் சுப்பு இதில் ஆர்யாவின் அண்ணனாக அதகளம் பண்ணியிருக்கிறார். இவரது காதல்வயப்படும் காட்சிக்கு 'காளிதாசன்' பாடலின் பின்னணியைப் போட்டு காட்சியைக் கலக்கலாக்கியிருக்கிறார்கள். பன்முகத் திறமை வாய்ந்த சுப்புவைத் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டிவி தொகுப்பாளினியாகத் துடிக்கும் ஆர்யாவின் சகோதரியின் முகபாவம் பாராட்டிற்குரியது. 

'நான் கடவுள்' படத்தில் பயமுறுத்திய வில்லன் ராஜேந்திரன் பாஸாகாத தன் பையனைப் பாஸ் பண்ண வைக்கச் சொல்லும் அலும்பல்கள் அட்டகாசம். அண்ணியாக வரும் விஜயலெட்சுமி, நயனின் அப்பா சித்ரா லட்சுமணன், பார்வை இழந்த தன்னம்பிக்கை பெண், படிக்காத பையன் என்று அனைவரும் அசத்தல் ரகங்கள். 

லாஜிக் ஓட்டைகள் சில காட்சிகளில் இருந்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பதால் இயக்குனர் ராஜேஷை மனம் நிறையப் பாராட்டுவோம். காட்சியமைப்புகள், பாத்திரத் தேர்வுகள், ஒளிப்பதிவு, இசை என்ற அனைத்துப் பிரிவுகளிலும் அட்டகாசத்தையும் நேர்த்தியையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தெறித்திருக்கும் இந்தப் படத்தைக் குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “பாஸ் என்கிற பாஸ்கரன்

  • September 24, 2010 at 12:18 pm
    Permalink

    padam comedya irukku aana enna sms Gnabagm varuthu
    appateeyae sms part-2 paartha mathiri irukku . inee director ramesh sir (sms ,boss engira baskaran ) mathiri kudumbam ,oru kathal, anna kalyanam love itayal kest role enna ithu mathie pannunka rasigar yaamara koodathu

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 23, 2010 @ 11:37 am