ஜனவரி 20 2005
தராசு
கார்ட்டூன்
காந்தீய விழுமியங்கள்
பங்குச்சந்தை ஒரு பார்வை
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சமையல்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  பங்குச்சந்தை ஒரு பார்வை : தடுமாறும் சந்தை
  - சசிகுமார்
  | Printable version |

  சென்ற வாரம் நிலவிய அதே சூழலுடன், இந்த வாரம் மேலும் சில காரணங்களும் சேர்ந்துகொள்ள சந்தை திக்கு தெரியாமல் தடுமாறியது. குறியீடுகள் மேலும், கீழும் ஊசலாடிக்கொண்டே இருந்தது. அமெரிக்க டாலர் விலையில் எழுச்சி, அமெரிக்க வட்டி விகிதம் உயரக் கூடுமென்ற எதிர்பார்ப்பு, இதனால் இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் (FII) முதலீடு குறையுமோ என்ற அச்சம் போன்றவை முதலீட்டாளர்களைக் கலவரப்படுத்தியது. கடந்த வாரம் போலவே இந்த வாரமும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 300 கோடிக்கும் அதிகமாகப் பங்குகளை விற்றனர். 6173 புள்ளிகளுடன் இந்த வாரம் தொடங்கிய சந்தை, 6183 என்ற நிலையில் இந்த வாரம் வர்த்தகம் முடிவடைந்தது.

  குறியீடு 6100 - 6200க்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது. சில நேரங்களில் சரிவதும், பிறகு எழுவதுமாக இந்த வாரம் ஒரு நிலையற்ற Volatile சூழலிலேயே சந்தை இருந்தது. திங்களன்றும், வியாழனன்றும் முறையே 20 மற்றும் 9 புள்ளிகள் உயர்வைப் பெற்ற மும்பை பங்குச் சந்தைக் குறியீடு செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் முறையே 1 மற்றும் 19 புள்ளிகள் சரிவைக் கண்டது. NSE குறியீடு ஒற்றை இலக்கத்தில் சரிவையும் உயர்வையும் பெற்று 1925 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவைந்தது.

  வெளிநாட்டு

  முதலீட்டு நிறுவனங்களின் (FII) முதலீடு குறையக்கூடுமென்ற அச்சம் தவிர மேலும் சில காரணங்களும் குறியீடுகளை சரிய வைத்தன. இந்த வாரம் சரிந்தப் பங்குகளில் வங்கிப் பங்குகளும், பார்மா (Pharma) பங்குகளும் அரசின் சில நடவடிக்கைகள் காரணமாகவே சரிந்தன.

  பார்மா நிறுவனங்களுக்கு புதிதாக வரி விதிப்பு முறையை அரசு அறிவித்துள்ளது. தற்பொழுதுள்ள மருந்து தயாரிப்புச் செலவுகளின் மீதான வரி விதிப்பிற்குப் பதிலாக மருந்துகள் விற்கப்படும் விலை மீது (MRP) வரி விதிக்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது பார்மா நிறுவனங்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்கப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தற்பொழுது மருந்து தயாரிக்கப்படும் செலவை மட்டுமே கணக்கில் கொண்டு பார்மா நிறுவனங்கள் விரியைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. வரி மற்றும் பிறச் செலவுகள் போக ஒரு குறிப்பிட்ட லாபத்தை முடிவுச் செய்து, மருந்து விற்கும் விலையை (MRP) நிர்ணயம் செய்கின்றன. இதன் மூலம் பார்மா நிறுவனங்களுக்கும், மருந்துகளை விற்கும் விற்பனையாளர்களான மருந்துக் கடைகளுக்கும் நல்ல லாபம் கிடைத்தது. சில மருந்து விற்பனையில் சுமார் 50% அளவுக்கு கூட மருந்த்துக் கடைகளுக்கு லாபம் கிடைத்து கொண்டிருந்த நிலை. இந்தப் புதிய வரி விதிப்பு இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்.

  இந்த புதிய வரி விதிப்புகளால் என்ன லாபம் ? அரசுக்கு வருமானம் கிடைக்கும். மருந்துகள் விலை ஓரளவுக்கு குறையும். மருந்துகளின் விலை, தயாரிப்புச் செலவை விட அதிகமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அரசு தெரிவித்திருந்தது. அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைத்தான் இந்த வரி விதிப்பு. ஆனால் இந்த வரி விதிப்பு நிறுவனங்களின் லாபத்தை குறைக்கும் என்பதால் பார்மா பங்குகளை பாதித்தது. பார்மா பங்குகள் சரிந்தன. இது மட்டுமில்லாமல், ரேன்பேக்சி நிறுவனம், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தனது லாபத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக காலாண்டு அறிக்கையில் தெரிவித்தது. இதுவும் பார்மா பங்குகளை கடுமையாகச் சரிவடையச் செய்தது. பயோகான், சிப்லா போன்ற நிறுவனங்கள் நல்ல அறிக்கையைக் கொடுத்தாலும், இந்த வாரம் பார்மா பங்குகளுக்கு வீழ்ச்சி வாரம் தான்.

  அடுத்ததாக கடந்த மாதம் வரை ஏற்றமடைந்துக் கொண்டிருந்த வங்கிப் பங்குகள் இந்த ஆண்டு துவக்கம் முதலே லாப விற்பனையால் (Profit Booking) கடுமையானச் சரிவையே கண்டன. வங்கிப் பங்குகள் ஏற்றமடைய முக்கிய காரணம், வங்கித் துறையில் அரசு மேற்கொள்ளவிருந்த சீர்திருத்த நடவடிக்கைத் தான். வங்கித் துறையில் 74% அளவுக்கு அந்நிய முதலீட்டுக்கு வழி வகுக்கும் திட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்த எதிர்பார்ப்பு மற்றும் வங்கியின் கடன் வழங்கலில் இருந்த ஏற்றம் இதனாலேயே வங்கிப் பங்குகள் எகிறிக் கொண்டிருந்தன. ஆனால் அரசின் சீர்திருந்த நடவடிக்கைக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர், நிதியமைச்சர் மற்றும் இடதுசாரிக்கட்சிகள் இடையே இந்த வாரம் இந்தச் சீர்திருத்த நடவடிக்கை குறித்து ஒரு கூட்டம் நடைபெற்றது. 74% அளவுக்கு அந்நிய முதலீட்டை ஊக்குவிக்ககாமல் படிப்படியாக அந்நிய முதலீட்டை கொண்டு வர வேண்டுமென்பதே இடதுசாரிகளின் நிலை. இதையடுத்து வங்கித் துறைச் சீர்திருத்த நடவடிக்கைகளில் அரசு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது. வங்கிப் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்தன. கடந்த மாதம் ரூ650ஐ கடந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் இந்த வாரம் ரூ575 க்கு வந்து விட்டது. இதே நிலை தான் பல வங்கிப் பங்குகளிலும்.

  சரிவடைந்த மற்றொரு துறை ஆட்டோமொபைல். பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் பொழுது இந்தக் காலாண்டு லாபத்தில் வீழ்ச்சிக் கண்டுள்ளது. இதையடுத்து பஜாஜ் பங்குகள் சரிவுற்றன. இதே துறையின் மற்ற பங்குகளான மாருதி, டாட்டா மோட்டார்ஸ் போன்றவையும் சரிந்தன.

  இந்த வாரம் வெளியான நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை ஒரு குழம்பிய குட்டை போலத் தான் இருந்தது. சில நிறுவனங்கள் நல்ல அறிக்கையை கொடுத்தன. சில நிறுவனங்களின் அறிக்கை ஏமாற்றத்தையே கொடுத்தது. மென்பொருள் துறையில் இன்போசிஸ் கடந்த வாரமே நல்ல அறிக்கையைக் கொடுத்தது, ஆனால் சத்யம் ஒரு சுமாரான அறிக்கையையே கொடுத்தது. இன்று வெளியான விப்ரோ கூட சந்தையின் எதிர்பார்ப்பை ஒட்டியே அறிக்கையைக் கொடுத்தது. பெரிய ஏற்றமேதுமில்லை. ஹிரோ ஹோண்டா, HDFC, ICICI, UTI போன்றவை நல்ல அறிக்கைகளைக் கொடுத்தன. ஆனால் பஜாஜ், ரேன்பேக்சி போன்ற நிறுவனங்களின் அறிக்கைகள் ஏமாற்றமளித்தன.

  சந்தையில் நிலவும் சூழ்நிலையும், நிறுவனங்களின் அறிக்கையும் சந்தையை கடுமையாக பாதித்துள்ளது. ஆனால் பல நிறுவனங்களின் பங்குகள் தற்பொழுது மிகக் குறைந்த விலைக்கு சந்தையில் கிடைக்கிறது. தற்சமயம் சரிவடைந்துள்ள பார்மா, வங்கி மற்றும் மென்பொருள் துறைகளின் எதிர்கால கால வளர்ச்சிக்கான சூழல் ஆரோக்கியமாகவே இருக்கிறது. நிறுவனங்களின் அடித்தளமும் இந்திய பொருளாதார எதிர்கால வளர்ச்சியும் நல்ல நிலையிலேயே இருக்கிறது. நல்லப் பங்குகள் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கும் சூழலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |