பிப்ரவரி 03 2005
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
காந்தீய விழுமியங்கள்
பங்குச்சந்தை ஒரு பார்வை
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
ஆன்மீகக் கதைகள்
முத்தொள்ளாயிரம்
நையாண்டி
கட்டுரை
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : கூடற்சுழி
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 81

  ஒரு விஷயம் சரியா, தவறா என்று தெரிந்துகொள்வதற்காக, ஒற்றை நாணயத்தைச் சுண்டி, பூவா, தலையா பார்க்கிறோம் ! அதுபோல, அந்தக் காலத்தில் வேறொரு நம்பிக்கையும் இருந்தது. அதற்கு 'கூடற்சுழி' என்று பெயர் !

  கண்ணை மூடிக்கொண்டு மணலில் ஒரு வட்டம் வரையவேண்டும் - அந்த வட்டம் துவங்கிய இடத்திலேயே வந்து முடிந்தால், நாம் நினைத்த காரியம் சரியாக நிறைவேறும் - ஒருவேளை, வட்டம் சரியாக உருவாகாமல், கோணல்மாணலாகிவிட்டால், நிறைவேறாது !

  இதன்படி, காதல் வயப்பட்ட பெண்கள், மண்ணில் வட்டம் வரைந்து பார்ப்பார்கள் - அந்த வட்டம் சரியாக உருவானால், தங்கள் காதலும் நல்லபடி நிறைவேறும் என்று அவர்களுக்குள் ஒரு நம்பிக்கை !

  இந்தப் பாடலில் வரும் பெண், பாண்டியனின் காதலி - 'கூடல்' என்று அழைக்கப்படும் மதுரை நகரின் தலைவனாகிய பாண்டியனைத் தான் கணவனாக அடைவோமா என்னும் ஏக்கம் கலந்த கேள்வியுடன், கடற்கரையில் அமர்ந்திருக்கிறாள் இவள் !

  அப்போதுதான், அவளுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது - பாண்டியனுடனான தன் காதல் சரிப்படுமா, இல்லையா என்று தெரிந்துகொள்வதற்கு, கூடற்சுழி வரைந்துபார்க்கலாமே !

  இந்த எண்ணத்துடன் சட்டென்று மண்ணில் தனது விரலை வைத்துவிட்டாள் அவள் - ஆனால், அதே கணத்தில், வேறொரு எண்ணமும் அவளைத் தாக்குகிறது - ஒருவேளை, வட்டம் சரியாக வரவில்லையென்றால் ? பாண்டியனுடன் தன்னால் சேரமுடியாது என்று காலம் தீர்ப்பளித்துவிட்டால் ? அந்த முடிவை என் நெஞ்சம் தாங்குமா ?

  இப்படி எண்ணியதும், அவளுடைய வட்டமிடும் யோசனை மறைந்துவிடுகிறது - மண்ணில் வைத்த விரலை எடுக்கவும் மனமில்லாமல், வட்டம் வரைந்து, தனது காதலின் தலைவிதியைச் சோதிக்கவும் மனமில்லாமல் குழப்பத்துடனே அமர்ந்திருக்கிறாள் அவள் !


  கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக்
  கூடப் பெறுவேனேல் கூடுஎன்று கூடல்
  இழைப்பாள்போல் காட்டி இழையாது இருக்கும்
  பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து.

  (கூடலார் - மதுரை நகரத்தைச் சேர்ந்தவர்கள்,
  இழைத்தல் - மண்ணில் வரைதல்
  பிழைபாக்கு - தவறு)  பாடல் 82

  பாண்டியனை எண்ணித் தவிக்கும் இந்தப் பெண், தன் தோழியை அவனிடம் தூதாக அனுப்புகிறாள் !

  இரக்கமில்லாத, கொலைத்தொழிலைச் செய்கின்ற யானையைக் கொண்ட தமிழர் தலைவன் பாண்டியனைச் சந்தித்தபின், அவனிடம் என்ன சொல்லவேண்டும், என்னென்ன சொல்லக்கூடாது என்றெல்லாம் இவளே சொல்கிறாள் :

  'தோழி, என்னைப்பற்றி அவனிடம் எதுவும் சொல்லாதே ! என் பெயரைச் சொல்லாதே ! நம் ஊரைச் சொல்லாதே ! நம் அன்னையைப்பற்றி எதுவும் சொல்லாதே, காதல்வயப்பட்ட என்னை, அவள் இப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறாள் என்று நீ சொல்லாதே !'
   
  இதைக் கேட்டதும் தோழி திகைத்துப்போகிறாள், 'இதெல்லாம் சொல்லாவிட்டால், அவனுக்கு உன்னைப்பற்றி எப்படித் தெரியும் ? உன் நிலைமை எப்படிப் புரியும் ?', என்று வியப்புடன் கேட்கிறாள் !

  அதற்கு இந்தப் பெண் அமைதியாய் பதில் சொல்கிறாள், 'அவனை எண்ணி, நான் தூங்காமல் தவித்திருக்கிறேன் என்றுமட்டும் சொல்லி வா ! மற்றவை அவனுக்குத் தானாய்ப் புரிந்துவிடும் !'


  என்னை உரையல்என் பேர்உரையல் ஊர்உரையல்
  அன்னையும் இன்னள் எனஉரையல் பின்னையும்
  தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்குஎன்
  கண்படா ஆறே உரை.

  (உரையல் - சொல்லாதே
  தண்படா - இரக்கமில்லாத
  கண்படா - தூங்காத)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |