Tamiloviam
ஜனவரி 15 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
இது ஆம்பளைங்க சமாச்சாரம் : செல் பேசும் தேவதை
- குகன் [tmguhan@yahoo.co.in]
  Printable version | URL |

வண்டியில் செல்லும் போது ரோட்டை தான் பார்த்து செல்ல வேண்டும். அது தான் நமக்கும், மற்றவர்களுக்கும் நல்லது. அப்படி தான் இது வரை வண்டியில் சென்று கொண்டு இருந்தேன். எனோ திடீர் என்று என் மனம் தடுமாற தொடங்கியது. ஒரு காற்று என்னை கடக்கும் போது தடுமாறியது நான் மட்டுமல்ல, என் வண்டியும் தான். சில விபரிதத்தை தவிர்க்க வண்டியை ஒரமாய் நிறுத்தி விட்டு நறுமணம் வீசிய காற்றை தேடினேன். அழகிய காற்றுக்கு சொந்தக்காரியை தேட எனக்கு அதிக நேர தேவைப்படவில்லை. அந்த சாலையோரம் தேவதை நீ மட்டும் தான் இருந்தாய்.

இந்த உலகத்தில் நீயும், நானும் மட்டும் தான் மனித இனத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் எல்லோரும் மிருக இனத்தை சேர்ந்தவர்கள் என்று தோன்றியது. அழகிய தேவதை கண் முன் வந்து விட்டால் ‘மெல்லிய மணம்’ கிறுக்கு தனமாக யோசிக்கும் என்று நினைக்கிறேன். எல்லோரையும் மிருக இனத்தில் சேர்த்து விட்டு எப்படி நம்மை மட்டும் மனித இனத்தில் சேர்த்துக் கொண்டேன் என்று எனக்கே புரியவில்லை. நீ நடந்து செல்வதை மறைப்பது போல் ஒரு சிலர் நடப்பதால் என் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்திருக்கலாம். ஆனால், நீ, நானும் ஒரு தனி உலகத்தில் வாழ வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.

உன்னை பின் தொடர எனக்கு விருப்பமில்லை. ஆனால், உன் காற்று என் மேல் வீசியதால் நான் உன்னை பின் தொடர்வதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. நீ ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்தாய். நம் முதல் சந்திப்பு அங்கு தான் தொடங்க வேண்டும் என்றால் யாரால் அதை மாற்ற முடியும். உன் பார்வை என் மீது படும்ப்படி நான் சற்று தொலைவில் அமர்ந்தேன். நீ என்னை பார்க்க மாட்டாயா என்று ஏங்கிய படி ஒரு காபியை கொண்டு வர சொன்னேன். நீ கண்ணத்தில் கை வைத்துக் கொண்டு, லேசாக தலை அசைத்து என்னை பார்த்து சிரித்தாய். ‘இன்ப அதிர்ச்சி’ என்று சொல்லுவார்களே அது இது தானா ! பழகிய முகத்தை பார்த்து சிரிப்பது போல் என்னை பார்த்து சிரித்திருக்கிறாய் ! ஒரு வேளை முன் ஜென்ம பந்தம் என்பார்களே இது தானா ? எனக்கு தோன்றிய அதே ஈர்ப்பு உனக்கும் தோன்றி இருக்க வேண்டும். அதனால் தான் நீ என்னை பார்த்து சிரித்தாய்.

"பெண்கள் சிரிப்பு பல அர்த்தம் உண்டு" என்று உள்ளூர ஒரு குரல் கேட்டது. அந்த குரல் என் மனசாட்சிக்கு சொந்தமானது. தேவதை பார்த்த பிறகு திருக்குறளை மறப்பவர்கள் மத்தியில் என் குரலை நான் மறப்பது தவறில்லையே !! என்னை பார்த்து எதோ வார்த்தை சொல்லி சிரித்தாய். உன் கண் இமைகளும் என்னை பக்கத்தில் வர அழைத்தது. “எந்த பெண்ணாவது தனியாக பேசுவாளா ! உன்னை தான் அழைக்கிறாள் போ" என்று இன்னொரு  குரல் என் மனதில் கேட்டது.  மூன்று அடி தூரத்தில் நீ செய்யும் ஒவ்வொரு செய்கையும், என் மனம் மூன்னூறு அடி வானத்தில் பறக்கிறது. என் ஆர்வம் என்னை இறுக்கையில் அமரவிடவில்லை. என் கால்கள் உன்னை நோக்கி நடக்க துவங்கின.

நான் உன் அருகில் வந்ததும், நீ  “ஒரு ப்ளைன் தோசை" என்றாய். நான் இந்த உணவு விடுதியில் வேலை செய்பவன் அல்ல, உன் காற்றில் கரைந்து போனவன் என்று சொல்ல துடித்தேன். நான் பேச தொடங்கும் முன்பு உன் கையை கண்ணத்தில் இருந்து எடுத்தாய். அப்போது தான் நான் புரிந்து கொண்டேன், இது வரை நீ பேசி சிரித்தது 'Wi-Fi' செல்போனில் என்று.

முதலில் 'Wi-Fi' போனில் பேசுபவர்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும். இவர்கள் போனில் பேசுகிறார்களா, தனியா பேசுகிறார்களா என்று ஒன்றும் புரியவில்லை. அவள் பைத்தியமோ இல்லையோ, அவள் பின்னால் சென்ற நான் பைத்தியக்காரன் என்ற எண்ணத்துடன் அந்த உணவு விடுதியை விட்டு வந்தேன்.

oooOooo
                         
 
குகன் அவர்களின் இதர படைப்புகள்.   இது ஆம்பளைங்க சமாச்சாரம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |