ஜனவரி 13 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
பங்குச்சந்தை ஒரு பார்வை
காந்தீய விழுமியங்கள்
நையாண்டி
மஜுலா சிங்கப்புரா
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  பங்குச்சந்தை ஒரு பார்வை : சந்தையில் ஒரு சுனாமி
  - சசிகுமார்
  | Printable version |

  பங்குச் சந்தை உயர்ந்து கொண்டே இருக்கும் பொழுது, சந்தையின் மொத்த போக்கிலும் பங்குகளை வாங்க  வேண்டும் என்ற எண்ணமே இருக்கும். எந்தப் பாதகமான செய்திகளும் சந்தையில் எடுபடுவதில்லை. சில மாதங்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலையுயர்ந்தப் பொழுதும், ரிலயன்ஸ் சகோதரர்களின் சண்டை  என பல நிகழ்வுகளின் பொழுதும் சந்தை இந்தளவுக்குச் சரியவில்லை. சுனாமி நிகழ்வுகள் கூட சந்தையில்  எந்தவித
  பாதிப்புகளும் ஏற்படுத்த வில்லை. ஆனால் தற்பொழுதோ சந்தை, "பங்குகள் விற்பனை" என்றச்  சுனாமியால் தாக்கப்பட்டு சின்னாபின்னமாகி விட்டது. இந்த வாரத்தின் முதல் மூன்று நாட்களில் கடுமையானச்  சரிவையே சந்தையில் காணமுடிந்தது. கடந்த வாரம் மற்றும் இந்த வாரத்தில் புதன்கிழமை வரையிலானச் சரிவுகளை கணக்கில் எடுத்தால் குறியீடு சுமார் 600 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. முதலீட்டளர்களின் பல கோடி  ரூபாய் கரைந்துப் போய் விட்டது. சந்தையில் ரத்த ஆறு (Blood bath in the Street) ஓடுவதாக எல்லாப்  பத்திரிக்கைகளும் அலறிக் கொண்டிருக்கின்றன.

  குறியீடுகள் உயரும் பொழுது, எப்படி எந்த வித பாதகமானச் செய்திகளும் சந்தையில் எடுபடாதோ அதைப் போல  சந்தை சரியும் பொழுது எந்தவித நல்ல செய்திகளும் எடுபடாது. இன்போசிஸ் அனைவரின் எதிர்பார்ப்புக்கும்  மிஞ்சிய காலாண்டு அறிக்கையை கொடுத்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் பங்குச் சந்தை சரிந்தது.

  பங்குச் சந்தை கடந்த வாரம் திங்களன்று (ஜனவரி 3) உயர்ந்தப் பொழுது சந்தை மிகவும் ஏற்றத்துடன் தான்  இருந்தது. இது மிகச் சிறந்த காளைச் சந்தையாகவே இருக்கும், குறியீடுகள் 7000 ஐ எட்டுமென பல பங்குச்  சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் கடந்த புதனன்று இண்ட்ராடேயில் (Intraday) குறியீடு சுமார்  300 புள்ளிகள் சரிவடைந்தப் பொழுதும், அதைத் தொடர்ந்தச் சரிவும் முதலீட்டாளர்கள் மனதில் அச்சத்தை  ஏற்படுத்தியது.

  இங்கே இரு விடயம் நன்கு புரிபடும். சந்தை 7000ஐ எட்டுமென யாராலும் ஆருடம் கூற முடியாது. சந்தை  தற்பொழுதுள்ள நிலையில் இருந்து 6000க்கும் கீழேச் சரியும் என்று யாரும் கணிக்கவும் முடியாது. வாங்குபவர்,  விற்பவர் மனநிலையையும், சூழலையும் பொறுத்துத் தான் சந்தை சரிவதோ, உயர்வதோ நிகழும். இந்த வாரம்  சந்தையில் பங்குகளை விற்கும் சுரம் அனைவரையும் வாட்டியது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதற்கொண்டு  சாதாரண முதலீட்டாளர்கள் வரை அனைவரும் பங்குகளை விற்கத் தொடங்கினர். சந்தையில் பங்குகளை  வாங்குவதில் பெரிய ஆர்வம் யாருக்கும் இல்லை. வங்குபவர்கள் இல்லாத சூழலில் சந்தை கடுமையாகச்  சரிவடைந்தது.

  ஏன் இந்தச் சரிவு?

  சந்தையில் பங்குகளை தொடர்ந்து அனைவரும் விற்கும் பொழுது, அதற்காகப் பல காரணங்களை நாம்  தேடவேண்டி இருக்கிறது. அதில் முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது, அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் (FII)  முதலீடு இனி அதிகளவில் இருக்காது என்ற அச்சமே. இது தற்பொழுதுள்ள சூழலில் எழுந்துள்ள அச்சம் தானே  தவிர, இந் நிலையே தொடரும் என்று கூற முடியாது.

  அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் பொருளாதார தேக்கமே வெளிநாட்டு முதலீடுகள் இந்தியா  மற்றும் வளரும் நாடுகளின் பங்குச் சந்தையில் குவிய முக்கிய காரணம். கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க  டாலர் விலையில் கடும் வீழ்ச்சி இருந்தது. இத்துடன் சேர்த்து அமெரிக்கவின் பொருளாதார தேக்க நிலையும்,  வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தது. ஆனால் கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள வட்டி  விகிதத்தில் உயர்வு இருக்கும் என்ற செய்திகள் வெளியாயின. இது வரை அமெரிக்காவில் குறைந்தளவில்  இருந்த வட்டி விகிதத்தாலேயே வளரும் நாடுகளை நோக்கி வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் படையெடுத்து  கொண்டிருந்தன. வட்டி அதிகரிக்கப்பட்டால் அந்நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே முதலீடு செய்யக்கூடும்  என்ற எண்ணம் எழுந்தது.

  இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்ய இனி பெரிய ஆர்வம் இருக்காது என்ற அச்சம் ஏற்பட்டது.  இந்தச் சூழலில் ஹேட்ச்பண்ட் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்கத் தொடங்க, இந்த எல்லா  முதலீட்டாளர்களையும் மேலும் அச்சுறுத்தியது. டாலர் விலை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சி அடைந்ததால்  மென்பொருள் நிறுவனங்களின்  லாபம் சரியக் கூடுமென்ற அச்சமும் இந்தப் பட்டியலில் சேர்ந்து கொண்டது.  ஏற்கனவே கடந்த இரு மாதங்களாக உயர்ந்து கொண்டே இருந்த சந்தையில் இதுவே லாபம் பார்க்கும் தருணம்  என முதலீட்டாளர்கள் முடிவு செய்து பங்குகளை விற்கத் தொடங்க, சந்தை கடுமையாகச் சரிந்தது.

  இந்தச் சூழலில் இவ் வாரம் செவ்வாயன்று Mphasis BFL என்ற மென்பொருள் நிறுவனம் தனது காலாண்டு  அறிக்கையைத் தாக்கல் செய்ய, சந்தையின் எதிர்பார்ப்புக்கு மாறாக அந் நிறுவனத்தின் அறிக்கை இருக்க, எல்லா மென்பொருள் நிறுவனங்களும் இவ்வாறு தான் இருக்கும் என்ற அச்சத்தில் சந்தை மேலும் சரிந்தது.

  இந்தச் சரிவுக்கிடையில், இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையைத் தாக்கல் செய்யும் நாளான   புதன்கிழமையை சந்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. கடுமையான கரடியின் பிடியில் இருக்கும் சந்தையின் நிலவரம் மாற வேண்டுமானால் இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். கடந்த  காலங்களில் தனது சிறப்பான அறிக்கையின் மூலம் சந்தையின் போக்கை இன்போசிஸ் மாற்றியிருக்கிறது.  ஆனாலும் இம் முறை யாருக்கும் பெருமளவில் நம்பிக்கை இல்லை. டாலர் வீழ்ச்சி போன்ற பல காரணங்கள்.  ஆனால் இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையைக் கொடுத்தது. அதைக் கண்டுகொள்ளாமல் சந்தை புதனன்று  120 புள்ளிகள் சரிந்தது. பங்குகளை விற்பதில் தான் முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வம் காட்டினர். சிறப்பான அறிக்கையைக் கொடுத்த இன்போசிஸ் கூட கடுமையாகச் சரிந்தது. பங்குகளை வாங்குவதற்கு  வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததே இந்தச் சரிவிற்கு காரணம்.

  இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல மற்றொரு பாதகமானச் செய்தி ரிசர்வ் வங்கி கவர்னர் ரெட்டி மூலமாக  வெளிப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு கோட்டா முறை விதிப்பது, வரி விதிப்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டார். ஏற்கனவே தீப்பற்றி எரியும் சந்தையில் இந்தச் செய்தி மேலும் கடுமையாக  பாதிப்பை ஏற்படுத்தியிருக்க கூடும். ஆனால் உடனடியாக நிதி அமைச்சர் ப.சிதம்பரமும், SEBI சேர்மனும்  வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எந்த வரியும் விதிக்கும் உத்தேசம் இல்லை. இனி மேல் விதிக்கப்படவும்  சாத்தியம் இல்லை என்று சொன்னார்கள்.

  இந்தச் செய்தி வெளிநாட்டு முதலீடுகளை வியாழனன்று மறுபடியும் சந்தைக்கு கொண்டு வந்தது. இந்தியவின்  மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான TCS ம் ஒரு சிறப்பான அறிக்கையைக் கொடுக்க பங்குச் சந்தை   எகிறத் தொடங்கியிருக்கிறது. வியழனன்று சுமார் 118 புள்ளிகளுக்கும் அதிகமான உயர்வை சந்தை பெற்றிருந்தது.

  இனி வரும் நாட்களில் பல நிறுவனங்கள் கொடுக்கும் அறிக்கையின் நிலவரங்களைப் பொறுத்து தான் அந்தப்  பங்குகள் உயரவோ, சரியவோச் செய்யும்.

  தனது அடுத்த நிதிநிலை அறிக்கைக்கு நிதியமைச்சர் ப.சிதம்பரம் பலதரப்பட்ட துறையினருடனும் அலோசனை  நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல பட்ஜெட்டை அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

  இந்தப் பதிவுகளில் எப்பொழுது சொல்வது போல, நல்லப் பங்கு, நீண்ட கால முதலீடு இவை இரண்டையும்  கருத்தில் கொண்டால் இந்தச் சரிவு நிச்சயமாக நம்மை பயமுறுத்தாது. ஆனால் நடந்திருப்பது என்ன ?

  பல முதலீட்டாளர்கள் சந்தையில் இருந்து விலகி விட்டனர். அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி வியாழன்று  சந்தை உயர்ந்தது. இந்தச் சூழலில், வரும் நாட்களின் நிலவரத்தைப் பொறுத்து சந்தைக்கு செல்லலாம் என்றே  சாதாரண முதலீட்டாளர்கள் யோசிப்பார்கள். மறுபடியும் சந்தை தொடர்ந்து எகிறும் பொழுது சந்தைக்கு வந்து  பங்குகளை வாங்குவார்கள். அப்பொழுது சந்தை உச்சகட்ட விலையில் இருக்கும். ஏற்கனவே குறைந்த  விலையில் பங்குகளை வாங்கியவர்கள், பங்குகளை விற்கத் தொடங்குவார்கள். சந்தை சரியும். மறுபடியும் நம்  முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று விட்டு சந்தையில் இருந்து விலகி விடுவார்கள். இது தான் எப்பொழுதும்  நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

  இந்த அணுகுமுறையில் இருந்து மாறி, நல்லப் பங்குகளில், சந்தை சரிவடைந்திருக்கும் சூழலில் முதலீடு  செய்தால் லாபம் நிச்சயம்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |