ஜனவரி 06 2005
தராசு
வ..வ..வம்பு
பங்குச்சந்தை ஒரு பார்வை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
சமையல்
மஜுலா சிங்கப்புரா
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : மாப்பிள்ளைக் கலகம்
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  1992ஆம் வருஷம் டிசம்பர் ஆறாம்தேதி மட்டுமல்ல இந்திய நாட்டிற்கு இன்னொரு கருப்பு நாளும் உண்டு. அதுதான் 1921 ஆகஸ்டு 19ஆம்தேதிதான் அது. கேரளாவில் மாப்பிள்ளைமார் என்று சொல்லப்படும் முஸ்லீம்கள் ஆரம்பித்து வைத்த கலகம், காட்டுத் தீ போல பரவி இந்தியாவில் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு அதுவே பரம விரோதியானது. கேரள மாநிலத்தில் திருவரங்காடி என்கிற இடத்தில் ஏற்பட்ட உள்ளூர் பிரச்னையில் அதிகாரிகள் மேல் கோபம் கொண்டு சில மாப்பிள்ளைமார்கள் அரசாங்கத்தை குற்றம் சாட்ட, எல்லா
  மாப்பிள்ளைமார்களும் போராட்டத்தில் இறங்கினார். முதலில் அரசாங்கத்திற்கு எதிராக ஆரம்பித்த போராட்டம் பின்னாளில் இந்துக்களுக்கு விரோதமாக மாறியது.

  மாப்பிள்ளைமார்களின் கலகத்தால் பல அப்பாவி இந்துக்களின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. பலர் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர். முஸ்லீம்கள், இந்துக்களுக்கு செய்த கொடுமைகளை பல முஸ்லீம் தலைவர்களும் நியாயப்படுத்தி பேச ஆரம்பித்தனர். ஒரு பெரிய முஸ்லீம் தலைவரோ மாப்பிள்ளைமார்கள் தங்களது மதத்தை காப்பதற்கான செயல்களில் இறங்கியிருப்பதாக கலகத்தை நியாயப்படுத்தி பேச அதை காங்கிரஸ் ஊழியர்கள் கண்டிக்க, விஷயம் தேசீய பிரச்னையாகிவிட்டது. காந்திஜியின் வார்த்தைகளிலேயே சொல்லவேண்டுமென்றால் மாப்பிள்ளைக் கலகம், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு ஒரு பெரும் சோதனைதான்.

  பெரும்பாலானவர்ளுக்கு இந்து முஸ்லீம் ஒற்றுமையில் நம்பிக்கையிருந்தாலும் மாப்பிள்ளைக் கலகம் பல சந்தேகங்களை கிளப்பிவிட்டிருந்தது. மாப்பிள்ளைக் கலகம் பற்றி கருத்துக் கூறுமாறு காந்திஜி நிர்ப்பந்திக்கப்பட்டார்.  காந்திஜியும் மாப்பிள்ளை கலகம் பற்றிய பல சந்தேகங்களுக்கு யங் இந்தியாவில் பதிலளிக்க ஆரம்பித்தார்.

  'வன்முறையைக் கையாண்டு மதமாற்றத்தில் ஈடுபடுவதற்கு குரானில் ஆதாரம் கிடையாது. அந்த புனிதமான புத்தகம், மதத்தில் வன்முறை கிடையாது என்பதை தெளிவான மொழியில் சொல்லுகிறது. முகமது நபியின் வாழ்க்கை முழுவதுமே, மதத்தில் வன்முறைக்கு ஒரு மறுப்பாகும். எனக்கு தெரிந்தவரை எந்த முஸ்லீமும் வன்முறையை ஏற்றுக்கொண்டதில்லை. தன் பிராச்சாரத்திற்கு வன்முறையை நம்பியிருந்தால், இஸ்லாம் உலக மதமாயிருக்க முடியாது. மதமாற்றத்திற்காக வன்முறை உபயோகப்படுத்தப்பட்டபோது பொறுப்புள்ள முஸ்லீம் தலைவர்கள் அதைக் கண்டித்திருக்கிறார்கள்'  (யங் இந்தியா, 29.9.1921)

  காந்திஜி இதே கருத்தை பின்னாளில் வாபஸ் வாங்கிக் கொண்டது வேறு விஷயம்.  ஆனால், இந்து முஸ்லீ ஒற்றுமை என்பது இரு தரப்பினரிடையே யாரும் எப்போதும் தவறு செய்யவேமாட்டார்கள் என்கிற அடிப்படையில் உருவாக்கப்படவில்லை என்பதில் காந்திஜிக்கு தெளிவு இருந்தது. அதனால்தான் அப்படிப்பட்ட மோதல்கள் நிகழும் பட்சத்தில் அவற்றை தணிக்க வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஒரு சில தனிநபர்களில் செயல்களால் ஒட்டு மொத்த சமூகமே பாதிக்கப்படுவதை அடிக்கடி கண்டித்துவந்தார். கேரளத்து மாப்பிள்ளைகள் எல்லை மீறிவிட்டதாக தனது யங் இந்தியா கட்டுரைகளில் கடுமையாக கண்டித்தார். மதத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று எந்த புனிதநூலும் சொல்லவில்லை குறிப்பாக குரானில் இல்லை. காந்திஜி சொல்லும் இன்னொரு முக்கியமான விஷயம். பெண்கள், குழந்தைகள், முதியவர்களை யுத்தகாலத்தில் காக்கும் இஸ்லாம், பிற மதத்தினரை எதிர்த்து மதப்போர் செய்யும் ஜிஹாத்தை எப்போதும் அனுமதிப்பதில்லை என்பதுதான்.

  'இந்துக்களும் மாப்பிள்ளைகளும் ' என்கிற தலைப்பில் யங் இந்தியாவில் காந்திஜி எழுதிய கட்டுரைகள் மாப்பிள்ளை கலகத்தால் உண்டான காயங்களுக்கு மருந்து போடுவது போல இருந்தது. மாப்பிள்ளைகளை கண்டித்த அதே சமயத்தில் இந்துக்களுக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்திருந்தார். காந்திஜி சொன்ன இன்னொரு விஷயம், மாப்பிள்ளைகள் அறியாமையில் வாழ்ந்த மதவெறியர்கள்;
  இந்துக்கள் கோழைகள்.

  'இந்துக்களும் முஸ்லீம்களும் உண்மையில் மதப்பற்று உடையவர்களாக வாழ விரும்பினால், தத்தம் உள்வலியை வளர்த்துக்கொள்ளவேண்டும். பலம் இருக்குமிடத்தில் பணிவும் இருக்கவேண்டும். ஒற்றுமை என்பது பலமற்றவர்களுக்கிடையே உண்டானதாக இருக்கக்கூடாது. தமது பலத்தை தாமே அறிந்தவர்களுக்கிடையே உண்டானதாயிருக்க வேண்டும்'  (யங் இந்தியா, 26.1.1922)

  ஆறு மாதம் கழித்து அமைதியை கொண்டுவர அதே ஆண்டு செப்டம்பர் மாதம் காந்திஜி மெளலானா முகமது அலியுடன் கேரளாவிற்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால், வால்டேர் ஸ்டேஷனில் அரசு அதிகாரிகள் முகமது அலியை கைது செய்து விட்டார்கள். அப்போது காந்திஜி சொன்னது, 'இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கான அழிவுகாலம் நெருங்கிவிட்டது'

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |