ஜனவரி 26 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : எங்கே என் குழந்தைகள் ?
- சத்தி சக்திதாசன் [sathnel.sakthithasan@bt.com]
| Printable version | URL |


கலகலவென்று சிரித்திருந்த
கள்ளமற்ற
வெள்ளைப் பூக்கள்

முற்றத்தில் முழுநாளும்
தவழ்ந்திருந்த சின்னத்
தத்தைகள்

அப்பா, அப்பா எனக்
காலைக் கட்டிக்கொண்டு
களித்திருந்த அழகு
முல்லை மொட்டுகள்

அந்தச் சின்னப் பருவத்து
சித்திரங்கள்
சிறகடித்து பறந்தன
பரந்த  உலகத்தினுள்

அன்றே
காணவில்லை என்
கானகத்து ரோஜாக்களை!
அதன் பின்பு
கண்டவைகளோ முதிர்ந்த
கவலை தோய்ந்த முகங்கள்

சின்னஞ்சிறு குழந்தைகளாய்
வலம் வந்தவர்களை
பல ஆசைகள் நிறைந்த
பருவத்துக் குயில்களாய்
மாற்றித் தந்தது இந்த
மாயமிக்க உலகமோ ?

உண்மைதான்
தவற விட்டு விட்டேன்
கள்ளமற்ற என் குழந்தைகளின்
பிள்ளை உள்ளங்களை !
அன்பதனை விற்றுத்தான் அவர்
கயமை மிகுந்த உலகில்
ஆசைகளை வாங்கினாரோ?

வளர்வதனால் இழப்பது
அவர்தம் பிஞ்சு உள்ளங்களை என்றால்
குழந்தைகளாக என்னுலகில்
கொஞ்சித் திரியட்டுமே !

இன்னும் கொஞ்சக் காலம் !
இன்னும் கொஞ்சக் காலம்
வேஷங்களறியா உள்ளங்களாய்
மோசம் நிறைந்த உலகைத் தவிர்த்து
இருந்து விட்டுத்தான் போகட்டுமே !

எங்கே என் குழந்தைகள் ?
ஏங்குகின்றது உள்ளம்
அவர்கள் இப்போ வயதுக்கு வந்து விட்டார்களாம் !
இதயத்தின் மூலையில்
இன்னும் வாழும் அந்தக் குழந்தைகளின்
நினைவுகளாவது
நீந்திக் கொண்டிருக்கட்டும்
விட்டு விடுங்களேன்.

 

oooOooo
சத்தி சக்திதாசன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |