பாஸ்தா டேஸ்டி பேல்
தேவையானப் பொருட்கள்
பாஸ்தா- 100 கிராம் வேகவைத்தது பனீர் - 100 கிராம் துருவியது கேரட் - 1 துருவியது ஸ்பிரிங் ஆனியன் - 3 பொடியாக அரிந்தது கொத்துமல்லி - 1/2 கப் பொடியாக அரிந்தது பச்சைமிளகாய்விழுது- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் மிளகுபொடி - 1/2 டீஸ்பூன் சர்க்கரை - 1 டீஸ்பூன் கோஸ் - 1/4 கப் துருவியது உருளைக்கிழங்கு சிப்ஸ்- 100கிராம் (ஒன்றிரண்டாக பொடித்தது) உப்பு- தேவையான அளவு
செய்முறை
அகலமான பாத்திரத்தில் மேலே கூறியுள்ளவைகளை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு குலுக்கி கலக்கவும். பாஸ்தாவை கொதிக்கும் நீரில் 2நிமிடம் வேகவைத்து நீர்வடித்து மேலே சிறிது நெய் அல்லது எண்ணை கலந்து வைக்கவும். வறண்டு போகாமல் இருக்க உதவும்.பாஸ்தாவுடன் யாவும் கலந்து மிகவும் ருசியாக இருக்கும். இந்த பேல் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. செய்வதும் எளிது.
பக்கோடி சாட்
தேவையானப்பொருட்கள்
பயத்தம்பருப்பு - 1 கப் ஜீரகம் - 1 டீஸ்பூன் பச்சைமிளகாய் - 2 இஞ்சி - சிறியதுண்டு உப்பு - தேவையான அளவு அரிசிமாவு - 1 டேபிள்ஸ்பூன் எண்ணை - பொரித்தெடுக்க
சாட் தயாரிக்க தேவையானவை
பொடியாக அரிந்த வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன் வேகவைத்த உருளைகிழங்கு - 1 துண்டுகளாக்கியது கிரீம் - 4 டேபிள்ஸ்பூன் காலாநமக் - 1/2 டீஸ்பூன் தயிர் - 6 டேபிள்ஸ்பூன் மிளகுபொடி - 1/2 டீஸ்பூன் வேகவைத்தசன்னா - 1/4 கப் ஸ்வீட்சட்னி - 2 டேபிள்ஸ்பூன் காரசட்னி - 2 டேபிள்ஸ்பூன் சாட்மசாலா - 1/2 டீஸ்பூன் கொத்துமல்லி - 1/4கப் பொடியாக நறுக்கியது
செய்முறை
பயத்தம்பருப்பை நீர் வடித்து உப்பு,பச்சைமிளகாய்,இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்து அரிசிமாவைச்சேர்த்து நன்றாக கலந்து கடாயில் எண்ணை வைத்து காய்ந்ததும் பக்கோடாவாக மாவை கிள்ளி போட்டு பொரித்து எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் 2நிமிடம் போட்டு எடுத்து நீர் வடித்து வைத்துக்கொள்ளவும். பரிமாறும் போது தட்டில் 6 பக்கோடாவை முதலில் பரவலாக வைத்து அதன் மேல் 2ஸ்பூன் பொடிதாக அரிந்த வெங்காயம்,4உருளைகிழங்கு துண்டுகள்,சிறிது மிளகுபொடி,சிறிது காலாநமக், 2ஸ்பூன்சன்னா,1/4ஸ்பூன் ஸ்வீட்சட்னி,1/4ஸ்பூன் காரசட்னி,2ஸ்பூன்தயிர்,சிறிதுசாட்மசாலா,1ஸ்பூன் கிரீம் சேர்த்து மேலே 2ஸ்பூன் கொத்துமல்லி தூவி தந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
|