ஜனவரி 13 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
பங்குச்சந்தை ஒரு பார்வை
காந்தீய விழுமியங்கள்
நையாண்டி
மஜுலா சிங்கப்புரா
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  நையாண்டி : வடக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள "தொலைக்காட்சி தொடர் எடுக்கப் போகிறீர்களா?"
  - ராமசந்திரன் உஷா
  | Printable version |

  கோலாகாலமாய் ஆரம்பித்துள்ள இவ்வருட புத்தக சந்தையில் அதிக பரபரப்பை ஏற்படுத்திய புத்தகம், வடக்கு பதிப்பகம் வெளிட்ட " தொலைக்காட்சி தொடர் எடுக்கப் போகிறீர்களா?". அப்புதகத்தில் இருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

  எடுத்தவுடன் , பிரபல தொடர் எழுத்தாளர் தேவபாலனும், தயாரிப்பாளர் நடிகை ராசிகாவும் முன்னுரை நம் கண்ணை கவருகிறது.

  " தொலைக்காட்சி தொடர்கள் நான்கு வகைப்படும். ஒன்று, காலை வேளைக்காட்டப்படும் தொடர். கதாபாத்திரங்கள் ஆணோ, பெண்ணோ முழுக்க முழுக்க அழுமூஞ்சிகளாய் இருக்க வேண்டியது மிக அவசியம். ஆண் பாத்திரங்களும் ஓவென்று அழ தயாராய் இருக்க வேண்டும். புரட்சி தலைவர் எம்.ஜி.யாரைப் போல் முகத்தை திருப்பிக் கொண்டு அழாமல், "வாலி" அஜீத் போல காமிராவைப் பார்த்து கண்ணில் நீர் வழிய அழவேண்டும். கதை, லாஜிக் என்று அலட்டிக் கொள்ள வேண்டாம். சாதாரண பழி வாங்கும் மற்றும் மோசமான மாமியார், தெய்வீக மருமகள், அடுத்து கெடுத்தல், பில்லி சூன்னியம் வைத்தல். பொய் கேஸ் போடுதல் என்று சொன்ன கதையையே திரும்ப திரும்ப அரைத்து நைசாய் தரலாம்.
   
  அடுத்து, மாலை தொடர். அதிலும் பீக் டைமான ஏழரை மணி ஸ்லாட் புது தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கவே கிடைக்காது. நிறைய பணம் போட்டு, நாலைந்து வருடம் முன்பு கொடிக்கட்டி பறந்த நடிகையைப் பிடித்துப் போட்டால், ஒரு வேளை  கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

  அதன் பிறகு, வாரம் ஒருமுறை வரும் தொடர்கள், இவை பொதுவாய் சாமி, பூதம், பேய், பிசாசு, மாந்ரீகம் போன்றவை இருக்க வேண்டும். இதையே சாதாரண கதையாகவோ, மாந்ரீக யதார்த்தமாகவும் எடுக்கலாம். மா.யதார்த்தம் என்பது மாயமந்திரமும் இருக்கவேண்டும், அதே சமயம்  நாகரீகமாக கம்ப்யூட்டரும், ஹ¥மன் சைக்காலஜி மற்றும் ஓலைசுவடிகளும் சேர்ந்து வரவேண்டும். இன்னொரு வாரம் ஒருமுறை சீரியல், சாமி, பூதம் என்று இஷ்டத்துக்கு, கம்ப்யூட்டர் கிராப்ஸ் வைத்து எடுக்கலாம். ஏதாவது சின்னபெண்ணை ஆத்தா என்றும் அருள்வாக்கு, மாயம், மந்திரவாதி என்று எடுக்கலாம்."

  நகைச்சுவை தொடர் எடுப்பது மிக கடினம், அழுமுஞ்சி தொடர் எடுப்பது சுலபம் என்று பலர் சொல்கிறார்கள். அது தவறு. நகைச்சுவை தொடர் எடுப்பது மிக சுலபம். நகைச்சுவை என்பது ஆபாச திட்டு, செய்கைகள்தான். பக்கத்து வீட்டுக்காரனுடன் மனைவி ஓடிப்போவது, சம்மந்தி, சம்மந்தியம்மாவை சைட் அடிப்பது, வழக்கில் இல்லாத கெட்ட வார்த்தைகளை உபயோகித்து பெற்றவர்களைத் திட்டுவதுத்தான் நகைச்சுவை தொடரின் இலக்கணம். ஆனால் முக்கியமாய் பின்னால் பலர் சிரிக்கும் ஒலியை அவ்வப்பொழுது ஒலிபரப்பிக் கொண்டேயிருக்க வேண்டும். கதையில் சிரிப்பு வராத கட்டமானாலும் பரவாயில்லை"

  "எல்லா தொடருக்கும் முக்கிய தேவைகள் கிளிசரின் மட்டுமே என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் சில வஸ்துக்கள் இருக்கிறது. எல்லா தொடரிலும் ப்ளேபேக்கில் குணு, குணு என்று அழும் பெண் குரல்கள் பதிவு செய்து ஒலிபரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த கேசட் அதிக விலை. நீங்கள் புது முகங்களை வைத்து பதிவு செய்தால் அவ்வளவு நன்றாய் வராது. இதற்கு என்று புகழ் பெற்ற அழுகுரல்கள் உண்டு. அதேப்போல பழிக்கு பழி வாங்குவது, சோதிடம் போன்றவை எல்லா தொடரிலும் மிக முக்கியம். சோதிடம், சோழி, நாடி ஓலைப் பார்த்தல் இவைகளில் கதை எப்படி போகும் என்று சூசகமாய் காட்டிவிட்டு, பின்பு அதற்கு சம்மந்தமேயில்லாமல் ஆண்டி கிளைமாக்ஸ் வைக்கலாம். கதாபாத்திரங்கள் நல்லவர்களாய் இருந்தால் பொதுவாய் கேனையனாய் இருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசாமல் திரும்பதிரும்ப திட்டு வாங்கிக் கொண்டு இருக்க வேண்டும். பணக்காரர்கள் பொதுவாய் கெட்டவர்கள். வீட்டிலும் முழ அளவுக்கு பட்டுபுடைவையும், நிறைய நகைகளும் அணிந்திருக்க வேண்டும். கதாநாயகிகள் புடைவை மட்டுமே அணிந்து சிம்பிளாய் பட்டும், நகையும், தலைநிறைய மல்லிகை பூவும். நீண்ட பின்னலுமாய் காட்சி அளிக்க வேண்டும். மறந்தும் அவர்களுக்கு சுடிதாரோ, ஜீன்ஸ் பேண்டோ போட்டு விட வேண்டாம். இந்த உடைகள் அணிந்த நாகரீக பெண்கள், மிகவும் மோசமாகத்தான் தொடரில் காண்பிக்கப்பட வேண்டும். முக்கியமாய் நாயகியை , மற்ற கதாப்பாத்திரங்கள், அடிக்கடி  முகஸ்தூதி வார்த்தைகளால் போற்றும் பொழுது, நாயகிகள் தெய்வீக புன்னகை பூத்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்"

  "குடும்ப கெளரவம், நாலுபேர் பார்த்தால் என்ன சொல்வார்கள், பெண்கள் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும், குடும்பம் என்றால் அப்படிதான் இருக்கும் போன்ற வசனங்களை அடிக்கடி சொல்ல வேண்டும். பணக்கார ஆண் பாத்திரங்களுக்கு கட்டாயம் சின்ன வீடு இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மற்றும்  போலீஸ்காரர்கள் எவ்வளவு மோசமாக வேண்டுமானாலும் காட்டலாம்.

  மாமியார் நாத்தனார்கள்,  மருமகளை எப்படியெல்லாம் கொடுமை படுத்தலாம் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இதை படித்துவிட்டு, தன் திறமையை வளர்த்துக் கொண்ட "கணவனே கண் கண்ட தெய்வம்" புகழ் மாமியார் சரஸ்வதி அவர்கள் தான் பாத்திரமாகவோ மாறி, அதே தொனியில் தன் சொந்த மருமகளிடம் பேசப்போய் அவளிடம் செருப்படி வாங்கியதையும், மகன் தன்னை வீட்டை விட்டு ஓட்டி விட்ட சொந்தக் கதையை கண்ணீர் மல்க விவரித்துள்ளார்.

  கதாபாத்திரங்கள் இறந்துப் போகும்படி வந்தால், ஒவ்வொரு சாதி, மதம், ஊர் சம்பிரதாயம் படி, பிணத்துக்கு செய்ய வேண்டிய சடங்குகளை விவரமாய் தந்துள்ளார்கள். புத்தகத்தில் குறிப்பிட்டப்படி அப்படியே யதார்த்தமாய் மூக்கில் பஞ்சு வைத்து, ஒப்பாரி, நீர்மாலை என்று சுடுகாடு வரை எடுத்துப் போய் தவறுதலாய் நெருப்பு வைக்கும் அளவு காட்சியில் ஒன்றிப்போன  "தாலிபாக்கியம்" தொடர் எடுத்த இயக்குனர் திரு.விநாயகம் மெய்சிலிர்க்க தன் அனுபவங்களை விவரிக்கிறார்.

  இப்புத்தகம் தமிழ் பல்கலைகழகங்களில் தொலைக்காட்சி தொடர்களை ஆய்வு செய்யும் முனைவர் பட்டம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிழைத் திருத்தங்களுடன், மூன்றாம் பதிப்பு கண்ட இப்புத்தகத்தின் விலை ரூபாய் நூறு. இப்புத்தகத்தை எழுதிய நாலு இல்லத்தரசிகளான மாலா, லீலா, அம்புஜம், பாக்கியம் ஆகியோர் பல ஆண்டுகளாய் தொலைக்காட்சி தொடரைப் பார்த்தே உயிர்வாழ்ந்தவர்கள்  என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

  மொத்தத்தில் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கட்டாயம்  படிக்க வேண்டிய புத்தகம் இது என்பது மிகையில்லை.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |