ஜனவரி 13 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
பங்குச்சந்தை ஒரு பார்வை
காந்தீய விழுமியங்கள்
நையாண்டி
மஜுலா சிங்கப்புரா
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  மஜுலா சிங்கப்புரா : உன்னால் முடியும் தம்பி
  - எம்.கே.குமார்
  | Printable version |

  நீங்கள் ஆத்மார்த்தமாக அடைய விரும்பும் விஷயம் எதுவானாலும் அதை எத்தகைய தீவிர முயற்சியுமின்றி கூட அடையமுடியும் என்கிறார்கள் அறிஞர்கள் சிலர். 'ஜே.ஜே. சில குறிப்புகளில்' சுந்தர ராமசாமி அவர்கள் கூட இத்தகைய ஒரு பார்வையை முன் வைப்பார். கோப்மேயரும் இதுபற்றியெல்லாம் சொல்லியிருப்பதை கண்ணதாசன் பதிப்பகத்தார் குறைந்த பணத்தில் காட்டியிருப்பார்கள். இதுபோக இன்னபிற சுயமுன்னேற்ற ஆசிரியர்களும் தன் வாழ்வில் அதை வைத்து கடுகளவாவது 'சுய முன்னேற்றம்' அடைந்திருப்பார்கள். இது தனிமனிதனின் உள்ளார்ந்த வேண்டுதல்கள் என்பதையடுத்து ஒரு குழுவினரின் ஆசையாகவோ கனவாகவோ பிரம்மாண்டமாக உருப்பெரும் பட்சத்தில் என்ன நடக்கும்?

  உலகக்கோப்பையின் எல்லா கிரிக்கெட் மேட்சுகளிலும் இதுவரை இந்தியாவே பாகிஸ்தானை வெற்றிகண்டுள்ளது என்பதற்கு 'ஒரு மிகப்பெரிய குழுவினரின் எண்ண வேண்டுதல்களும் விருப்பங்களும் ஆத்மார்த்த ஆசைகளும் முன்னோடியாய் அமைந்ததிருந்ததுவும்' ஒரு காரணம் என்று யாராவது சொல்லும் போது அதை நான் நம்பாமல் இருப்பதில்லை. உடனே இது ஏன் அதற்கடுத்த ஆஸ்திரேலியா-இந்தியா மோதலின் போது பலிப்பதில்லை என்றெல்லாம் சிலர் புத்திசாலித்தனமாய் கேட்கிறேன் பேர்வழி என்று என்னிடம் கேட்பார்கள். அது ஏன் என்பது, நம்மை விட இந்திய அணிக்கு மிக நன்றாகத் தெரியும். நம்மால் முடியுமா என்கிற ஒரு சுயநம்பிக்கையிழப்பின் அடையாளம் தான் அது. ஆனால் பாகிஸ்தானின் மோதல் நிஜ யுத்தத்தின் மறுபிறப்பு; பிரதிபலிப்பு. 'அதில் நாம் தோற்பதா?' இல்லை 'தோற்றுவிட்டுத்தான் ஊர் வர முடியுமா?'

  'எதைச்செய்யப்போகிறோம் என்பதை முழுவதுமாய் தீர்மானித்துவிட்ட பிறகு அடுத்து நீங்கள் செய்யவேண்டியது அதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டியது தான்' என்று ஆபிரஹாம் லிங்கன் சொல்கிறார். மனதுக்குள்ளே உயிர்க்கும் அப்பிம்பமானது உதிர்த்து மேலெழும்பி தகித்து முழு உணர்வுடன் வீசும் நேரத்தில் நீங்கள் ஓட்டை வலையைப், 'போட்டு வைப்போமே' என்று போட்டு வைத்தால் அதிலும் கூட சில பெரிய மீன்கள் மாட்டிக்கொள்ளலாம். மாட்டிக்கொள்ளலாம் என்பதென்ன? மாட்டும்! இதுதான் வரலாறு சொல்லும் உண்மை!

  ஆக இவ்விரு விஷயங்களிலும் நாம் புரிந்துகொள்ள ஏதுவாவது, முழுமனத்துடன் ஒரு செயலில் நாம் இறங்கும் பொழுது அது தொடர்பான அனைத்து உதவிகளும் வழிகளும் தானாகவே நமக்கு பட்டும் படாமலும் வந்து சேரும். படக்கென்று பிடித்துக்கொள்வது நமது முயற்சியில் இருக்கிறது என்பதாகும்.

  இங்குதான் வெற்றி பெற்றவர்கள் வருகிறார்கள். சிங்கப்பூரின் நாயகருக்கு அவ்வகையில் எண்ணற்ற வழிகள் இரவிலும் பகலிலும் கனவிலும் நனவிலும் அருகிலும் தொலைவிலும் என அலைகடலில் மிதக்கும் தக்கைகள் போல வந்து வந்து போயிருக்கின்றன. அவற்றில் சில காதலியாயிருந்த மனைவி வடிவிலும் இன்னும் சில தோழமையின் வடிவிலும் இன்னும் சில முகமறியா நண்பர்கள் வடிவிலும் பலவை உள்ளூணர்வின் அடிப்படையில் வந்து கை கொடுத்துவிட்டுப்போனவைகளாகவும் இருந்திருக்கின்றன. அத்தகைய ஆச்சரியப்படத்தக்க நட்புகளில் ஒன்றுதான் திரு. லீ குவான் யூ விற்கும் டச்சு நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய பொருளாதார நிபுணரும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தொழில் ஆய்வுக்குழுத்தலைவருமான டாக்டர். ஆல்பர்ட் வின்சிமியுஸ் (Dr.Albert Winsemius)க்கும் இடையிலானதாய் இருந்திருக்கிறது.

  சிங்கப்பூர் என்றதும் பொருளாதார ரீதியாக மிகவும் முன்னேறிய நாடு என்று நம் மூளைக்குள் உணரச்செய்யும் வித்தையை லீ அவர்களுடன் இணைந்து வரலாற்றில் உருவாக்கியவர் என்பதால் இவரைப் பற்றித்தான் நாம் முதலில் பேசப்போகிறோம்.

  தொழில்முனைப்புக்கான இயங்குதளம் இருக்கிறதா என்பதையறியவும் அதற்கான முஸ்தீபுகளில் வழி காட்டவும் ஐக்கிய நாட்டு நிறுவனம், ஆய்வுக் குழு ஒன்றை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தது. அக்குழுவின் தலைவராக 1960 ஆம் ஆண்டு வந்து இறங்கினார் வின்சிமியுஸ். வந்து இறங்கியவுடன் சிங்கப்பூரின் அரசியல் சிக்கல்களையும் நாட்டு புவியியல் அமைப்பையும் ஆராய்ந்த அவர் சற்றும் தயங்காமல் இரு வேண்டுகோள்களை, பிரிக்கப்படாத மலேசிய ஆளுமைக்குட்பட்ட- சிங்கப்பூரின் அப்போதைய பிரதமரான திரு. லீயின் முன் வைத்தார். சொல்லப்பட்ட முதல் விஷயம் ஒன்றுமில்லையே என்று எண்ணி மகிழ்ந்த லீ அவர்களுக்கு இரண்டாம் யோசனை தலையில் கல்லைத் தூக்கிப்போட்டது போலிருந்திருக்கவேண்டும். ஒன்றும் புரியாமல் விழித்தவர் நடக்கக்கூடியதுதானா இது என்று தன்னையே கேட்டுக்கொண்டார். அப்படி வின்சிமியுஸ் சொன்னதுதான் என்ன?

  முதல் வேண்டுதலாய் அவர் முன் வைத்தது, 'எக்காரணம் கொண்டும் ஒரு சிலையை அகற்றக்கூடாது' என்பதுதான். அப்போதே சிலைப்பிரச்சனையா என எண்ணாதீர்கள். காரணமிருக்கிறது. அச்சிலையில் வடிவமாயிருந்தவர் 1819 ல் இந்தியாவிலிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் வாயிலாக 'சிங்கப்புரா' எனப்பட்ட 'கடற்கொள்ளையர்களும் நாகரிகமற்றவர்களும்' வாழும் காட்டுப்பகுதிக்கு தளபதியாகவும் ஆட்சியாளராகவும் வாணிபம் நடத்தும் மேலதியாரியாகவும் அனுப்பப்பட்ட சர் ஸ்டாம்·போர்டு ரா·ப்பிள்ஸ். மாடர்ன் சிங்கப்பூரின் தந்தையாக கருதப்படும் இவருடைய சிலையை எக்காரணம் முன்னிட்டும் நீங்கள் எடுத்து விடக்கூடாது என்பதுதான் வின்சிமியுஸின் முதல் வேண்டுகோள்.

  இக்கருத்தில் அப்போதைய ஆட்சியாளர்களில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவில்லை. ஏனெனில் ரா·ப்பிள்ஸ் மட்டும் அச்சமயத்தில் சிங்கப்புராவிற்கு வருகை தந்திருக்காவிடில் தென்கிழக்கு சீனாவின் ஒரு பிரதேசமான 'குவாண்டாங்' மாநிலத்திலிருந்து திரு. லீ குவான் அவர்களின் கொள்ளுத்தாத்தா உட்பட யாரும் இங்கே சிங்கப்பூருக்கு வியாபரம் செய்ய, பிழைக்க, வந்திருக்க மாட்டார்கள் என்பதும் அச்சிலையாய் இருந்தவரின் மேல் இவர்கள் வைத்திருந்த மரியாதைக்கும் நன்றிக்கும் ஒரு காரணமாகும்.

  அந்நன்றி முழுமையடைவதற்கு முன் அப்படி இங்கு வந்த 'ரா·ப்பிள்ஸ்' என்பவர் யார் என்பதை சுருங்கச்சொல்லிவிட்டுச்செல்வோம்.

  கி.பி 1781 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் தேதி பிறந்து கிழக்கிந்தியக் கம்பெனியில் ஒரு எழுத்தராய் வாழ்க்கையைத் தொடங்கிய ரா·ப்பிள்ஸ், தனது இருபத்து நான்காவது வயதில் மலேயாவின் வாணிப நகரான (டச்சுக்காரகளிடமிருந்து பிடுங்கப்பட்ட) பினாங்குக்கு வந்தார். 'இராபர்ட் கிளைவ்' போன்றவர்களையே மிகுதியாகக் கொண்டு உலகத்தைப் பிடித்து வைத்திருந்த கிழக்கிந்தியக்கம்பெனிக்கு இவரும் எவ்விதத்திலும் வேறுபடவில்லை. தனது சுறுசுறுப்பால், வேகத்தால் குறுகிய காலத்தில் நல்ல பெயரை எடுத்து 'பென்கூலன்' நகரின் வாணிபத்தலைவராயிருந்த இவரை, இந்தியாவில் ஆட்சியிலிருந்த லார்ட் ஹேஸ்டிங் பிரபுவுக்குப் பிடித்துப்போய் விட, மலேயா தீபகற்பத்தின் தென்முனையில் வாணிபத்தளம் ஒன்றை நிறுவுமாறு வேண்டிக்கொண்டார். 'இந்தியானா' என்ற கப்பலில் ஏறி சிங்கப்பூர் வந்திறங்கினார் ரா·ப்பிள்ஸ். தன்னோடு நூறு இந்தியப்படைவீரர்களையும் பாதுகாப்பு மற்றும் பிற வேலைகள் நிமித்தமாக அழைந்து வந்திருந்தார். ஆங்காங்கு சதுப்பு நிலக்காடுகளும் அடர்காடுகளும் போக கரையோரங்களில் குடிசை குடிசையாக கொஞ்சம் பேர் வாழ்ந்துவந்தார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை நூற்றிலிருந்து இருநூறுக்குள் இருக்குமாம். அவர்கள் தான் சிங்கப்பூரின் ஆரம்பக் குடியேறிகள், மலேயாக்காரர்கள். சர் ரா·ப்பிள்ஸின் அவ்வருகைக்குப்பின்னரே சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பிழைப்பதற்கு மக்கள் வர ஆரம்பித்தனர். (இன்னொரு விஷயத்தையும் இங்கே சேர்த்தாக வேண்டும், அவ்வாறு வந்த ரா·ப்பிள்ஸ் அவர்கள் பினாங்கிலிருந்து தன்னோடு கூட்டிவந்தவர்களில் ஒருவர்தான் செல்வச்சீமானும் படித்தவரும் தொழிலதிபருமாகிய திரு. நாராயணபிள்ளை! நவீன சிங்கப்பூரின் முதல் தமிழ் காலடி இவருடையது.)

  சரி, இப்படியாய் ஆரம்பித்த ரா·ப்பிள்ஸ் அவர்களின் மீது இவர்கள் கொண்ட மரியாதையில் ஒரு காரணம் இருக்கிறது. பொருளாதார மேதை வின்சிமியுஸ் சொன்னதின் உட்பொருள் என்ன? அவர் ஏன் அப்படிச்சொல்லவேண்டும்? சில்லறையை வைத்து எதையும் வளைக்கலாம், சிலையை வைத்து என்ன செய்ய முடியும்? வியாபாரிகளல்லவா? எப்போதும் தந்திரம் தான். அதுதானே அவர்களின் முதல் மூலதனம். வெளிநாட்டிலிருந்து வாணிபம் செய்ய உள்ளூருக்கு வருபவனின் கண்களுக்கு முதலில் படும்படி எதை வைக்க வேண்டும்? அவனுடைய முதலீட்டு மனத்தின் ஆணிவேரையே உருவி தன்னையறியாமல் இப்பூமிக்குள் ஊன்றிகொள்ளும் அளவுக்கு பிடித்தமானதை அத்தகைய எண்ணத்தை நிலை நாட்டக்கூடியதையல்லவா முன் நிறுத்தவேண்டும்? அதற்குத்தான் அச்சிலை!

  அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் தொழில்சம்பந்தமான அனைத்து செய்முறைகளையும் சிங்கப்பூர் தெரிந்துகொள்ள இருக்கும் இச்சூழ்நிலையில் பிரிட்டிஷ்காரரான ரா·ப்பிள்ஸின் சிலைக்குக்கீழே ஒரு ஜனநாயக அரசு இருக்குமேயானால் எல்லோரும் எளிதில் இங்கே காலூன்ற சம்மதிப்பார்கள் என்பது அவரின் முதல் கணக்கு; மூலக்கணக்கு. கணக்குக்கு விடை இருக்குமல்லவா? விடை இருந்தது. இன்றும் இருக்கிறது. அதுதான் ஆரம்பம்.

  (தொடரும்..)


  சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

  நடிகர் சங்கம் மௌன ஊர்வலம்.

  சென்னை. ஜன. 18. சென்னையின் முக்கியப் பகுதியில் இயங்கி வந்த ஐந்து தியேட்டர்கள் கொண்ட பிரபல தியேட்டர்வளாகம் நேற்றோடு மூடப்பட்டதைக் குறிக்கும் வகையில் நடிகர் சங்கமும் தயாரிப்பாளர்கள் சங்கமும் ஒன்றிணைந்து இந்த மௌன ஊர்வலத்தை நடத்தினர்.

  இப்போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தருவோம் என்று 'ஹீரோக்கள் சங்கம்', 'வில்லன்கள் சங்கம்' மற்றும் 'துணை நடிகர் நடிகைகள் சங்கம்' ஆகியவை கூறியிருந்த நிலையில், 'நகைச்சுவை நடிகர் சங்கமும்' 'தமிழ்ப் பட கதை- திரைக்கதையாசிரியர் சங்கமும்' மூன்று முறை பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தது. இந்நிலையில் அனைத்து நடிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஐந்து முறை நடத்திய பேச்சு வார்த்தையில் ஒரு முடிவு ஏற்பட்டு நேற்று இப்போராட்டம் நடத்த முன்வந்தனர்.

  விழாவில் பேசிய நடிகர் சங்கங்களின் 'ஒருங்கிணைப்பாளர்' இத் திரைவளாகம் பழம் பெருமை வாய்ந்தது என்றும் புரட்சித்தலைவர், நடிகர்திலகம், சூப்பர்ஸ்டார், சூப்பர் ஆக்டர் ஆகியோரின் பல படங்கள் இங்கு திரையிடப்பட்டதாகவும் சொன்னார். விழாவில் கலந்துகொண்ட இளம் நடிகை ரூபாதிவ்யா தான் நடித்த இரண்டு படங்களுமே இத்திரையரங்கில் முப்பது நாட்கள் ஓடி வெற்றிவிழா கண்டதையும் நினைவு கூர்ந்தார். விழாவில் பேசிய இளம் நடிகர் சூர்யபிரதன் தனக்கும் தன்னுடன் முதல் படத்தில் நடித்த நடிகை குட்டி ஜெயஸ்ரீக்கும் காதல் எதுவும் இல்லை எனவும் அதெல்லாம் பத்திரிகைகளின் இமேஜினியூஸ் (வதந்தி) எனவும் கூறினார். ஊர்வலத்தின் முடிவில் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளாத சில நடிகர் நடிகைகளுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |