பிப்ரவரி 02 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : என்னோடு பேசு !
- சத்தி சக்திதாசன் [sathnel.sakthithasan@bt.com]
| Printable version | URL |

என்னோடு பேசு
நிலவே !

கண்ணோடு நான்
தேக்கி
காத்திருக்கும்
காதல் அம்புகளை
கொட்டித் தீர்க்க வேண்டும்

கொஞ்சம் நில்லு
நிலவே !
என்னோடு பேசு

மனத்தை அவனிடம்
மங்கை நான்
கேட்காமலே கொடுத்ததையும்
இழந்ததால் எழுந்த
வெற்றிடத்தைத் தன்
இதயத்தால் அவன்
அடைத்ததையும்

அப்படியே உன்னிடம்
அள்ளி வீச
அல்லி நான் துடிக்கிறேன்

வட்ட நிலவே
எட்ட நின்றாவது
என்னோடு பேசு

கன்னி மனந்தானே
காதல் பருவம் தானே
உயிராக நினைத்து
உறவானது உண்மைதானே !

வானின் முத்தான
வண்ண நிலவே
என்னோடு பேசு

நெஞ்சம் கனக்குது
நினைவுகள் சுமையானது
கொஞ்சம் இறக்கி
இளைப்பாற ஒரு தோள்
வேண்டும்

பால் நிலவே
பக்கத்தே வந்து
என்னோடு பேசு  !

காதலே உயிர்
என்ற என்
காதலன்
கனவிலும் உனை
மறவேன் என்றவன்

திருமணச் சந்தையிலே
விலைக்கு வைக்கப்பட்டிருப்பதையும்
வாழ வேண்டுமென்றால் அவனை
வாங்க வேண்டுமென்பதையும்
உணர்ந்து கொண்டு நான்
உதிர்ந்து போன கதை
உனக்குச் சொல்ல வேண்டும்

அன்றெமது காதலுக்கு
சாட்சியான வனத்துச்
சந்திரனே !
என்னோடு பேசு !

நீ போகும் பாதையிலே
நினைவுகள் எல்லாம்
நிழலாகி எனைப்போலே
நீரருவி விழிகளாக
நின்றிருக்கும் மங்கையரை
கண்டுவிட்டால் முழுமதியே
முழுதாக என்கதையைக் கூறிட

ஊர்வலத்தை நிறுத்தி
உள்ளத்தின் ஊனக்கதையை
உனக்கு நான் கூறிடவே

என்னோடு பேசு !

| | |
oooOooo
சத்தி சக்திதாசன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |