ஜனவரி 26 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உடல் நலம் பேணுவோம் : ஃபோலிக் அமிலம் – B9
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

தண்ணீரில் கரையக்கூடிய இந்த வைட்டமின் B தொகுதியை சேர்ந்த வைட்டமின் ஆகும். இன்னொரு B 12 உடன் சேர்ந்து புரதத்தை செரிக்க வைக்கவும் வயிற்றின் அமில சுரப்பை கட்டுப்படுத்தவும் அவசியமாகிறது.

திசுக்கள், செல்கள் வளரவும் செரிமான உறுப்புகள் நல்ல முறையில் சீரண புரதங்களையும் அமிலங்களையும் சுரக்கவும் ஃபோலிக் அமிலம் இன்றியமையாதது.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்கலில் சீரான இரத்த போக்கு நிகழவும், மாதவிலக்கு நின்றபின் தசைகள் நன்கு செயல்படவும் ஃபோலிக் அமிலம் அவசியம்.

ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ள உணவு பொருட்கள்: பலவகை பருப்புகள், முளைவிட்ட பருப்பு வகைகள், கல்லீரல், அடர்ந்த பச்சை நிறமுடைய கீரைகள், பன்றி இறைச்சி, தவிடு நீக்காத கோதுமை பண்டங்கள், கைக்குத்தல் அரிசி, சிட்ரிக் அமிலம் உள்ள ஆரஞ்சு, நெல்லிக்கனி போன்ற கனிவகைகள் அதிக ஃபோலிக் அமிலம் உள்ள சில உணவு வகைகள் ஆகும்.

ஃபோலிக் அமிலம் அதிகமாக உள்ள உணவு

உணவு

கோழியின் கல்லீரல்

காலை செரியல்

மாட்டு கல்லீரல்

வேகவைத்த பருப்பு

கொத்துக்கடலை

அஸ்பரகஸ்

கீரை

பருப்பு

பரிட்டோ, ராஜ்மா சேர்த்தௌ

ராஜ்மா

பன்றி இறைச்சி

மொச்சை கொட்டை

தக்காளி சாறு

ப்ரஸ்ஸல் ச்ப்ரொட்

ஆரஞ்சு

பிராக்கோலி

உருளை கிழங்கு வறுவல்

முளைவிட்ட கோதுமை

போலிக் அமிலம் சேர்த்த வெள்ளை ரொட்டி

ஃபோலிக் அமில குறைபாடு நாக்கு, வாய் இவற்றில் அதிக புண் ஏற்படுவது, செரிமான குறைபாடு, வயிற்று போக்கு, வளர்ச்சி குறைவு, தலைமுடி உதிருதல் சீக்கிரமே நரை தோன்றுதல் ஆகியவற்றிற்கு காரணமாகும்.

கருவுற்றிருக்கும் பெண்கள், இளம் வயது பெண்கள் இவர்கள் ஃபோலிக் அமில குறைபாடு இல்லாதவண்ணம் இருப்பது அவசியம். கருவுற்றிருக்கும் பெண்கள் வைட்டமின் 9 குறைபாடு இருந்தால் கருவில் உள்ள குழந்தைக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகளும் வளர்ச்சி, மூளை வளார்ச்சி இல்லாமல் போவதும் சாத்தியம் என் அறிவியல் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

இதன் அவசியம் கருதி பல காலை உணவு செரியல்களில் ஃபோலிக் அமிலம் சேர்க்கப்பட்டிருக்கிறது. கீழே உள்ள அட்டவணை இதன் அளவையும் எந்த காலை உணவில் எவ்வளவு இருக்கிறது என்பதையும் சொல்வதால், பெண்கள் காலை உணவில் கட்டாயம் B9 சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Folic Acidபிறவியில் ஏற்படும் பலவித குறைபாடுகளுக்கு வைட்டமின் B 9 காரனம் என்பதால் அமெரிக்க அரசும் மருத்துவர்கள் சங்கமும் சேர்ந்து இதன் முக்கியத்துவத்தை எடுத்து சொல்ல பலவித கூட்டங்கள், விளம்பரங்கள் செய்கிறார்கள். தாய்நல மருத்துவர்களும்  ஃபோலிக் அமில மாத்திரைகல் எடுத்து கொள்ள சொல்லி வற்புறுத்துகிறார்கள்.இதனால் அமெரிக்க நோய்களை தடுக்கும் நிறுவனமும், பள்ளி அறிவியல் ஆசிரியர்களும் சேர்ந்து இதன் முக்கியத்துவத்தை ஆரம்ப காலங்களில் இருந்தே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

 ஒருநாளைக்கு தேவையான் நோலிக் அமிலம் கீழ்கண்ட தானிய காலை உனவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

General Mills Harmony
General Mills Multi-Grain Cheerios
General Mills Multi-Grain CheeriosPlus
General Mills TotalBrown Sugar and Oat
General Mills TotalCorn Flakes
General Mills TotalRaisin Bran
General Mills TotalWhole Grain
Kashi’s  Heart to Heart
Kellogg’s All-BranOriginal
Kellogg’s All-Branwith Extra Fiber
Kellogg’s All-BranBran Buds
Kellogg’s CompleteOat Bran Flakes
Kellogg’s CompleteWheat Bran Flakes
Kellogg’s Crispix
Kellogg’s Healthy Choice™Almond Crunch with Raisins
Kellogg’s Healthy Choice™Low-Fat Granola with Raisins
Kellogg’s Healthy Choice™Low-Fat Granola without Raisins
Kellogg’s Healthy Choice™Mueslix
Kellogg’s Healthy Choice™Toasted Brown Sugar Squares
Kellogg’s Just RightFruit and Nut
Kellogg’s Product 19
Kellogg’s Smart Start
Kellogg’s Special K
Kellogg’s Special KPlus
Malt-O-Meal
Quaker Oats Apple Zaps (Bagged)
Quaker Oats Cap'n Crunch Red box
Quaker Oats Cap'n Crunch with Crunch berries
Quaker Oats Cap'n Crunch's Oops! All Berries
Quaker Oats Cap'n Crunch's Peanut Butter Crunch
Quaker Oats Cinnamon Crunch
Quaker Oats Cocoa Blasts (Bagged)
Quaker Oats Crispy Corn Puffs (Bagged)
Quaker Oats Crunchy Corn Bran
Quaker Oats Frosted Toasted Oats (Bagged)
Quaker Oats Fruitangy Ohs (Bagged)
Quaker Oats Fruity Ocean Adventure (Bagged)
Quaker Oats Honey Dipps (Bagged)
Quaker Oats Honey Graham OH!s
Quaker Oats Honey Grahams (Bagged)
Quaker Oats Honey Nut Oats (Bagged)
Quaker Oats King Vitamin
Quaker Oats Life Cereal / Cinnamon Life
Quaker Oats Marshmallow Safari (Bagged)
Quaker Oats Oat Bran RTE
Quaker Oats Oatmeal Squares - Regular flavor and Cinnamon
Quaker Oats Quisp
Quaker Oats Sun Country Oatswith Iron
Quaker Oats Sweet Crunch
Quaker Oats Toasted Oatmeal - Regular flavor and Honey Nut
Quaker Oats Toasted Oats (Bagged)

சில வகை அனிமியா ஏற்படுவதும்  B9 குறைபாட்டால்தான். எனவே மேற்கூறிய உணவுகளை சேர்த்து, நாமும் நலமுடன் இருப்போம். பிறக்கும் குழந்தைகளையும் பிறவி நோய்களில் இருந்து காப்போம். அதிக B வைட்டமின் சேர்த்து கொண்டால், செரிமானம் விரைவாவதால் உடல் எடையும் குறையும்.

oooOooo
பத்மா அர்விந்த் அவர்களின் இதர படைப்புகள்.   உடல் நலம் பேணுவோம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |