ஜனவரி 20 2005
தராசு
கார்ட்டூன்
காந்தீய விழுமியங்கள்
பங்குச்சந்தை ஒரு பார்வை
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சமையல்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : கடைசி யுத்தம்
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  மதக் கலவரங்களுக்கு நடுவே இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிய நேரத்தில்தான் தனது உண்ணாவிரதத்தை அறிவித்தார். காந்திஜியின் கடைசி உண்ணாவிரதம் என்று குறிப்பிடப்படும் இது உணர்ச்சிப்பூர்வமாக திடீரென்று காந்திஜியே எடுத்த முடிவு. உண்ணாவிரத்தின் நோக்கம், சிதைந்து வரும் இந்தியாவின் கெளரவத்தை மீண்டும் பெறுவது. ஆனாலும் காந்திஜியிடம் அத்தகைய நம்பிக்கை வெகுவாக குறைய ஆரம்பித்திருந்தது.

  'பலன் கிடைக்கவேண்டும் என்பதற்காக நான் உண்ணாவிரதம் இருக்கவில்லை. நான் உண்ணாவிரதம் இருப்பதற்கான காரணமே உண்ணாவிரதம் இருந்தே தீரவேண்டும் என்பதுதான். எனக்கு அதைவிட்டால் வேறு வழியில்லை. ஹிந்து மதம், இஸ்லாம் மதம், சீக்கிய மதம், கிறிஸ்துவ மதம் முதலியவற்றின் அழிவை திக்கற்ற நிலையில் பார்த்துக்கொண்டிருப்பதை காட்டிலும் மரணம் எனக்கு பரிபூரண விடுதலையை கொடுக்கும். நான் இறக்க வேண்டுமாயின், அமைதியாக என்னை இறக்கும்படி விட்டுவிடுங்கள்'  (ஹரிஜன், 18.1.1948)

  என்னதான் ஒற்றுமைக்காக முயன்றாலும் முஸ்லீம் லீக் அமைப்பினர்கள் ஓரே நாளில் நமக்கு நண்பர்களாகிவிடமாட்டார்கள் என்று சர்தார் வல்லபாய் படேல் கூறியிருந்தது அவரை புண்படுத்தியிருந்தது. இந்திய யூனியன் என்பது இந்துக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவிலேயே தங்கிவிட்ட முஸ்லீம்கள் உடனான அனைத்து மதத்தினராலும் உரிமை கொண்டாடப்பட வேண்டிய விஷயம் என்பதை மக்களுக்கு அழுத்தமாக எடுத்தச் சொல்லவேண்டும் என்று நினைத்தார் காந்திஜி. கராச்சியில் சீக்கியர்கள் முஸ்லீம்களால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்தபோது காந்திஜியை எதிர்த்து முஸ்லீம் லீக் குரல் கொடுத்ததும் அவரை விரக்தியில் தள்ளியது.

  இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிதி சம்பந்தமான ஒப்பந்தம் நிறைவேற வேண்டியிருந்தது. காஷ்மீர் பிரச்னை தீர்த்ததால்தான் மற்ற நிதி ஒப்பந்தங்களெல்லாம் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று இந்திய யூனியன் அமைச்சரவை தீர்மானம் இயற்ற, அது பாகிஸ்தானை எரிச்சலுக்குள்ளாக்கியது. காந்திஜியின் உண்ணாவிரதத்தாலும், நல்லெண்ண சமிக்ஞைக்காக அமைச்சரவை தீர்மானத்தை மாற்றி நிதி ஒப்பந்தத்தை அமலுக்கு கொண்டுவருவதாக அறிவித்தது. காந்திஜி, இதை மகத்தான செயல் என்று குறிப்பிட்டார்.

  எழு உறுதிமொழிகளை இந்திய யூனியன் அரசு நிறைவேற்றுதாக உறுதியளித்ததை தொடர்ந்து காந்திஜியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. முஸ்லீம்கள் விட்டுச்சென்ற மசூதிகளை ஆக்ரமித்திருக்கும் மற்ற மதத்தினர் அவற்றை முஸ்லீம்களிடமே திருப்பி தந்துவிடவேண்டும். அதே போல மற்ற மதத்தினரின் பகுதிகளை முஸ்லிம்களும் விட்டுக்கொடுத்துவிடவேண்டுமூ. என்பது அந்த ஏழு உறுதிமொழிகளில் ஒன்று.

  ஜனவரி 26 ஆம் தேதி. சுதந்திர தினம்.  (1950ல் இந்தியா குடியரசாகும் வரை ஜனவரி 26 ஆம் தேதிதான் சுதந்திர தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது). சுதந்திர தின செய்தியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று காந்திஜியிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்.

  'நாம் பார்க்காத, அனுபவிக்காத சுதந்திரத்திற்காக நாம் போராடிக்கொண்டிருந்தபோது, சுதந்திர தினத்தை அனுசரிப்பது என்பது முற்றிலும் பொருத்தமான விஷயமாக இருந்தது. இப்போது அத்தகைய சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். நமக்கு அதிலிருந்த மயக்கம் தீர்ந்துவிட்டது போல்தான் தோன்றுகிறது. உங்களுக்கு மயக்கம் தீராவிட்டாலும் என்னைப் பொறுத்தவரையில் அந்த மயக்கம் தீர்ந்துவிட்டது'  (ஹரிஜன், 1.2.1948)

  ஜனவரி 28ஆம் §தி, காந்திஜியின் கடைசி பிரார்த்தனை கூட்டம். பிரார்த்தனை கூட்டத்திற்கு ஓரேயொரு முஸ்லீம் மட்டுமே வருகை தந்திருந்தது அவரை வேதனைக்குள்ளாக்கியது. கத்தியவாரிலிருந்து இரண்டு தொழிலாளர்கள் காந்திஜியை பார்க்கவேண்டி அனுமதி கேட்டபோது அவர் சொன்னது,  'நாளை உயிரோடிருந்தால், பிரார்த்தனை முடிந்ததும் அவர்களை சந்திக்கிறேன்'

  காந்திஜியின் இறுதிக்காலத்தை மனவேதனையுடனும் இறுக்கத்துடனும் வைத்திருந்ததுதான் சுதந்திர இந்தியா அவருக்கு கொடுத்த பரிசு. அவரை புரிந்து வைத்திருந்தவர்கள் பாராட்டினர்; புரிந்து கொள்ளாதவர்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிப்போனார்கள். இந்திய யூனியனிலும் இருப்பு கொள்ளாமல் பாகிஸ்தானுக்கும் போக முடியாமல் இருந்தவரை, இனி அவர் இருக்க வேண்டிய இடமென்று சிலர் கைகாட்டிய இடம் இமயமலை!

  'இந்நிலையில் எனக்கு உள்ள ஓரே வழி, கடவுளின் கட்டளைகளை பின்பற்றுவதேயாகும். மனிதர்களின் உள்ளத்தில் உள்ளே கடவுள் அவர்களுடன் பேசுகிறார். நமது ஒரே உண்மையான நண்பர் கடவுள்தான். நாம் முற்றிலும் அவருடைய கையிலேயே இருக்கிறோம். இமயமலைக்கு சென்று அங்குள்ள அமைதியை ஆனந்தமாக அனுபவிப்பதில் நான் அக்கறை கொள்ளவில்லை. இந்தக் கொந்தளிப்பான சூழ்நிலையிலிருந்து நான் எவ்வளவு அமைதியைப் பெற முடியுமோ அதைக் கொண்டு நான் திருப்தி அடைவேன். எனவே, நான் உங்கள் மத்தியிலேயே தங்கியிருக்க விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும் இமயமலைக்கு செல்லும் பட்சத்தில் உங்களுடைய சேவகனாக உங்களை நிச்சயம் பின்தொடர்ந்து வருவேன்'  (ஹரிஜன், 3.2.1948)

  ஹே ராம்!

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |