ஜனவரி 19 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : யூ டூ விக்ரம்
- ராமசந்திரன் உஷா
| Printable version | URL |

மதிய செய்தியைப் பார்க்கலாம் என்று தொலைக்காட்சியைப் போட்டால், ரஜினிகாந்த்தின் பெயர் தெரியாதப்Rajini oorkavalan பழையப்படம்  ஓடிக்கொண்டிருந்தது.   "பொம்பளைங்க வீட்டு வேலை செய்ரதுதான் அழகு" என்று திருவாக்கு காதில் விழுந்தது. அடடா, என்று அப்படியே நின்று விட்டேன். மன்னன் என்ற படத்தில் இருந்துதான், ரஜினிகாந்த் இத்தகைய பெண் குலத்திற்கு அறிவுரை வழங்கும் வசனங்கள் விட ஆரம்பித்தார் என்று நினைத்திருந்தேன். தொலைக்காட்சியில் செய்திகளுக்குப் பிறகு ஊர்காவலன் படம் தொடங்கும் என்றுப் போட்டார்கள்.

Vijay Asinஆக, ஆரம்ப காலத்திலேயே ரஜினிகாந்துக்கு இந்த மேனியா இருந்திருக்கிறது. அதைப் பார்த்து விஜய் சூடுப் போட்டுக்கொண்டு இருக்கிறார் என்றால், மஜாவில் விக்ரம், அசினைப் பார்த்து பொம்பளையா அடக்கமா வீடுப் போயி சேரு என்று டயலாக் சொன்னார். யூ டூ விக்ரம் என்று கத்தத்தோன்றியது. நடிகர்கள் எப்படி வசனங்களுக்குப் பொறுப்பாவார்கள் என்றுக் கேட்டுவிடாதீர்கள். ஐயா இந்த சூப்பர் ஸ்டார்களுக்கு தெரியாமல் படத்தில் ஒரு அணுவும் அசையாது.

இதைவிடக் கொடுமை, இன்னும் தொலைக்காட்சி தொடர்களில் விதவை என்றால் ஒயிட் அன் ஒயிட் சீரூடையில் காட்சி தருகிறார்கள். ஆனால் நடை முறை அப்படியா இருக்கிறது?  சில வருடங்களாய், இந்த மாற்றத்தைப் பார்த்து வருகிறேன். கணவனை இழந்தப் பெண்கள் பொட்டு வைத்துக்கொள்ளுவதும், பல வயதான பெண்கள் கூட,  இப்பொழுது ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வதும் சாதாரண நிகழ்வாகிக் கொண்டு இருக்கிறது. பொட்டு வைத்துக் கொள்வது பெரிய புரட்சியா என்று நினைக்காதீர்கள். பெண் குழந்தையாய் இருக்கும் முன்பே பொட்டு வைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கும் பொழுது, கல்யாணம் ஆகி கணவனை இழந்தவள், வைத்துக் கொள்ளக்கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது நியாயமா? சத்தமில்லாத சமூகப்புரட்சியாய் தோன்றுகிறது.

இந்த பொட்டு மேட்டருக்குப் போனதும் சரஸ்வதி ஞாபகம் வந்துவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு என் அம்மா வீட்டில் சரஸ்வதி என்ற நடுத்தர வயது பெண் வேலை செய்துக் கொண்டு இருந்தார். கணவன் இல்லை. மூத்த பெண் எட்டாவது வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தாள். மகன் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

என் அம்மாத்தான் முதலில் கண்டிப்பிடித்தார். எப்பொழுதும் பொட்டு வைத்துக் கொண்டு வரும் சரஸ்வதி கொஞ்ச நாளாய் பொட்டு வைத்துக் கொள்ளாமல் வருவதை! மேலும் சரஸ்வதி அடிக்கடி ஞாயிற்று கிழமைகளில்  வீட்டு வேலைக்கு மட்டம் போடுதலும் ஆரம்பித்தது.

அச்சமயம் எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருந்த குடிசைப்பகுதியில் தினமும் மாலையானாலும் ஒலிப்பெருக்கில் "பாவிகளே" என்று பிரசங்கம் ஆரம்பிக்கும். இது எல்லாருக்கும் பயங்கர கோபத்தை தந்து அடிதடி வரைப் போய், ஒலிப்பெருக்கி இடம் மாறி குடிசை பகுதியின் உள்ளே புகுந்தது.

மெல்ல விஷயம் கசிய ஆரம்பித்தது. சரஸ்வதி பிலோமீனாவாக மாறுகிறாள் என்று. என்னம்மா உட்பட எல்லா வீட்டு பெண்களும் கூடி அவளுக்கு, செய்வது தவறு என்றும், மதம் மாறுவது பெற்ற தாயை குறைக்கூறுவதற்கு சமம் என்றெல்லாம் அறிவுரைகள் சொன்னார்கள். இப்படியே போனால், இந்து மதம் என்னவாகும் என்றும் எல்லாரும் கொதித்துப் போனார்கள். சரஸ்வதியை வேலையை விட்டு நிறுத்த வேண்டும் என்றும் சொல்ல ஆரம்பித்தனர். பணம், வேலை என்று மயக்கிவிட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது.

எனக்கு அசிடிட்டி தொந்தரவு உண்டு. முழு வயிறு சாப்பிட்டாவிட்டால் பிரச்சனைதான். அன்று இரவு தூக்கம் வரவில்லை. காரணம் இரவு சேமியா உப்புமா போதவில்லை. ஒரு டம்ளர் மோர் குடித்தும் பசியடங்கவில்லை. வயிற்றில் அமிலம் சுரந்து, வயிற்றில் வலி ஆரம்பித்தது. எழுந்து விளக்குப் போட்டதும் அம்மா வந்துவிட்டார். சூடாய் ஹார்லிக்ஸ் போட்டுக் குடித்துவிட்டு  நாலு பிஸ்கட்டை தின்றதும், வயிற்றில் இரைச்சல் அடங்கியது.

விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தால் சரஸ்வதியின் நினைவு வந்தது. கணவன் இல்லாமல், வீட்டு வேலை செய்து பிழைக்கும் அனாதை. கிடைக்கும் சில நூறு ரூபாய்களில்  வீட்டு வாடகை, படிப்பு, உடை, மருத்துவம் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். எத்தனை இரவுகள் அவர்கள் பசியுடன் துக்கமில்லாமல் புரண்டு இருப்பார்கள். அதே பசியுடன் காலை எழுந்து அவரவர் வேலைக்கும் செல்ல வேண்டும்.

மறு நாள் எழுந்ததும், பாதி ராத்திரியில் எனக்கு தோன்றிய ஞானத்தை  அம்மாவிடம் சொன்னேன். அம்மாவால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. சில நிமிடங்கள் கழித்து, " சும்மாவா சொன்னாங்க பசி வந்தால் பத்தும் பறந்துப் போகும்ன்னு, எப்படியோ அவ கஷ்டம் தீர்ந்தால் சரி" என்றார். சாமி, மதம் போன்றவை எல்லாம் நம்மோட கண்டுப்பிடிப்புதானே? ஏதோ ஒரு கடவுள் அவளுடைய பிரச்சனையை தீர்க்கிறது என்றால், அதை ஏன் மறுக்க வேண்டும் அன்று தோன்ற எண்ணத்தில் இன்றுவரை மாற்றமில்லை.

எல்லா மதங்களும் உண்ணா நோம்பை வலியுறுத்துகின்றன. காரணம் பசி என்றால் என்னவென்று இருப்பவர்களும் அறியவேண்டும் மற்றும் வயிற்றுக்கு ஓய்வு வேண்டும் என்ற மருத்துவ கண்ணோட்டத்திலும்.  தாத்தா ஒரு பொழுது இருப்பதை நாங்கள் எல்லாரும் கேலி செய்வோம். இரவு பலகாரம் - எங்கள் வீட்டு பெரியவர்கள் இரவு அரிசி சாப்பாடுதான் சாப்பிடுவார்கள்- பிறகு ஒரு கிளாஸ் பால், நாலு வாழைப்பழம். இத்தனையும் தின்றுவிட்டு, விரதம் இருந்ததை சொல்லிக் கொண்டு இருப்பார்.

அதைவிட, நகைச்சுவையான விஷயம் ஒன்று.  என் தோழியுடன் போனில் கதைக்க ஆரம்பித்தப்பொழுது, இன்னைக்கு நிறைய வேலை இருக்கு ஞாயிற்றுகிழமையானால், நல்ல சமையல் செய்ய வேண்டும் என்றாள். காரணம் அவள் கணவன் சனிக்கிழமை விரதம் இருப்பாராம். ஆக, விரதம் இருக்கும் அன்று, மறு நாள் என்ன ஸ்பெஷல் செய்ய வேண்டும் என்று அவர் மெனு கொடுப்பார் போல!

சமையலறையிலும், குளிர்சாதப்பெட்டியில்  வகை வகையாய் உணவுப் பொருட்களை வைத்துக் கொண்டு நானும் விரதம் இருப்பேன், பசியைப் பற்றி எனக்கு தெரியும் என்று சொல்வதில் எந்த பொருளும் இல்லை. அடுத்தவேளை உணவு கிடைக்குமா என்றே தெரியாமல், தூக்கம் வராமல் புரளுவது என்பது கொடுமை. அதை தன் குடும்பத்தினரோடு அனுபவித்ததால் என்னவோ,  பாரதி "தனியொருவனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம்" பாடினான்?

சென்ற வாரப் பதிவில் "இதுசத்தியம்" கதையை எழுதியவர் ஜாவர் சீதாராமன் இல்லை, ரா.கி. ரங்கராஜன் என்று நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார்.  ஆனால் சண்முகசுந்தரத்தின் சகோதரியின் பெயர் இன்னும் சரியாய் தெரியவில்லை.

Rajini | Vijay | Vikram

oooOooo
ராமசந்திரன் உஷா அவர்களின் இதர படைப்புகள்.   கொஞ்சம் கதைக்கலாம் வாங்க பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |