ஜனவரி 19 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : வணக்கம் தலைவா!
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

குடித்து விட்டு நிதானம் தெரியாமல் குடிகாரர்கள் செய்யும் ஒரு சில வேலைகளால் அப்பாவி மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் படத்தின் ஒன்லைன் கதை.

Pranathy, Sathyaraj, Susanஅப்பாஸ் - சூசன் இருவரும் காதலர்கள். வனாந்திரமான ஒரு இடத்தில் அப்பாஸின் வண்டி மக்கர் செய்ய, அப்போது அங்கு வரும் சர்தார்ஜி லாரி டிரைவர் சத்யராஜ் அவர்களுக்கு லிப்ட் கொடுக்கும் சாக்கில் சூசனைக் கடத்திச் சென்றுவிடுகிறார். சர்தார்ஜி சத்யராஜைத் தேடி அலையும் அப்பாஸிற்கு முன்னால் சாம்பிராணி போடும் பாய், போலீஸ் ஆபீசர் என்று ஏகப்பட்ட கெட்டப்பில் தோன்றி அப்பாஸை குழப்பி அடிக்கிறார் சத்யராஜ். இதனால் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் நிலைக்குச் செல்லும் அப்பாஸ் தன் நண்பனான பாண்டிச்சேரி எஸ்.ஐ விவேக்கை வரவழைக்கிறார். விவேக்கும் உண்மையைக் கண்டுபிடிக்க மாறுவேடத்தில் சத்யராஜிடம் லாரி கிளினராக சேர்கிறார். ஒரு கட்டத்தில் சத்யராஜின் ஒரு மெடிக்கல் ரிப்போர்ட் விவேக் கைக்கு சிக்க, சத்யராஜ் ஒரு பயங்கரமான சைக்கோ பேர்வழி என்பது தெரியவருகிறது.

இந்த உண்மை தெரிந்ததும் கடத்தப்பட்ட சூசனுக்கு என்ன ஆனதோ என்று தவிக்கும் அப்பாஸ் ஒரு வழியாக சூசனை சத்யராஜ் அடைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார்.  போலீஸ் உதவியுடன் சூசனை மீட்க செல்லும் அப்பாஸிடம், தான் சத்யராஜின் மனைவி என்றும் அப்பாஸ் யார் என்றே தெரியாது என்றும் சூசன் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் அப்பாஸ் கிட்டத்தட்ட மனநோயாளியாகவே மாறுகிறார். எதற்காக அப்பாஸிடம் தானும் சூசனும் அவ்வாறு நடந்துகொண்டோம் என்பதை விவேக்கிடம் சத்யராஜ் விளக்க, அதைக் கேள்விப்படும் அப்பாஸ் மனம் திருந்தி சத்யராஜிடம் மன்னிப்பு கேட்க, ஒரு வழியாக படம் முடிகிறது.

தன்னுடைய வழக்கமான லொள்ளுடன் படத்திற்குப் படம் ஏதாவது வித்தியாசமாக கெட்டப் மாற்றவேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கும் சத்யராஜ் இந்தப்படத்தில், காதல் கொண்டேன் தனுஷ், அபூர்வ சகோதரர்கள் அப்பு கமல் என்றெல்லாம் வேறு கெட்டப் மாற்றி நம்மை ரொம்பவுமே படுத்துகிறார். சமீபகாலமாக தன்னுடைய முக்கால்வாசிப் படங்களில் மற்றவர்களை இமெடேட் செய்வதை வாடிக்கையாக செய்து வரும் சத்யராஜ், ஒரே மாதிரியான போரடிக்கும் இத்தகைய கேரக்டர்களைத் தொடர்ந்து செய்யாமல் ஒரு மாறுதலுக்காக ஆரம்பகால சத்யராஜ் பாணியில் நடித்தால் புண்ணியமாய் போகும்.

அப்பாஸ்.. பாவம் இவரைப் பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை. சத்யராஜ் எதற்காக தன் காதலியைக் கடத்தினார் என்பது தெரியாமல் தவிக்கும் காட்சிகளில் கொஞ்சமாக நடிக்க முயன்றுள்ளார்.

கதாநாயகி சூசன் அப்பாஸுடனும் டூயட் பாடுகிறார். சத்யராஜுடனும் டூயட் பாடுகிறார்.. படம் முழுக்க வழக்கமாக டூயட் பாடும் கதாநாயகியாக வரும் சூசன், அப்பாஸிடம் தான் சத்யராஜின் மனைவி என்று கூறும் காட்சியில் மட்டும் நடிக்க சிறிது முயற்சி செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் பிரணதி வந்த சில நிமிடங்களிலேயே ஒரு டூயட் பாடிவிட்டு இறந்து விடுவதால் அவரது நடிப்பைப் பற்றி நோ கமெண்ட்ஸ்.

Vivekபாண்டிச்சேரி இன்ஸ்பெக்டர் ஏறுச்சாமியாக வரும் விவேக் ஆரம்ப காட்சியிலேயே காக்க காக்க சூர்யாவைப் போன்ற கெட்டப்பில் கலக்குகிறார். சரி படம் முழுக்க இதே ரேஞ்சில் அட்டகாசம் செய்யப்போகிறார் என்று பார்த்தால் தொடர்ந்து வரும் காட்சிகளில் ஷகிலா மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் சேரும் போது டபுள் மீனிங் டயலாக்காக பேசி ரொம்பவும் மூட் அவுட் செய்கிறார். ஆனாலும் சில இடங்களில் குறிப்பாக அம்மா அழைக்கிறார், ஐயா அழைக்கிறார் டயலாக்கில் விவேக்கின் காமெடி ரசிக்கும் விதத்தில் உள்ளது. படத்தில் நளினியும் இருக்கிறார்.

இசை தேவா.. படத்தில் தனக்கே உரித்தான குத்துப்பாடல்களாக போட்டுத் தாக்கியுள்ளார். படத்தின் கதை என்னவோ வித்தியாசமாக இருந்தாலும் அதை திரைக்கதையாக்கும் விதத்தில் ரொம்பவுமே கோட்டை விட்டு விட்டார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். சத்யராஜின் லொள்ளு, சூசனின் கவர்ச்சி, கொஞ்சூண்டு விவேக் காமெடி - இதை  மட்டுமே வைத்து படம் பண்ணிய ஷக்தி சிதம்பரத்திற்கு துணிச்சல் ரொம்பவுமே ஜாஸ்தி.

 

 

oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |