Tamiloviam
ஜனவரி 1 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரையோவியம் : இன்னமும் பூப்பெய்தாத தமிழ்சினிமா!
- ச.ந. கண்ணன்
  Printable version | URL |

 

வழக்கம்போல இந்தவருடமும் தமிழ் சினிமா அசமஞ்சமாகவே இருந்துவிட்டது. விளைவு, நிறைய தோல்விப் படங்கள். கோடம்பாக்கத்தில் உலக சினிமா பற்றி வாய்கிழிய பேசுபவர்கள் அநேகம்பேர் இருக்கிறார்கள். ஆனால் இந்த வருடம் அந்த தரத்தில் வந்தது ஒரேயொரு படம்தான். சிலம்பாட்டம் தெனாவட்டு படங்களைப் பார்க்கும்போது இளம் நடிகர்கள் பணத்துக்காககவும் புகழுக்காகவும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கிவரத் தயாராக இருப்பது புலப்படுகிறது.

ரசிகனின் ரசனையை வளரவிடாமல் செய்வதிலும் தமிழ் சினிமாவுக்கு நிகர் தமிழ் சினிமாதான். ஹிந்தி சினிமாக்களில் பணியாற்றும் தமிழ் கேமராமேன்கள் சொல்வதுபோல இந்திய சினிமாவில் முதலிடம் வகிப்பது தமிழ் சினிமா அல்ல. ஹிந்தி சினிமாவே. மாதத்துக்கு ஒரு புதிய பரிட்சார்த்த முயற்சியை மல்லிகா ஷெராவத், பிபாசு பாசு போன்ற ஜிகினாக்களுக்கு இடையே நிகழ்த்திக்கொண்டிருக்கிறது ஹிந்தி சினிமா. ஆனால் இங்கே என்ன நடக்கிறது? நாளுக்கு நாள் தமிழ்சினிமாவின் பட்ஜெட் வளர்ந்து வருகிறது. ஆனால் தரமோ தினம்தினம் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.  ஃபேண்டஸி படமும் ஒழுங்காக எடுக்கத் தெரியாமல் சீரிய படமும் எடுக்கத் துணிவில்லாமல் ரெண்டாங்கெட்டானாகவே தமிழ் சினிமா இன்னமும் இருக்கிறது. ஆகவே பூபெய்திய திரைஉலகம் என்று என்னால் ஹிந்தி சினிமாவையே சுட்டிக் காட்ட முடிகிறது.

2008ன் ஒரே புதிய முயற்சி, சன் டிவி கோலிவுட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததுதான். அன்பே சிவம் படத்தை சரியாக மார்க்கெட் பண்ணவில்லை என்று கமல் கவலைப்படும் அளவுக்குத்தான் தமிழ்சினிமாவின் விளம்பர உத்திகளும் அதன் நிர்வாகமும் இருக்கின்றன. இந்த நிலையில் திண்டுக்கல் சாரதி போன்ற ஒரு படம் சிவாஜிக்கு இணையாக விளம்பரப்படுத்தப்படுவது நல்ல படங்கள் வீண் போகாது என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.

2008ல் குறிப்பிடத்தக்க தமிழ் சினிமா நிகழ்வுகள், சாதனைகள், வேதனைகளை பட்டியலிட்டுள்ளேன். ஒரே பிரச்னை, தமிழ் சினிமாவைப் பற்றிச் சொல்லும்போது பாதி அரசியலும் கலந்துவிடுவதை என்னால் என்ன முயன்றும் தவிர்க்கமுடியவில்லை.

*

Subiramaniapuram

உலக சினிமா - சுப்ரமணியபுரம்

கழுத்தறுப்பு - குசேலன், பீமா, குருவி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், அறை எண் 305ல் கடவுள், முணியாண்டி
விலங்கியல் மூன்றாண்டு, ஏகன், சத்யம்,

சிறந்த நடிகர் - சமுத்திரக்கனி (சுப்ரமணியபுரம்)

நடிகை - பார்வதி (பூ)

சிறந்த இயக்குநர் - சசிகுமார் (சுப்ரமணியபுரம்)

செயல் வீரர்கள் - மிஷ்கின் (அஞ்சாதே), வெங்கட் பிரபு (சரோஜா)

வருக வருக - இயக்குநர் சசிகுமார், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (சுப்ரமணியபுரம்), இயக்குநர் விஜய் (பொய் சொல்ல போறோம்)

பளிச் முகங்கள் - சமீரா ரெட்டி, ஸ்வாதி, சுனைனா, பியா, சரண்யா மோகன்

சிறந்த இசை - ஹாரிஸ் ஜெயராஜ், ஜேம்ஸ் வசந்தன்

சிறந்த பின்னணி இசை - ஜேம்ஸ் வசந்தன்

சிறந்த பின்னணிப் பாடகர் - ஹரிஹரன் (நெஞ்சுக்குள் பெய்திடும், கல்லை மட்டும் கண்டால்)

பாடகி - தீபா மரியம் (கண்கள் இரண்டால்)

நம்பிக்கைக் குரல்கள் - ரவி, ரேணு (ஏர்டெல் சூப்பர் சிங்கர்), திவ்யா (பாடும் ஆபிஸ் - இன்ஃபோசிஸ்), அனகா (அமிர்தா டிவி)

சிறந்த கவிஞர் - தாமரை (கண்கள் இரண்டால், நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை)

சிறப்பாகப் படமாக்கப்பட்ட பாடல்கள் - கண்கள் இரண்டால், நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

புயலில் காணாமல் போன பாடல்கள்  - தோழியா என் காதலியா, உன் தலைமுடி (காதலில் விழுந்தேன்)

சிறந்த ஒளிப்பதிவு - கதிர் (சுப்ரமணியபுரம்)

எடிட்டிங் - ராஜா முகமது (சுப்ரமணியபுரம்)

முதலுக்கு மோசமில்லாத படம் (தயாரிப்பாளருக்கும் ரசிகர்களுக்கும்) - சந்தோஷ் சுப்ரமணியம்

சிறந்த விமரிசனங்கள் - பத்ரியின் தசாவதாரம், சாரு நிவேதிதாவின் சுப்ரமணியபுரம்,

குதூலகல விமரிசனம் - விகடனின் நாயகன், லக்கிலுக் விமரிசனங்கள்

அதிர்ச்சி விமரிசனம் - குசேலனுக்கு ஞாநி வக்காலத்து வாங்கியது (ஞாநிக்கும் அடி சறுக்கும்!)

ஏமாற்றம் - சக்கரைக்கட்டி பாடல்களின் படமாக்கம், சவுந்தர்யா ரஜினி கம்பெனியின் கிராபிக்ஸ், வெள்ளித்திரையில் சொதப்பிய  விஜி, பசுபதி தேர்ந்தெடுக்கும் படங்கள், சோடை போன பாவனா,  தெனாவட்டுக்கு கால்ஷீட் கொடுத்த ஜீவா, ஸ்ரீகாந்த் தேவாவை விடவும் மோசமாக இசையமைத்துக்கொண்டிருக்கும் ஜி.வி. பிரகாஷ், சிறு பிள்ளைகள்போல அடித்துக்கொண்ட யுவன்ஷங்கர் ராஜா - செல்வராகவன், ஹாரிஸ் ஜெயராஜ் - கெளதம் மேனன் மற்றும்  மேடைக்கச்சேரியை சினிமா என்று காட்டிய 'மார்கழி ராகம்'

2008லும் எழாதவர்கள் - அருண் குமார், ஷாம், ரியாஷ் கான், விக்னேஷ், அப்பாஸ், மோகன், ப்ரேம், சரத் குமார், விஜய் காந்த், சந்தியா, திவ்யா ஸ்பந்தனா என்றழைக்கப்படும் குத்து ரம்யா, மதுமிதா, கீர்த்தி சாவ்லா, காஜல் அகர்வால், சிந்து தொலானி, விமலா ராமன், அகத்தியன்

உவ்வே - நயன்தாராவின் மேனியை திருட்டுத்தனமாக ரசிக்கும் வடிவேலு (குசேலன்  காட்சி)

ஆட்டம் அடங்கியவர் - நயன்தாரா

அடங்கவே அடங்காதவர்கள் - பேரரசு, சிம்பு, நமீதா, பிரியாமணி

இருப்பதைவிட்டு பறப்பதைப் பிடிப்பவர் - பிரியாமணி

வி.ஆர்.எஸ் அவசியம் - எஸ்.ஏ.சந்திரசேகர், பி.வாசு, கலைஞரின் வசனங்கள் அடங்கிய திராபை படங்கள்

மொக்கை டைட்டில் - தரகு, முதல் முதல் முதல்வரை

வந்தார் சென்றார் - மேக்னா நாய்டு (வைத்தீஸ்வரன்)

ஏமாளிகள் - கருணாநிதி (தமிழ் டைட்டில் விவகாரத்தில்), லிங்குசாமி (நயன்தாராவுக்குப்போய் ஒரு கோடி ரூபாய் சம்பளம்  பேசியது), பிரமிட் சாய்மீரா (காரணம் சொல்ல வேண்டுமா?) மற்றும் கருணாநிதி வசனம் எழுதும் படங்களை பிரிவியூவில் பார்த்து அவதிப்படும் கமல்-ரஜினி!

ஜிம்மிக்ஸ் - தசாவதாரங்கள்

பழைய பஞ்சாங்கம் - பேரரசு, அர்ஜூன் படங்கள், வாரணம் ஆயிரம் படத்தின் பெயர்க்காரணம் சொன்ன காட்சி

புரியாதது - இன்னமும் சன் டிவியும் கலைஞரும் டிவியும் முட்டிக்கொள்வது (வாரணம் ஆயிரம், காதலில் விழுந்தேன் பாடல்கள் பகிர்வில்), கெளதம் மேனனின் ஆங்கில வெறி (வாரணம் ஆயிரம் படத்துக்கு தமிழைக் காரணம் காட்டி வரிவிலக்கு அளித்திருக்கவே கூடாது), உயிரோடிருக்கும்போது வெளிப்படாத ஒலிப்பதிவாளர் ஸ்ரீதரின் அருமைகள்

தேவுடு காத்திருப்பு - நான் கடவுள்

இன்பதிர்ச்சி - சன் டிவியில் வராத ஜெயா ப்ளஸ்ஸில் (மட்டும்) வருகிற  வாரணம் ஆயிரம் பாடல்கள் ரித்திஷீன் புகழ், சங்கீதா - கிரிஷ் காதல், தோனியை வளைத்த லஷ்மி ராய், எந்திரனைப் பிடித்த சூரியன்

2009ன் அவசியம் - கவர்ச்சிக்கும் பெரிய நடிகர்களின் படங்களுக்கும் மயங்காத Giulietta Masina, நந்திதா தாஸ் போன்ற ஒரு நடிகை, அடுத்த பத்து வருடத்துக்குத் தாங்கும் ஒரு புதிய காமெடியன், நாவல்கள் படமாக்கம் (ஃபேண்டஸி படங்கள் எடுக்கும் ஸ்பீல்பெர்க் தன் ஒவ்வொரு படத்துக்கும் நாவல்களின் துணைகொண்டே கதை அமைக்கிறார்), இளையராஜாவிடமிருந்து இன்னொரு காதலுக்கு மரியாதை, சுஜாதாவுக்கு மாற்றாக ஓர் இளமை எழுத்தாளர், அமீர் இயக்கத்தில் கட்டாயம் ஒரு படம் மற்றும் சசிகுமார் போல இன்னும் பத்து புது இயக்குநர்கள்,

oooOooo
                         
 
ச.ந. கண்ணன் அவர்களின் இதர படைப்புகள்.   திரையோவியம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |