பிப்ரவரி 03 2005
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
காந்தீய விழுமியங்கள்
பங்குச்சந்தை ஒரு பார்வை
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
ஆன்மீகக் கதைகள்
முத்தொள்ளாயிரம்
நையாண்டி
கட்டுரை
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  மஜுலா சிங்கப்புரா : அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி.
  - எம்.கே.குமார்
  | Printable version |
  "'வாடிக்கையாளர்களே வியாபாரிகளின் எஜமானர்கள்' என்ற மகாத்மா காந்தியின் வார்த்தைகளை மிகவும் சரியாகப் புரிந்துகொண்டிருந்தார் டாக்டர்.வின்சிமியுஸ்."

  எவ்வளவுதான் கூர்மையானது என்றாலும் பென்சில் கத்தியை வைத்துக்கொண்டு போரிட முடியுமா? போர் வாளை வைத்துக்கொண்டு பென்சிலைக் கூர்மையாக்க முனையலாமா? திறமையான மல்யுத்த வீரனை கிரிக்கெட் விளையாடுவதற்கும் நல்ல ஓட்டப்பந்தய வீரனை பளுதூக்குவதற்கும் அனுப்பினால் பரிசு கிடைக்குமா? மேற்கொண்ட காரியத்தில் வெற்றியடைவதற்கு திறமையானவர்களை அருகில் வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. சரியானவர்களை சரியான வேலையில் ஈடுபடுத்துவதே அக்காரியத்தில் நாம் பெறும் முதல் வெற்றியாகும். அத்தகைய ஆட்களைத் தேர்ந்தெடுத்து துறைகளை அவரவர்களுக்கு ஒதுக்கியதுதான் சிங்கப்பூர் வளரப்போவதில் திரு.லீ அவர்களுக்குக் கிடைத்த முதன்மையான நம்பிக்கையும் வெற்றியுமாக இருந்திருக்கிறது.

  'வாடிக்கையாளர்களே வியாபாரிகளின் எஜமானர்கள்' என்ற மகாத்மா காந்தியின் வார்த்தைகளை மிகவும் சரியாகப் புரிந்துகொண்டிருந்தார் டாக்டர்.வின்சிமியுஸ். ஒரு வியாபாரிக்கு முதலில் தெரிந்திருக்க வேண்டியது இதுதான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கக்கூடாது. பொருளியல் வளர்ச்சி வாரியம் ஏற்படுத்தச் சொன்ன டாக்டர், அதற்குரிய காரணங்களைப் பின்வருமாறு முன் வைத்தார்.

  நமது வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். உள்ளே நுழையும் முன் காலை அலம்பி விட்டு வாருங்கள் என்கிறோம். ஆனால் கால் அலம்புவதற்குரிய இடம் அரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்தால் எப்படி இருக்கும் அவருக்கு. போடா நீயும் உன் வீடும்' என்று அரை கிலோமீட்டரிலிருந்து அப்படியே கிளம்பி விட மாட்டாரா? 'வெறும் விருந்தினர்' என்றால் போய் வா என்று விட்டுவிடலாம். அதுவே 'வருமானம் தரும் விருந்தினர்' என்றால்? 

  தொழில் தொடங்க வரும் முதலாளிகளின் தேவைகள் என்னென்னவோ அவையனைத்தும் ஒரு நிறுத்தத்தில் கிடைக்கும்படி நாம் அமைத்துத்தரவேண்டும் என்பது அவரது முதல் எண்ணம். அதன்படி, தொழிற்சாலை அமைக்க வரும் ஒருவருக்குத் தேவையான நிலம், மின்சாரம், நீர் பகிர்வு, சுற்றுப்புற சுகாதார யோசனைகளும் அனுமதியும், பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுச்சான்றிதழ்கள் என அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்க வழி வகுத்தார். அதுதான் பொருளியல் வளர்ச்சி வாரியம் எனப்படும் 'எகனாமிக் டெவலப்மெண்ட் போர்டு.' இவை மட்டுமின்றி வங்கி நிதி உதவிகள் முதலியனவும் இதன்மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டன.

  ஆரம்ப காலத்தில் சிங்கப்பூருக்கு உதவி செய்யும் வகையில் 'அனைத்துலக தொழிலாளர் நிறுவன'த்திடமிருந்தும் தான் சார்ந்த 'ஐக்கிய நிறுவனத்தின் தொழில் முனைப்புக்குழு'விலிருந்தும் திறமைசாலிகள் பலரை அதில் அமர்த்தி அனைத்தையும் கற்றுக்கொடுக்கச்சொன்னார் டாக்டர்.வின்சிமியுஸ். அவரது அறிக்கையின் படி, கப்பல் உடைத்தல் மற்றும் பழுதுபார்த்தல், கனரக உற்பத்திகள், வேதிப்பொருட்கள் மற்றும் மின்சார பொருட்களின் உற்பத்திகள் ஆகியவையே அப்போது குறிவைக்கப்பட்டன. 100 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மூலதனத்தோடு ஆரம்பிகப்பட்ட இது பிறகு வளர்ந்த விதம் மிகவும் பிரமாண்டமானது.

  இன்று வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என மூன்று கண்டங்களில் தொழில்துறை விஷயங்களில் உடலை நுழைத்து மனதை நுழைத்து செயல்பாடுகளைக் கவனித்து வெற்றிபெற்றுவருகிறார்கள் அதில் பணியாற்றுவோர். இதுவரை சிங்கப்பூரில் 6000 வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது தொழிலை மிகவும் திறம்பட நடத்தி வருகிறார்கள் எனும்பொழுது அவ்வெற்றிக்கு நாம் எது, யார் காரணமென்க முடியும்?

  வருடத்திற்கு இரண்டு முறை சிங்கப்பூர் வருவார் டாக்டர்.வின்சிமியுஸ். மூன்று வாரங்கள் இங்கு தங்குவாராம். அவருடைய பயணச்செலவையும் தங்கும் செலவையும் மட்டும் சிங்கப்பூர் அரசாங்கம் கவனித்துக்கொள்ளும். இதுவரை வந்த 'பொருளியல் வளர்ச்சி வாரியத்தின்' எல்லா அறிகைகளும் பத்திரிகையின் எல்லாப் பதிப்புகளும் அவரது உதவியாளர் வழி முன்பே அவருக்கு அனுப்பப்பட்டு விடுமாம். மூன்று வாரங்களில் முதல் வாரம் ஈ.டி.பி யின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவார். இரண்டாவது வாரம் பன்னாட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளிடமும் சிங்கப்பூர் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாளர்களிடமும் பேசுவார். பிறகு பல்வேறு தொழிலாளர்களை ஒன்றடக்கிய 'என்டியுசி' எனப்படும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தலைவரிடமும் பேசுவாராம். எல்லாம் முடிந்து அவரது அறிக்கை கடைசியில் ஆக்கிரமிப்பது நிதியமைச்சர் மற்றும் பிரதமரின் மேஜைகளை!

  ஆக மூன்றாவது வாரம் முழுவதும் பிரதமர் திரு. லீ குவான் யூ அவர்களோடு கலந்துரையாடுவாராம். உணவருந்திக்கொண்டே பேசுவதில் இருவருக்கும் விருப்பமாம். 'வின்சிமியுஸ் அவர்கள் ஒரு தொடர் புகைப்பாளராக இருந்தார். எனக்கு அது அலர்ஜி என்றாலும் டச்சுத்தொனி கலந்த அவரது ஆங்கிலப்பேச்சு எனக்குப்பிடிக்கும்' என்கிறார் திரு.லீ அவர்கள். இருவரும் பொருளாதாரச் சூழ்நிலை பற்றி கலந்துரையாடும் பொழுது இருவரைத் தவிர வேறு யாரும் அங்கு இருக்கமாட்டார்கள். ஒரு நிறுவனத்தின் அனைத்து பிரச்சனைகளும் அங்கு ஆலோசிக்கப்படும். அரசாங்கத்தின் இறுக்கிப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் முதல் பணியாளர்களின் பிரச்சனைகள், சிங்கப்பூர் டாலரின் ஏற்ற இறக்கங்கள் வரை அனைத்தும் அவர் முன்னால் வைக்கப்படும். அப்படி அவர்கள் பேசும்பொழுது முடிவுக்கு வந்த முக்கிய விஷயங்களில் ஒன்று தான் சிங்கப்பூரில் இன்றைய சுற்றுலாத்துறையின் இதயமாகக் கருதப்படும் 'செந்தோசா' தீவுகள்.

  பிரிட்டிஷ் துருப்புகளின் இருப்பிடமாக இருந்த 'இறப்புக்குப்பின்' என்று பொருள் தரும் பெயர் கொண்ட அத்தீவு, அவர்களின் வெளியேற்றத்திற்குப் பிறகு வெறுமனே கிடக்க, அதை என்ன செய்யலாம் என்று பல்வேறு அமைச்சகங்களும் யோசித்துக்கொண்டிருந்தன. பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம் தொடங்குவது முதல் மீண்டும் சிங்கப்பூர் படைகளின் பயிற்சிக்கு அதைப் பயன்படுத்துவது வரை ஏராளமான திட்டங்கள் வந்து குவிந்திருக்க அதையெல்லாம் புறங்கையால் தள்ளுமாறு திரு.லீ குவான் அவர்களுக்கு யோசனை சொன்னார் டாக்டர்.வின்சிமியுஸ்.

  அதன்படி, 'அமைதி' என்றுபொருள் தரும் வகையில் அதற்கு புதுப்பெயர் ('செந்தோசா' sentosa) சூட்டப்பட்டு அதன் உள் கட்டமைப்புகள் மாற்றப்பட்டன. சுற்றுலாவின் அனைத்துத் தேவைகளும் அங்கே நிர்மாணிக்கப்பட்டன. இதோ இன்றைய சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலா இடங்களுல் ஒன்றாக அது இன்று திகழ்ந்துகொண்டிருக்கிறது எனில் அது டாக்டர். வின்சிமியுஸ் மற்றும் திரு. லீயின் தனிப்பட்ட முடிவுகளுக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றிக்குச் சான்று தவிர வேறொன்றும் இல்லை.

  1968 ஆம் ஆண்டு. சிங்கப்பூரிலிருந்து லண்டனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. லண்டனில் தொலைபேசியை எடுப்பவர் 'பேங்க் ஆ·ப் அமெரிக்கா'வின் துணைத்தலைவர் 'மிஸ்டர்.வான் ஓனென்.' இம்முனையில் அவரது நண்பர்.

  நண்பர் கேட்கிறார். 'இதோ பார் வான், இன்னும் பத்து ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவின் நிதி மையமாக சிங்கப்பூர் ஆகவேண்டும். என்ன சொல்கிறாய்?'

  'சரி. உடனே நீ லண்டன் புறப்பட்டு வா. இன்னும் பத்து ஆண்டுகள் எதற்கு? ஐந்தே ஆண்டுகளில் அது நடக்க வைப்போம்!' இது மறுமுனையின் குரல்.

  உடனே லண்டன் கிளம்புகிறார் டாக்டர் வின்சிமியுஸ். வானின் அறையில் இருந்த பெரிய உலக உருண்டைக்கு முன் வின்சிமியுஸை அழைத்துச்செல்கிறார் வான். 'இதோ பார். இப்பூமியின் நிதி உலகம் இதோ ஜூரிச்சில் ஆரம்பிக்கிறது. காலை 9 மணிக்கு ஜூரிச்சில் எழும் நிதி மையங்கள் பிறகு '·ப்ராங்க் ·பர்ட்டை' எழுப்புகிறது. அதனைத்தொடர்ந்து இதோ லண்டன் எழும்புகிறது. மதியம் கழிந்த பிறகு இதோ முதலில் ஜூரிச் தூங்கச்செல்கிறது, அதனைத் தொடர்ந்து ·பிராங்க்பர்ட். இப்பகுதியில் அனைத்தும் உறங்கச்செல்லும் நிலையில் அதோ நியூயார்க் விழித்துக்கொள்கிறது. ஆக இச்சூழ்நிலையில் லண்டன் தன் அனைத்து கணக்குகளையும் நியூயார்க்கிடம் ஒப்படைத்துவிட்டு உறங்கச்செல்கிறது. நியூயார்க் கணக்கை முடிக்கும் வேளையில் இதோ அது சான் ·பிரான்சிஸ்கோவிடம் கொடுத்துவிட்டுச்செல்கிறது. ஆக இனி சான்பிரான்சிஸ்கோ பார்த்துக்கொள்ளும். ஆக இதுவரை எல்லாம் சரியாக இருக்கிறது, இங்கேதான் நமக்கான வாய்ப்பு ஆரம்பிக்கிறது' என்றார் உலகத்தைச் சுற்றிக்கொண்டே!   

  வின்சிமியுஸ் நிமிர்ந்தார். வான் தொடர்ந்தார்.

  'பார், சான் ·பிரான்சிஸ்கோ இனி இருட்டைச்சந்திக்கும். அதற்குப்பிறகு அடுத்தநாள் காலை 'சுவிஸ்' வங்கிகள் இயங்கத் தொடரும் வேளை வரை உலகின் நிதிப்பங்கீடு மற்றும் நிதிக்கணக்குகள் ஒரு வெற்றிடத்தை அடைந்திருக்கும். இந்த வெற்றிடத்தைத்தான் நாம் இப்போது நிரப்பப்போகிறோம். ஆக இனி சான் ·ப்ரான்சிஸ்கோ விளக்கணைக்கும் பொழுது அது அனைத்து விஷயங்களையும் சிங்கப்பூரிடம் விட்டுச்செல்லும். சிங்கப்பூர் அதற்குப்பிறகு சுவிஸ் வங்கிகளுக்கு கொடுத்து மறையும். இதுதான் நமது திட்டம்' என்றார் வான்.

  வின்சிமியுஸ் உற்சாகமடைந்தார். அனைத்தையும் பதிவு செய்து சிங்கப்பூரிலிருந்த பொருளாதார வளர்ச்சி வாரியத்தின் தலைவரான 'ஹோன் சூ சென்'னுக்கு அனுப்பிவைத்தார். பிறகு நடந்ததென்ன? அப்படி ஒரு நிதி மையம் ஆரம்பிக்கப்பட்டதா? அது எவ்வகையில் சிங்கப்பூருக்கு உறுதுணையாய் இருந்தது என்பதெல்லாம் இன்னொரு 'ஆசிய காலனி'யைச் சம்பந்தப்படுத்தி பேச வேண்டிய விஷயங்கள். பேசுவோம்.


  சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

  பொங்கல் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்.

  தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை தல்லாகுளம் பகுதியில் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி பதினான்கு மற்றும் பதினைந்து தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவது நாம் அறிந்ததே! மதுரை தல்லாகுளத்தில் நேற்று முன்தினம் ரேஷன் அரிசிக்கடை திடீர் என்று பூட்டப்பட்டதால் இப்பகுதிகளில் பொங்கல் பண்டிகை 'கொண்டாடப்படுமோ படாதோ' என்ற சந்தேகம் 'சமுதாய கவனிப்பாளர்களின்' பார்வையில் இருந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியாளரிடம் பொதுமக்கள் புகார் அளித்துக்கொண்டிருந்தபோது அவர் 'பணி இடமாற்றம்' குறித்தான செய்தி வர, பதிலேதும் கூறாமல் உடனே அவர் அவ்விடத்தை விட்டுச்சென்றுவிட்டார்.

  இந்நிலையில் நேற்றிரவு திடீரென்று வந்த மர்மக்கும்பல் ஒன்று தெருவுக்கு இரண்டு என அரிசி மூட்டைகளை வீசிவிட்டுச்சென்றது. இதை அள்ளிக்கொண்ட மக்கள் சந்தோசப்பெருக்கோடு பொங்கலைக் கொண்டாட ஆரம்பித்தனர். பொங்கலில் போடுவதற்கு சர்க்கரை மூட்டைகளை வீசாத அம்மர்மக்கும்பலை கண்டித்தும் அவர்களில் சிலர் திட்டித்தீர்த்தனர்.

  இதற்கிடையே வீடுகளுக்கு 'குடிநீர் பாக்கெட்' போடும் தண்ணீர்வண்டி நேற்று வராததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். 'வீட்டிற்கு மூன்று பாக்கெட் இலவச தண்ணீர்' என்ற திட்டத்தைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அதைச் செயல்படுத்தவில்லை என்றும் அவர்களில் சிலர் கூறினர். கடந்த வாரங்களில் வழங்கிய நீரின் அளவு குறைந்திருந்ததாகவும் சில முணுமுணுத்தனர்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |