பிப்ரவரி 03 2005
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
காந்தீய விழுமியங்கள்
பங்குச்சந்தை ஒரு பார்வை
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
ஆன்மீகக் கதைகள்
முத்தொள்ளாயிரம்
நையாண்டி
கட்டுரை
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    ஆன்மீகக் கதைகள் : ஒரு சாபம் ஓர் அவதாரம்
    -
    | Printable version |
    "'சத்தியத்தின் முன் அசத்தியம் உட்கார முடியுமா ?"

    மகாவிஷ்ணு வைகுண்டத்தில் இருந்தார். ஒருநாள் விசுவாமித்திரர் அவரைப் பார்க்க அங்கு போனார்.

    'வரவேண்டும் வரவேண்டும்' என்று உபசாரம் செய்து வரவேற்று ஓர் ஆசனத்தைக் காட்டி, 'அந்த ஆசனத்தில் உட்காருங்கள்; ஆனால் பார்த்து உட்காருங்கள்' என்றார்.

    ஆனால், மகாவிஷ்ணு கூறியதை விசுவாமித்திரர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.. அந்த ஆசனத்தில் போய் அமர்ந்தார். அது அவரை ஏற்கவில்லை. கீழே தள்ளி விட்டுவிட்டது. குப்புற விழுந்து விட்ட அவருக்கு முகவாயில் நல்ல அடி ! அதைப் பொறுக்க முடியாமல் விசுவாமித்திரர் மகாவிஷ்ணுவையே சபித்து விட்டார். 'பிடியுங்கள் சாபம் ! பூவுலகில் நீங்கள் ஒரு மனிதனாகப் பிறக்கக் கடவது..' விஷ்ணு சபிக்கப்பட்டு விட்டார்.

    சாபம் என்றதும் பொதுவாக வருத்தம்தான் வரும். அதிலும், பூவுலகில் மனிதனாகப் பிறப்பது என்றால், கேட்கவே வேண்டாம். ஆனால், மகாவிஷ்ணு சிறிதும் வருத்தம் கொள்ளவில்லை. மாறாக மகிழ்ச்சியே அடைந்தார். ஏனெனில் அவருக்குப் பூவுலகில் ஒரு பெரும் பணி ஆற்ற வேண்டியிருந்தது. அதற்கு அந்த முனிவரின் சாபம் ஒரு நல்ல வாய்பு !

    எனவே சொன்னார், 'முனிவரே ! ஏற்கனவே பூவுலகில் எனக்கு ஒரு வேலை காத்திருக்கிறது. இராவண வதம் நடந்தாக வேண்டும். அதற்காக ஒரு பிறப்பெருப்பதற்குக் காரணத்தைத்  தேடிக் கொண்டிருந்தேன். நல்ல வேளை ! இப்போது, அது உங்கள் சாபம் மூலம் கிடைத்துவிட்டது. மிக்க நன்றி' என்றார்.

    தொடர்ந்து 'முனிவரே ! கீழே விழுந்து விட்டீர்களே, பாவம் ! அடி மிகவும் பலமோ..? நான்தான்  உம்மை உட்காரும்படிக் கூறியபோதே, 'பார்த்து உட்காருங்கள்' என்று எச்சரித்தேனே ! அதை நீங்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.. சரி.. போகட்டும்.. இப்போதாவது அங்கு பாருங்க்ள்..' என்று ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டினார் மகாவிஷ்ணு.

    அந்த இடத்தில் ஓர் ஆசனத்தில் அரிச்சந்திரன் அமர்ந்திருந்தான். விசுவாமித்திரர் முகத்தில் அசட்டுக் களை. மகாவிஷ்ணு தொடர்ந்தார். 'சத்தியத்தின் முன் அசத்தியம் உட்கார முடியுமா ? அதனால்தான் ஆசனம் உம்மைத் தள்ளி விட்டுவிட்டது போலும் ! கீழே விழுந்து விட்டீர்கள்..'

    விசுவாமித்திரருக்குத் தனது தவறு புரிந்துவிட்டது. அதற்குத் தகுந்த பிராயச்சித்தம் வேண்டி, விஷ்ணுவிடம் பிராத்தித்தார்.

    உடனே விஷ்ணு, 'அரிச்சந்திரந்-சந்திரமதியைப் பிரித்த வைத்ததால், உமக்கு ஏற்பட்டுள்ள பாவத்துக்குத் தகுந்த பிராயச்சித்தம் என்ன தெரியுமா ? பூமியில் நான் உமது சாபத்தின்படி இராமனாகப் பிறக்கப் போகிறேன் அல்லவா ? அப்போது நீங்கள் என்னையும் லட்சுமியின் அவதாரமாக அமையப் போகும் சீதையையும், ஒன்று சேர்த்து வையுங்கள்.. அது போதும்.' என்றார்.

    சீதா-ராம கல்யாணம் அந்தக் கணமே நிச்சயம் ஆகிவிட்டது.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |