Tamiloviam
பிப் 05 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : இலங்கை பிரச்சனையும் உயிர் தியாகங்களும்
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

 

இலங்கைப் பிரசனைத் தொடர்பாக சமீப காலங்களில் நடந்துவரும் தீக்குளிப்பு போராட்டங்களும் உண்ணாவிரதங்களும் தற்கொலை முயற்சிகளும் மனதை வருந்தச் செய்கின்றன. சில நாட்களுக்கு முன்பாக இந்தப் பிரசனைத் தொடர்பாக தீக்குளித்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, மற்றும் அரளிவிதை சாப்பிட்ட தற்போது ஆபத்தான கட்டத்தில் இருக்கும்  பெரிய குளத்தைச் சேர்ந்த அன்பு, அழகன், ஷாம் என்ற மூன்று மாணவர்களின் குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Muthukumarஆனால் சற்று உன்னிப்பாக கவனித்தால் ஒன்று புரியும் - இலங்கைப் பிரச்சனையில் ஏதாவது ஒரு தீர்வை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் தங்களால் முடிந்த அளவிற்கு அரசியல் நாடகம் நடத்திவிட்டு வாளாயிறுக்கும் வேளையில் அப்பாவிகள் அவர்களது உணர்சிமயமான பேச்சுகளைக் கேட்டு தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். முத்துக்குமார் அல்லது ரவியின் மரணத்தை யாரும் கொச்சைப் படுத்தவில்லை.. ஆனால் அவர்களது தற்கொலையால் இந்தப் பிரச்சனைக்கு ஏதாவது ஒரு தீர்வு ஏற்பட்டுள்ளதா - ஏற்படப்போகிறதா என்றால் பதில் இல்லை என்பதுதான். அந்தக் காலத்தில் திலீபனிலிருந்து தொடங்கி இன்று முத்துக்குமார் வரை இலங்கை மக்களுக்கு நல்லது ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தில் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால் அவர்களது உயிர்தியாகம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்க்கொண்டிருக்கின்றன.

முத்துக்குமாரைப் போன்ற திறமையானவர்கள் இது போன்று அநியாயமாக உயிரை மாய்த்துக் கொண்டது மிகவும் வேதனைக்குரியது. தமிழர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாழ்வை வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்படும் விதத்தில் அமைத்துக் கொள்ள வேண்டுமேதவிர, இது போன்று உயிரை மாய்த்துக்கொள்வது விவேகமல்ல. இத்தகைய தியாகங்கள் பரிதாபகரமானது. இது போன்ற அப்பாவிகளை உசுப்பேற்றும் வகையில் வீர வசனங்களைப் பேசுகின்ற தலைவர்கள் இப்படி தீக்குளிப்பார்களா ? முத்துக்குமாரின் மரணம் சில நாட்களில் மறக்கடிக்கப்படும் - அடுத்து வரும் பண்டிகை, சினிமாக்காரர்கள் விழாக்கள், தேர்தல் இவை எல்லாம் அவரது மரணத்தை பின்னுக்குத் தள்ளிவிடும். ஆனால் அவரது குடும்பம் மட்டும் அவரை இழந்து காலம் முழுவதும் தவிக்கும்.

பாடிப்பாடியே தன்மான - இனமான உணர்வை வளர்த்தார் பாரதி. உலகமெல்லாம் தன் கருத்தைக் கேட்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு பல வழிகள் உள்ளன - தற்கொலை சரியான வழி கிடையாது. அரசியல்தலைவர்கள் வேண்டுமானால் தங்களது சுயலாபத்திற்காக முத்துக்குமார் போன்றவர்களின் மரணத்தை நியாயப்படுத்தலாம் - ஆனால் பிரச்சனைக்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்க இது ஒரு சரியான வழி இல்லை.  உணர்சிகரமான இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக உயிரோடு பலகாலம் வாழ்ந்து தங்கள் சகமனிதர்களுக்கு தங்களால் இயன்ற நன்மைகளை செய்ய நமது இளைஞர்களும் மாணவர்களும் முன்வரவேண்டும். உணர்ச்சி பூர்வமாக முடிவெடுக்கும் முன்னர் கொஞ்சம் சிந்தியுங்கள் இளைஞர்களே....

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |