ஜனவரி 20 2005
தராசு
கார்ட்டூன்
காந்தீய விழுமியங்கள்
பங்குச்சந்தை ஒரு பார்வை
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சமையல்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  மஜுலா சிங்கப்புரா : ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக!
  - எம்.கே.குமார்
  | Printable version |

  இடையூறுகள் இன்றி கிடைக்கும் இன்பமோ தடைகளற்று வந்தடையும் நன்மைகளோ கஷ்டங்கள் காணாத வெற்றிகளோ அனுபவங்கள் தராத முதுமையோ முழுதான பயனை எப்போதும் உணரத் தருவதில்லை. நேராக விமானத்தில் போய் இமயமலை உச்சியில் இறங்கி கொண்டாடுவதில் என்ன இன்பம் இருந்துவிட முடியும்? நான்குசுவர் அறைக்குள்ளே உண்டு உறங்கி சிந்தனையற்று வாழ்ந்துவரும் மனிதன் ஐம்பது வயதில் வெளியில் வந்தால் பூனையைப்பார்த்து பயப்பட மாட்டானா?

  'இன்றும் கிடைக்கும், நாளையும் கிடைக்கும் பொருள்' என்று ஒன்றிருந்தால் அது இன்பமானது என்றாலும் கூட கணம் தோறும் ரசிக்கத்தோன்றுமா அதை? ஓடி ஒளிய வேண்டும். மறைந்துகொள்ள வேண்டும். கிடைக்க முடியாத பொருளாய் அவ்வளவு சீக்கிரம் அது அடைய முடியாத பொருளாய் பழிப்புக் காட்ட வேண்டும். அப்போதுதானே பறிக்கத்தோன்றும். தினம் தோறும் பௌர்ணமி என்றால் எத்தனை பேர் நம்மில் கடற்கரையில் படுத்துக்கொண்டு அதை ரசித்துக்கொண்டிருப்போம்? 'மாதத்தில் ஒருநாள் மட்டும் தான் தம்பி, வாய்ப்பை நழுவவிடாதே' என்ற அந்நிலாவின் கோரிக்கையை ஏற்றல்லவா பௌர்ணமியை ரசிக்கக் காத்திருக்கிறோம். நிமிடந்தோறும் கிடைக்கும் பொருள் இல்லை என்பதால் அல்லவா காதலியின் ஒற்றைப்பார்வைக்கு ஏதாவது ஒரு தெருவின் மூலையில் மணிக்கணக்காய் நின்றுகொண்டிருக்கிறோம். சுற்றி யாரும் பார்த்துவிடும் அபாயத்தின் உணர்வோடு இருப்பவனுக்கல்லவா காதலியின் ஒரே ஒரு மெய்த்தீண்டலில் உயிர் உடல் உலகங்கள் ஒன்றாக விழித்துக்கொள்கின்றன!

  அவ்வளவு ஏன்? எப்போதும் பங்களாதேசத்திற்கெதிராகவே ஒருவன் செஞ்சுரி அடிப்பதால் என்ன பெரிய பேட்ஸ்மேனாய் அவன் ஆகிவிட முடியும்? குறிபார்த்து குச்சியைத்தூக்கும் ஆஸ்திரேலியா பௌலர்களுக்கும் பாகிஸ்தான் பௌளர்களுக்கும் எதிராக அல்லவா நல்ல பேட்ஸ்மேன் என்பவன் அடித்து ஆடவேண்டும்? அல்லது திறமையான ஒரு பேட்ஸ்மேனை 'அவுட்' ஆக்குவதல்லவா ஒரு நல்ல பந்துவீசுபவனின் உண்மையான ரசிக்கத்தகுந்த வெற்றி. அந்தச்சுவை தருவதை கத்துக்குட்டிகளிடம் பெறும் வெற்றி தருமா என்ன? மட்டையடிக்கவே தெரியாத பதினோராவது ஆளுக்கு 'யார்க்கர்' போட்டு ஸ்டம்பைப் பறக்கவைப்பதில் என்ன பெருமை இருக்கமுடியும்?

  டாக்டர் வின்சிமியுஸ் சொன்ன முதல் ஆலோசனைக்கு எவ்விதத்திலும் பிரச்சனை இல்லை என்பதை உணர்ந்து சந்தோசப்பட்ட திரு. லீ குவான் அவர்கள், வின்சிமியுஸின் இரண்டாவது வார்த்தை கேட்டு மனதுக்குள் சிரித்தார். வெளியில் அதன் சீரியஸ் நிலையை உணர்த்த மென்முறுவல் பூத்தார். ஆயினும் மனதுக்குள் அவர் போட்ட 'கணக்கு' அதுதான் என்பது அவரது நெருங்கிய நண்பர்கள் தவிர யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எவ்விதமாய் மனதுக்குள் கணக்குப்போட்டாலும் அதனைப் பயன்படுத்துவதற்கு ஒரு காலம் என்பது வரவேண்டுமல்லவா? கட்டாந்தரையில் நெல்லைப் போட்டால் எப்படி முளைத்து நாற்றாகும்? அதற்குந்தகுந்த காலம் இப்போது இல்லை என்பதை உணர்ந்த லீ அவர்கள் டாக்டர் வின்ஸிமியுஸ்க்கு சொன்ன அமைதியான பதில்தான் அந்த மென்மலர்புன்னகை.

  இது எல்லாம் நடந்தபோது சிங்கப்பூர் தனி நாடு இல்லை. 1959 ல் ஆங்கிலேய ஆளுமையிலிருந்து விடுதலை கிடைத்து சிங்கப்பூர் மலேயா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது நடந்தவைகள். 1960 ல் சிங்கப்பூர் வந்திருந்த டாக்டர் வின்சிமியுஸ் சொன்னவைகள் இவை. இவற்றையெல்லாம் கண்டு அப்போது நாட்டின் பிரதமராய் இருந்த திரு. லீ அவர்கள் மனதிற்குள் சொல்லிக்கொண்ட கணக்குதான் என்ன? அவ்வளவு பிரச்சனையுள்ள டாக்டர் வின்சிமியுஸின் அக்கோரிக்கைதான் என்ன?

  இன்று இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் நோக்கும் அதே பிரச்சனைதான் அது. குதிரைக்கு கடிவாளம் வேண்டும் தான். ஆனால் அக்கடிவாளத்தின் ஒருமுனை ஏதாவது ஒரு மரத்தில் இறுக்கமாக கட்டிப்போட்டிருக்கக்கூடாது. குதிரை ஓட வேண்டும். கடினமாக ஓடும்போது கடிவாளம் பயன்படவேண்டும். குதிரை ஓடாமலிருப்பதற்காய் கடிவாளம் இல்லை. இதை எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

  இதை லண்டனில் தான் படித்தபோதே மிகவும் நன்றாக உணர்ந்துகொண்டார் திரு.லீ அவர்கள். சிங்கப்பூரின் 'அரசியல் சமுதாயப் பார்வைகள்' பற்றி லண்டனில் படிக்கும் சகநாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பர்களிடையே இதுபற்றியெல்லாம் விவாதிக்கும் ஆர்வம் அவருக்கிருந்தது. அவ்வப்போது நடத்திய இத்தகைய விவாதங்களில் இரு விஷயங்கள் அவரது மனதில் பசுமரத்தாணியாய் பதிந்துபோயின. ஒன்று சிங்கப்பூருக்கு ஏற்ற வாழ்க்கைச்சூழ்நிலை மலேசியாவைப் போன்றதாய் இருக்கமுடியாது என்பதாகும். இரண்டாவது டாக்டர் வின்சிமியுஸ் கோரிக்கையின் காரணகர்த்தாக்கள். அவர்களை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் என்ன எவ்வித வேலையும் பார்க்கமுடியாது என்பதாகும். 'என் குதிரைக்கு எப்போதும் கடிவாளம் தேவையில்லை. அது என் மனத்தின் படி எப்போதும் நல்லவிதமாய்த்தான் இயங்கும்' என்ற திரு.லீ குவான் அவர்களின் உள்மனது 'அக்கடிவாளத்தையே' லண்டனில் தான் பயின்ற காலம் முதல் வெறுத்தது.

  ஆயினும் அரசியல் என்று வந்துவிட்டபின் குதிரையாவது கடிவாளமாவது? அரசியலில் நிரந்தர நண்பர்களுமில்லை நிரந்தர எதிரிகளுமில்லை என்பதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சொன்னதாய் எப்போதும் எடுத்துக்கொள்ளாதீர்கள். காலம் காலமாய் அழிபடாமல் வரும் உலக ஆட்சியலின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக அது எப்போதும் இருந்து வந்திருக்கிறது; வருகிறது. 1959 ல் பிரதமாரான திரு. லீ அவர்களின் ஆட்சியிலும் அதுதான் நடந்தது.

  திரு. லீ அவர்களின் 'மக்கள் செயல் கட்சி' ஆரம்பிக்கப்பட்ட பொழுது, அதில் கம்யூனிச கொள்கைகளில் தீவிர ஆதரவு கொண்ட பெரிய தலைவர்கள் பலரும் சேர்ந்திருந்தனர். ஒட்டுமொத்தமாக ஆங்கிலேயர்களிடமிருந்து சுய ஆட்சி பெறுவதற்காகவே அவர்கள் அப்போது கூடி புதுக்கட்சி அமைத்து முயன்றார்கள் என்றாலும் அது அப்போதைய தீர்வு மட்டுமே! பிறகு அக்கட்சியின் முடிவு, பயணம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்பதும் குறிப்பாக கம்யூனிச சித்தாத்தங்களின் அடிப்படையில் ஆட்சியை அமைத்தலே தமது 'இரண்டாம் பணி'யாய் இருக்க வேண்டும் என்ற உள் எண்ணத்துடனே அவர்கள் அப்போது திரு. லீயின் கட்சியிலும் கொள்கைகளிலும் அமைதியாயிருந்து ஏற்றுக்கொண்டவர்கள் போலிருந்தனர்.

  ஏற்கனவே தான் மனதுக்குள் கொண்டிருந்த தீர்மானத்தின் படி கம்யூனிசத்தின் ஆட்சி எக்காலத்திலும் சிங்கப்பூருக்கு ஒத்து வராது என்பதும் அவர்களின் ஆட்சியமைப்பு சீனாவிலும் ரஷ்யாவிலும் வெற்றிபெற்றிருந்த போதிலும் இங்கு சாத்தியமாகாது; சாத்தியமாக்கக்கூடாது என்பதிலும் திரு. லீ அவர்கள் உறுதியாய் இருந்தார். ஆனாலும் தனது கட்சிக்கு 'ஆரம்ப சிறப்பு அந்தஸ்தையும் அதிகார மையங்களாக நிலவி வந்த தொழிலாளர் சங்கங்களின் ஆதரவும்' வேண்டி அவர் கம்யூனிச சக்திகளோடு சேர்ந்திருக்க வேண்டியிருந்தது. அத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற 43 வேட்பாளர்களில் 13 பேர் அதிதீவிர கம்யூனிச இடதுசாரி சிந்தனையுள்ளவர்கள். தொழிற்சங்கங்களின் பின்புலம் உள்ளவர்கள். தகுந்த நேரம் பார்த்து காய் நகர்த்தும் சாமர்த்தியம் அவர்களுக்கும் இருக்கிறது என்பது அதிகம் தெரிந்ததால்தானோ என்னவோ திரு. லீ அவர்கள் டாக்டர். வின்சிமியுஸ் சொன்ன அந்த இரண்டாவது கருத்துக்கு மென்முறுவலாக புன்னகைத்தார்.

  'எந்தவித பொருளாதார வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுபவர்கள் இந்த கம்யூனிஸ்ட்டுகள். அவர்களை முதலில் இங்கிருந்து நீக்கினால் போதும் சிங்கப்பூர் பொருளியல் முழு வெற்றி பெற்றுவிடும்' என்பதுதான் டாக்டர் வின்சிமியுஸ் சொன்ன முக்கியமான அந்த 'செகண்ட் பாய்ண்ட்.' அதை அப்போது நிறைவேற்றுவது எவ்வளவு கடினமான காரியம் என்பதை திரு. லீ உணர்ந்திருந்தாலும் காய் கனிந்துதானே ஆகவேண்டும் என்று 'அதற்காகக்' காத்திருந்தார். 

  ஆக, 1960 ஆம் ஆண்டு வந்து டாக்டர் வின்சிமியுஸ் செய்துவிட்டுப்போன ஆய்வின்படி 1961ல் லீ குவான் அவர்களின் கைகளுக்கு வந்த அவ்வறிக்கை கூறியிருந்தபடி, அதை நிகழ்த்திப்பார்ப்பதற்கு சிங்கையின் சூரியனும் சில மாதங்கள் காத்திருந்தார். இடையில் தனது கட்சியில் இருந்த அக்கம்யூனிச சக்திகள் வாயிலாக அவர் பெற்ற இன்னல்களும் இடைஞ்சல்களும் ஏராளம். அதையெல்லாம் தாண்டி 1961 ஆகஸ்டு மாதம் 'ஈடிபி' எனப்படும் 'பொருளியல் வளர்ச்சி வாரியம்' (எகனாமிக் டெவலப்மெண்ட் போர்டு) ஏற்படுத்தப்பட்டது. 

  இதன் அவசியம் என்ன, ஏன் இதை ஒரு நிறுவனமாக முதன் முதலில் டாக்டர் வின்ஸிமியுஸ் ஏற்படுத்தச்சொன்னார், அவ்வாறு ஏற்படுத்தியபின் அதன் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதெல்லாம் இந்த அத்தியாயத்தோடு முடிந்துவிடும் சமாச்சாரம் இல்லை. அப்படியே 'ஒரு நாளோடு, ஒரு அத்தியாத்தோடு முடிந்து விடும் வேலைதான் அது' என்றிருந்தால் 'ஐக்கிய நாட்டு நிறுவன தொழில் ஆய்வுக்குழு (UNDP)' வேலை முடிந்தும், சிங்கப்பூர் அரசு எதற்கு டாக்டர் வின்சிமியுஸை, 'தேசிய பொருளியல் ஆலோசகராக' நியமித்து தொடர்ந்து இருபத்துமூன்று வருடங்கள் (1984 வரை) அவரை வைத்துக்கொண்டிருந்திருக்கவேண்டும்?

  (தொடரும்...)


  சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

  பாக்தாத். ஜனவரி 20 : அமெரிக்காவின் ஆளுமையின் கீழ் சதாம் உசேன் காலத்திலிருந்து அடிமைப்படுக்கிடந்த நாடு ஈராக். அணு ஆயுதங்கள் அதிகமாக இருப்பதாகவும் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி ஈராக்கோடு போரிட்டு சதாம் உசேனை விரட்டி நாட்டைப் பிடித்தது அமெரிக்கா. அந்நாட்டின் கடைசி எண்ணெய்க்கிணறு நேற்று திடீரென்று மூடப்பட்ட நிலையில் அந்நாட்டை விடுவிக்க அமெரிக்க அரசு முன் வந்துள்ளது.

  இதன்படி அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் 'எண்ணெய் வளம் இல்லாததால் நாங்கள் வெளியேறுகிறோம் என்று உலக நாடுகள் பலவும் சொல்வதில் கடுகளவும் உண்மை இல்லை எனவும், இன்னும் ஈராக்கில் எண்ணெய் வளமிருக்கலாம் எனினும் அமெரிக்கர்கள் பிற நாடுகளின் சுதந்திரத்தில் எப்போதும் ஈடுபட மாட்டார்கள் என்பதை நிருபிக்கவே அமெரிக்க அரசு இம்முடிவை எடுத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி ஈராக்கை ஏலத்தில் விடப்போவதாகவும் விருப்பமிருப்பவர்கள் அமெரிக்க அரசு, ஈராக்கில் அமைத்துள்ள அமெரிக்க - ஈராக் கூட்டுப்படைகளின் 'ஜனநாயக கவுன்சிலில்' விண்ணப்பிக்கலாம் என்றும் அது அறிவித்துள்ளது.

  இச்செய்தி கிடைத்த மறுநிமிடத்திலிருந்து இந்தியாவும் சீனாவும் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதும் தெரிகிறது. இந்தியா இறங்கியிருப்பதை அமெரிக்காவின் வழி தெரிந்தகொண்ட பாகிஸ்தான், தானும் அதை வாங்க முடிவு செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறது. இதற்காக அது அமெரிக்காவின் 'வேண்டுதலுக்கேற்ப' 'நல்லெண்ண' அடிப்படையில், பாகிஸ்தானில் இருக்கும் ஐம்பது மசூதிகளையும் அழிக்க முன்வந்துள்ளதாக இணையத்தை மேற்கோள் காட்டிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது. 

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |