ஜனவரி 05 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உடல் நலம் பேணுவோம் : வைட்டமின் A பற்றாக்குறை எப்போது வரும் ?
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவ்வைட்டமின் பற்றாக்குறை அதிகம் உண்டு. அமெரிக்கா போன்ற நாடுகளில் மிகக்குறைவு. வளரும் நாடுகளிம் 250000 முதல் 500000 குழந்தைகள் வைட்டமின் குறைவால் வருடம் தோறும் கண்பார்வையை இழக்கிறார்கள். இதற்கு காரணம் நல்ல சத்துள்ள உணவு இல்லாமையும், துத்தநாக பற்றாக்குறையும் ஆகும். துத்தநாகம் வைட்டமின் A ஐ  இரத்தத்தில் எடுத்து செல்லும் ஒருவித புரதம் தயாரிக்க மிக அவசியம். இந்த ரெடினால் உடன் சேர்த்து கட்டும் புரதம் இல்லை எனில் உறிஞ்சப்படும் வைட்டமின் சரியான இடங்களுக்கு எடுத்து செல்ல இயலாது. இதனால் ஏற்கெனவே சேமித்து வைத்த திசுக்களிலிருந்து தேவையான இடத்திற்கும் எடுத்து செல்ல இயலாது.

இரவு நேர கண்பார்வை மங்குவது வைட்டமின் A பற்றாக்குறை ஏற்படப்போவதை தெரிவிக்கும் அறிகுறி. பண்டக்கால எகிப்தில் கண்பார்வை மங்கும் போது அதிக கல்லீரலை உண்டால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. இதற்கு காரணம் கல்லீரலில் அதிக வைட்டமின் இருப்பதே ஆகும். கண்ணில் உள்ள கார்னியாவில் ஈரப்பதத்தை நீக்கிவிடுவதால் வைட்டமின் பற்றாக்குறை கண்பார்வையை போக்குகிறது.

வைட்டமின் A பற்றாக்குறை உடல் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடுவதால் அம்மை போன்ற நோயால் வருடம் தோறும் பல்லாயிரக்கனக்கான குழந்தைகள் இறக்கின்றனர். அதேபோல நிமோனியா வருவதற்கும் காரணமாகிறது.

சில வைட்டமின் A பற்றாக்குறை அதிகமாக சேமித்து வைக்க முடியாததால் வருகிறது. இது குழந்தைகளுக்கு கண் பார்வையில் குறை, வயிற்றுப்போக்கு இவை வர காரணமாகின்றது. எலும்பு வளர்ச்சி இன்மை கீழை நாடுகளில் காணப்படுவதற்கும் இதுவே முக்கிய காரணமாகிறது.

அமெரிக்காவில் வைட்டமின் A பற்றாக்குறை கீழ் கண்ட நிலைகளில் குழந்தைகளுக்கு வருகிறது.

- 2 வயது முதல் 4 வயது வரை
- வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குழந்தைகள்
- தடுப்பூசிகள் இல்லாத மற்றும் போதிய மருத்துவ காணிப்பு இல்லாத குழந்ததகள்
- கணையம், கல்லீரல், குடல் இவற்றில் பற்றாக்குறை உள்ள   குழந்தைகள்
- வ ள ரும் நாடுகளில் இருந்து சமீபத்தில் வந்த குழந்தைகள்

வயிற்றுப்போக்கினால் உறிஞ்சப்படாமலேயே வைட்டமின் சத்தை இழந்துவிட்டாலும் பற்றாக்குறை ஏற்படும். உணவில் இரும்பு சத்து குறைவாக இருந்தாலும் வைட்டமின் பற்றாக்குறை ஏற்படும்.

அதேபோல வயது வந்தவர்கள் அதிகம் மது அருந்தினால் அது வைட்டமின் பற்றாக்குறைக்கு காரணமாகிறது. மருத்துவர் பரிசோதித்து எதனால் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதை சொல்ல வேண்டும். மது அருந்துபவர்கள் வைட்டமின் மாத்திரைகளை எடுத்து கொள்வது கல்லீரலுக்கு மேலும் தீமையே விளைவிக்கும்.

வைட்டமின் A மாத்திரைகள் தேவையானவர்கள்: உலக சுகாதார மையமும் UNCEF உம் சேர்ந்து சில விதிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதன்படி அம்மை வந்த கீழைநாட்டு வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு  தரவேண்டும் என்பதை கட்டாயமாக்கினார்கள். அமெரிக்க குழந்தைகள் நலத்துறையின் படி  6 மாதம் முதல் 24 மாதங்கள் வரை எல்லா குழந்தைகளுக்கும் வைட்டமின் A தர வேண்டும் என்பது பரிந்துரைக்கப்பட்டது.

கொழுப்பின் செரிமானம் சில சமயம் வயிற்றுப்போக்கில் முடியக்கூடும். அப்போதும் வைட்டமின் சரியாக உறிஞ்சப்படாமல் வெளியேற்றப்படும். கீழே உள்ள சில நோய் அறிகுறிகள் அந்நிலைக்கு கொண்டுவிடக்கூடும்.

சீலியாக் நோய்: இது ஒருவகை மரபணு குறைபாட்டினால் வரக்கூடிய நோய். இந்நோய் உள்ளவர்கள் கோதுமையில் உள்ள க்லுட்டன் என்ற புரதத்திற்கு ஒவ்வாமை உள்ளவர்கள்.  இதனால் கோதுமையில் செய்த எதை உட்கொண்டாலும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மற்ற சக்தியையும் இழக்கிறார்கள். இவர்கள் சரியான உணவை உட்கொண்டு சத்துப்பொருளின் உறிஞ்சுதலை சரிசெய்ய வேண்டும்.

க்ரான் நோய்: இது ஒருவகையான சுய எதிர்ப்பு வினையால் வரும் நோய். இந்நோய் உள்ளவர்களும் அடிக்கடி வயிற்று போக்குக்கு உல்ளாவதால் வைட்டமின் சத்தை இழக்க நேரிடும்.

கணைய நோய் உள்ளவர்கள்: கொழுப்பு உறிஞ்சுதலில் உள்ள குறையாலும், சில என்சைம்கள் எனப்படும் புரதங்கள் தயாரித்தலில் வரும் குறைபாட்டாலும் வைட்டமின் பற்றாக்குறை ஏற்படுத்தும். இக்குறைபாடு உள்ளவர்கள் கணைய என்சைம்களை மாத்திரை வடிவில் உட்கொள்வதால் இப்பற்றாக்குறை தவிர்க்கப்படுகிறது.

முட்டைகள், பால் அல்லது சீஸ் உள்ள உணவை தவிர்க்கும் தாவர உணவு உண்பவர்களுக்கும் வைட்டமின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்கள் அதிக பழங்கள், காய்கறிகளை உனவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கீரை , ஆரஞ்சு காரட் போன்றவற்றில் வைட்டமின் A அதிகம் உள்ளது.

வைட்டமின் A பற்றிய சில ஆராய்ச்சி குறிப்புகள்: வைட்டமின் A  நுரையீரல் புற்றுநோய் உள்ளாவர்களை குணமாக்க உதவுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் 29000 புற்றுநோய் கொண்டவர்களுக்கு வைட்டமின் a மாத்திரைகள் தரப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. முடிவில் எந்தவித பலனும் இருக்கவில்லை. ஆகையால் சில பலன்கள் வைட்டமின் A உண்டாக்க கூடியது என்றாலும் எந்த தருணத்தில் என்பது இன்னும் புதிராக இருக்கிறது.

கரோட்டின் ரெடினால் சக்தி பற்றிய ஒரு முயற்சியில் பல நுரையீரல் நோயாளிகளுக்கு 25000 IU , 30 மிகி பீட்டா கரட்டினும் தந்து ஆராய்ச்சி செய்தபோது பல  நோயாளிகல் வைட்டமினால் விளைந்த நச்சினால் 46சதவிகிதத்தினர்  உயிரிழக்க கூடிய அபாயம் ஏற்பட்டதால் இந்த முயற்சி கைவிடப்பட்டது.

இன்னமும் வைட்டமின் A யின் புற்றுநோயை குணமாக்கும் தகுதி ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது.

இன்னமும் ஆஸ்டியோபோராசிஸ் நோயில் இதன் பங்கு, அதிக வைட்டமினால் உண்டாகும் நச்சுத்தன்மை அதன் பக்க விளைவுகள் பற்றி வரும்வாரம் பார்க்கலாம்.

oooOooo
பத்மா அர்விந்த் அவர்களின் இதர படைப்புகள்.   உடல் நலம் பேணுவோம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |