ஜனவரி 05 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு சந்திப்பு - இறுதி பாகம்
- பாஸ்டன் பாலாஜி
| Printable version | URL |

பகுதி - 1  | பகுதி - 2 | பகுதி - 3

Indira parthasarathy* தாங்கள் சமூக வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக எழுதுவதில் தமிழில் கைதேர்ந்தவர். நிகழ்ச்சிகளை மட்டும் விவரித்து சொல்லி சென்றுவிட வேண்டியது எழுத்தாளனின் கடமையா? அல்லது நுனிப்புல் போல் தர்க்கங்களையும் சலனங்களையும் ஏற்படுத்துவதும் அடக்கமா? மேற்சென்று மார்க்சிஸம் குறித்த புனைவில், கம்யூனிஸம், சமத்துவம், லெனினிஸம் என்று பல்நோக்குப் பார்வைகளையும் ஆழமாக வெளிச்சம் பாய்ச்சுவது முக்கியமா?

இ.பா.: Are you writing a manifesto or document? நாம் கதைதானே எழுதுகிறோம்! என்ன தேவையோ அந்தத் தேவைக்கு மேலே, உள்ளே போய் deep-ஆக போக வேண்டிய அவசியமே இல்லையே. நுனிப்புல் என்றால் ரெண்டு விஷயத்தை சொன்னாலும் ஆழமா இருக்கவேண்டும். அகலமா இருக்கணும்னு அவசியமில்லை. பல விஷயத்தை எடுத்துக் கொண்டு, ஆழமாக இல்லாமல், ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு ஆழமா இருந்தால் போதும்.  எவ்வளவு படித்திருக்கிறோம் என்பதைக் காட்டுமே தவிர, வேறெதையும் கொண்டு வராது.

When you are trying to impress, that's the only impression we are making. That we were trying to impress.

* அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கை சீற்றமாகட்டும், கிறிஸ்துமஸ் பண்டிகையாகட்ட்ம்; எப்பொழுதெல்லாம் ஏழைகள் கஷ்டப்படுகிறார்களோ, அப்பொழுதெல்லாம், கை நீட்டுகிறார்கள். இந்தியாவில் ஹிந்துயிஸம் இவ்வாறு service oriented வாழ்க்கையை வலியுறுத்தவில்லையே?

இ.பா.: 'அஹம் பிரம்மாஸ்மி'. I become that. கடவுளை நமக்குள்ளேயே ரியலைஸ் செய்யலாம். We are God. 'தத்வமஸி' என்றால் you become that. Every man realizes himself that he is going to ultimate reality, அவர்களின் டைமெண்ஷன் பிரமாதமாக இருக்கும். பௌத்தம் வந்தபிறகு இது individual salvation என்றாகிறது. தனிப்பட்ட முறையில் சமூகத்துக்கு சம்பந்தமில்லாமல் போய் விடுகிறது. Buddhism was more concerned about society oriented people. கிறித்துவத்தைக் குறித்து சொன்னமாதிரி பௌத்தமும் சமயத்தை சார்ந்து இருக்கிறது.

அந்தக் காலத்தில் கிராமங்களில் பார்த்தால், சாப்பிட்ட பிறகு எச்சில் இலையை எதிர்த்த வீட்டு வாசலில் போடுவார்கள். We are more converned about our personal cleanliness. மூணு வேளை குளிப்போமே தவிர, we are not bothered about social hygiene. அதனால்தான் நமக்கு சமூகப் பிரச்சினைகளில் இன்வால்வ்மெண்ட் இல்லாமல் போச்சு.

அவ்வப்பொழுது இவற்றை எதிர்த்து மூவ்மெண்ட் வந்திருக்கிறது. Bhakthi movement was against individual salvation. பெரிய பெரிய கோயில் எல்லாம் கட்டினார்கள். கம்யூனிடியாக ஒன்றாகக் கொண்டு வர பார்த்தார்கள். இதெல்லாம் நிறைய விஷயங்கள் இருக்கிறது. சின்ன் இண்டெர்வ்யூவில் சொல்லி முடித்து விட முடியாது.

Colonisation வருவதற்கு முன்னால் நமக்கு பொலிடிகல் கான்ஷியஸ்னெஸ் என்பதே கிடையாது. 'ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆன்டால் என்ன' என்பதுதான் நம்முடைய attitude.

* போலந்து நாட்டு அனுபவங்களையும் இந்தியாவையும் ஒப்பிட முடியுமா? அமெரிக்க வாசமும் போலந்து வாசமும் எங்கு ஒத்தாகக் காணலாம்? எவ்வாறு மேற்கத்திய நாடாகக் கருதப்படும் இவ்விரண்டு நாடுகளும் முரண்படுகிறது?

இ.பா.: 'ஏசுவின் தோழர்கள்' படித்தீர்களா?

* இல்லையே...

இ.பா.: Polish communism... அதில் இது போன்ற கேள்விகள் பேசப்படுகிறது. அது இப்பொழுது ஆங்கிலத்திலும் வந்திருக்கிறது. 'Comrades of Jesus' என்று. Its been published by Roopa.

நீங்க சொன்ன மாதிரி second world war-க்கு பின்புதான் போலந்து போன்ற நாடுகள் கம்யூனிஸ நாடாகிறது. Polish people were always different kind of people. They never existed in the map of Europe for another 120 years. Either they were ruled by Russia or by Austro Hungarian empire. போலந்தை மூன்று பகுதிகளாக பிரித்து விட்டார்கள். ஒரு பாதியை ரஷியா; இன்னொரு பாதியை ஆஸ்ட்ரோ ஹங்கேரி; மூன்றாவது மிச்சத்தை ப்ரஷியா. ப்ரஷியா என்பது ஜெர்மனி.

ஆனால், நூற்றிருபது வருஷம், இந்த மாதிரி ஒரு நாடு மூன்றாக பிரிந்து இருந்தால், அந்த நாடே காணாமல் போயிருக்கும். போலந்து தாக்குப் பிடித்ததற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம்.

முதல் காரணம், their love of the language. போலிஷ் மொழியின் மீதுள்ள பற்று.

இரண்டாவதாக, they are the only catholic country surrounded by all the orthodox,  presbyterian, protestant, lutheran churches. 99 சதவீத போலிஷ் மக்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள். That gave them a special identity. கம்யூனிஸத்தை எதிர்க்கும்போது மதமும் முக்கியப் பங்காற்றுகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் national sentiments are driven by the catholic church என்பதைப் பார்க்கலாம். போலந்தின் தேசிய சிந்தனைக்கும் சர்ச் காரணம்.

* ஜெயமோகனின் 'பின் தொடரும் நிழல்கள்' வாசித்திருக்கிறீர்களா? அதில் கம்யூனிஸ்ட் இயக்கம், கொள்கை தொடர்பான விமர்சனங்கள் குறித்த தங்கள் பார்வை என்ன?

இ.பா.: எனக்கு விஷ்ணுபுரம் இன்னும் பிடித்திருந்தது. படித்துவிட்டு எழுதுவதும், ஒரு இடத்தில் இருந்து விட்டு அதைப் பற்றி எழுதுவதும், வேற வேற விஷயம். இரண்டும் வேறு. அவர்களைப் பற்றியெல்லாம் புத்தகங்களைப் படித்துவிட்டு நாவல் எழுதக் கூடாது. அங்கேயே போய் இருந்துவிட்டு எழுதும் அனுபவத்திற்கு வித்தியாசம் இருக்கிறது. நான் அங்கெல்லாம் இருந்ததினால், என்னால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. Its a good novel; but it didn't impress me as much as விஷ்ணுபுரம்.

* அமெரிக்காவில் இந்தியர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது? சமூக அடையாளங்களை மறக்காமல் கோவிலுக்கு சென்று புத்தரையும் ஜெயினக் கடவுளையும் வழிபடுவது, சுயசேவை நிறுவனங்களில் தொண்டாற்றுவது என்று மதம், இனம், மொழி போன்ற அடையாளங்களை தொலைத்த மாற்றங்கள் தெரிகிறது. ஆனால், படிப்பு, பதவி, கிரீன் கார்ட், குழந்தை என்று கண்ணுக்குத் தெரியாத புது பாகுபாடுகளை நாம் காணலாம். தங்களின் பார்வை என்ன?

இ.பா.: அமெரிக்க இந்தியர்களுக்கும் இந்தியாவில் இருப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. இங்கேயும் ஒய். ஜி. மஹேந்திரா, எஸ்.வி. சேகரைத்தான் விரும்புகிறார்கள். யாராவது கூத்துப் பட்டறை முத்துசாமியையோ, நவீன நாடகக்காரர்களையோ கூப்பிடலாம் என்று யோசிப்பது இல்லை.

அந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணுவது இல்லை. ரசனை எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கிறது. இங்கே இருக்கக் கூடிய தியேட்டர் மூவ்மெண்ட், லிடரெரி இயக்கம் ஆகியவற்றால் தமிழர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. Exposure and opportunity இருக்கிறது. அந்த எக்ஸ்போசரை பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை.

பெரும்பாலானவர்கள், இங்கே வந்து ரொம்ப நாளாக இருக்கக்கூடிய தமிழர்கள், இந்தியர்கள் கூட, இந்தியாவில் முப்பது வருஷம் முன்னாலிருந்த அபிப்பிராயங்களைத்தான் இப்பொழுதும் வைத்திருக்கிறார்கள். அங்கே மாறிப்போனது கூட இவர்களுக்குத் தெரியாது. They are not even exposed to the modern ideas. I am not talking about youngsters.

ஜாதிச்சண்டை எல்லாம் இங்கும் நிறைய பார்க்கிறேன். நிறைய கேள்விப்படுகிறேன். சுந்தர ராமசாமி குறித்து இணையத்தில் பார்த்தேனே... இப்பொழுது தமிழ்நாட்டில் மாறிப் போய்விட்டது. ஆனால், இங்கே இன்னும் மாறவில்லை என்று நினைக்கிறேன். Brahmins are not interested. தமிழ்ச்சங்கம் என்று எடுத்துக் கொண்டால் பிராமின்ஸ் பங்கே கிடையாது. இங்கே செயிண்ட் லூயிஸில், மிஸௌரி தமிழ்ச்சங்கத்தில் பேசப்போனபோது, the only brahmin family was my family. கர்நாடக சங்கீதமோ, பரதநாட்டியமோ என்றிருந்தால் you find exclusively, mostly brahmins. அவர்கள் எல்லாம் தனி; மற்றவர்கள் எல்லோரும் வேறு...

அந்த divide இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் இருந்தது. நிறைய இருக்கிறது. ம்யூஸிக் அகாடெமி... இப்பொழுதும் இருக்கு. கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனால், தமிழ் என்றால் நமக்கு சம்பந்தம் இல்லை என்றுதான் இங்கு பிராமின்ஸ் நினைக்கிறார்கள். Thats very unfortunate.

* இலக்கியத்துறையில் ஈடுபட்டவர்கள்தான் நவீன நாடகத்திற்கு வந்திருக்கிறார்களா? தமிழ் இலக்கிய அனுபவம் எந்த அளவுக்கு நாடகத்துறைக்கு உதவியுள்ளது?

இ.பா.: இலக்கிய அனுபவத்துக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. எழுத்தாளனுக்கு நாடகத்தைக் குறித்த தெளிவு இருந்தால், 'இது நாடகமாக எழுதினால் நன்றாக இருக்குமே' என்று தோன்றும். நான் 'மழை' என்றொரு நாடகம் எழுதியிருக்கேன். அது முதலில் எழுதும்போது, நாவலாகத்தான் எழுத நினைத்தேன். திடீர்னு ஏதோ தோணிச்சு. நாடகம்னா இது! இதைப் போய் நாவலா எழுதினால் நல்லா இருக்காது. Play can be a literature. ஷேக்ஸ்பியர் நாடகங்களை நாடகமாகவும் பார்க்கலாம்; இலக்கியமாகவும் பார்க்கலாம். அந்த மாதிரி ஒரு காம்பினேஷன் அமையறது ரொம்ப rare.

நாடகத்தை நடிக்கப்படணும்னு காண்பிக்கறதுக்காகத்தான் நாடகம் எழுதப்படுகிறது. Its only for staging. Full consummation எப்பொழுது நடக்கிறது என்றால், when the play written is staged.

 * தமிழ் படைப்பாளி நாடகம், ஓவியம், சிற்பம் போன்ற பிற கலைகளோடு ஊடகங்களோடு எந்த மாதிரியான உறவு கொண்டிருக்க வேண்டும்?

இ.பா.:  எக்ஸ்போஷர் ஜாஸ்தியாக இருந்தால் எழுத்தில் தெரியும். All kind of fine arts-இலும் exposure இருந்தால்தான் பார்வை அகலமாகும். எப்படி ஒன்றை விஷுவலைஸ் செய்கிறான், எப்படி அதை சித்தரிக்கிறான் என்பதெல்லாம் தெரியவரும்.

* பரிக்ஷா , கூத்துப்பட்டறை, ந.முத்துசாமி, பாதல் சர்க்கார் நாடகங்கள் குறித்த தங்கள் கருத்து?

இ.பா.: Unfortunately, அவர்களில் ஆடியன்ஸ் ஒரே மாதிரிதான் இருந்து வருகிறது. மைனாரிட்டி ஆடியன்ஸாகத்தான் இருந்துகிட்டிருக்கு. அதை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. மைனாரிட்டி என்பதில்தான் நம்முடைய பெருமையே இருக்கிறது என்று எண்ணுவதும் காரணமாக இருக்கலாம். நாமே முதுகை சொறிந்து விட்டுக்கொண்டு, 'இண்டெலெக்சுவல்ஸ¤க்குதான் இவை' என்றாலும் பிரச்சினைதான். முத்திரை இல்லாமல் ஒரு நல்ல நாடகத்தைப் போட்டுப் பார்க்க வேண்டும். அதை எப்படி ரிசீவ் பண்ணுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். 'Mine is a intellectual play' என்று சொன்னால் who will come and see it?

* திராவிட இயக்கங்களின் அரசியல் தமிழ்நாட்டில் முக்கிய சக்தியாக இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் அவர்களின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது?

இ.பா.: நான் இதைப் பற்றி ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். புகழ்பெற்ற பத்திரிகையொன்றில் சமீபத்தில் வெளிவந்த பேட்டியில் கூட சொல்லியிருந்தேன். தமிழினுடைய கண்ணோட்டத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த திராவிட இயக்கங்கள்தான். மாற்றங்கள் என்றால் for worse; not for good.

எல்லாமே exaggerated. உயர்வு நவிற்சியில் மட்டுமே திளைக்க வைத்திருக்கிறார்கள். சங்க இலக்கியம் என்று பேசுகிறோம். சங்க இலக்கியம் எல்லாமே தன்மை நவிற்சி, டைரக்ட்... உயர்வு நவிற்சியே கிடையாது. 'ஒரு பொண்ணு' என்று சொல்லமுடியாது. 'சிற்றிடையாள், பேரிடையாள்' என்றுதான் எழுத முடியும். மொழி எப்படி மாறுகிறது என்று பாருங்கள். Culture, சினிமா, பாலிடிக்ஸ் போன்ற எல்லாத் துறைகளிலும் இது reflect செய்கிறது.

* இப்பொழுது திராவிட இயக்கம் போய்விட்டு, ரிசர்வேஷன் சங்கங்களின் காலமாக மாறி வருகிறது?

இ.பா.: பெரியாரின் சீர்திருத்த இயக்கம் சமுதாயத் தேவையாக இருந்தது. மூன்று பெர்சண்ட் உள்ளவன் 97% இருக்கிறவன் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டால், எப்படி ரியாக்ஷன் இல்லாமல் இருக்கும்? It was a right movement. It was necessary at the time when Periyar started it. Brahmins had to be looked in that way. Unfortunately, it has not integrated the society. இண்டெக்ரேஷனுக்கு பதிலாக இது அதுக்குள்ள பிரிவு, பிரிவு, பிரிவு, பிரிவாகப் போய் விட்டது.

ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் என்ன செய்தான் - வடக்கில் இந்து, முஸ்லீம் என்று பிரித்தான். தெற்கில், பிராமின் மற்றும் நான் - பிராமின் என்று பிரித்தான். ஏனென்றால், இங்கே இந்து - முஸ்லீம் இடையே அவ்வளவு இஷ்யூ இல்லை. So, the problem was between the 97% and 3%. Once the 3%, ceases to be the problem, the 97% started sub dividing itself.

இப்பொழுது இது 'வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை' என்று தமிழ்நாடே ஜாதி அடிப்படையில் ஆகியிருக்கிறது. தமிழ்நாடு பல விஷயங்களில், இந்தியாவுக்கு முன்னோடியாக இருக்கிறது. ஜாதி என்பது வடக்கில் முன்னால் கிடையாது. அங்கே நான் -பிராமின் என்னும் கான்செப்ட்டே கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும்தான் பிராமணரல்லாதவர்கள் என்று நெகட்டிவாக சொல்லி... அதுவே ஒரு பெரிய அயோக்கியத்தனம். Why should a community of 97% people refer to negativity?

இப்பொழுது வடக்கிலும் இவ்வாறு ஆகி வருகிறது.

* தமிழில் தற்போதைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் எப்படி இருக்கிறது?

இ.பா.: அடாப்ட் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். படைப்புகளை இந்தியாவுக்கு ஏற்ற மாதிரி மாற்ற வேண்டும். தழுவலாக இருக்க வேண்டும். ஷேக்ஸ்பியரையோ கிங் லியரையோ தெரியாதவன் படிக்கும்போது, தமிழ் நாடகத்தைப் பார்க்கிற மாதிரிதான் பார்ப்பான். Theme is universal.

 * தங்களின் அடுத்த முயற்சிகள் என்ன? தங்களுடைய அடுத்த படைப்பை குறித்து எங்களுக்காகக் கொஞ்சம் ஸ்னீக் ப்ரிவ்யூ கொடுக்க முடியுமா?

இ.பா.: நிறையப் படித்துக் கொண்டிருக்கிறேன். படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. I am trying to translate 'கிருஷ்ணா கிருஷ்ணா' into english. நான் ஏற்கனவே 'கிங் லியரை' இறுதியாட்டம் என்று மொழியாக்கமாக அடாப்ட் செய்திருக்கிறேன். அதே போல் ஷேக்ஸ்பியரின் 'டெம்பஸ்ட்'டை செய்து கொண்டிருக்கிறேன். Contemporary issues-யும் பொருத்தி செய்து வருகிறேன்.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக என்னுடன் பொறுமையாக உரையாடியதற்கு நன்றி.


இ.பா - வலைச்சுட்டிகள்

குருதிப்புனல் - முன்னுரை

இந்திரா பார்த்தசாரதி - தெ. மதுசூதனன் (ஆறாம்திணை)

இந்திரா பார்த்தசாரதியின் 'தொலைவு' - கதாவிலாசம் (விகடன்)

கிருஷ்ணா கிருஷ்ணா - பத்ரியின் விமர்சனம்

oooOooo
பாஸ்டன் பாலாஜி அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |