Tamiloviam
பிப்ரவரி 07 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா
- [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

"அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு" என்பது போன்ற பிரிவினை கோஷங்களும் ஐம்பதுகளில் எழுந்தன.

கடந்த சில நாட்களாக வட இந்தியர்கள், அதுவும் குறிப்பாக பீஹார், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மஹாராஷ்டிரத்தலைநகரான மும்பையில் ராஜ்தாக்கரையின் கட்சியைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டு இருக்கின்றனர்.  காரணம் நடிகர் அமிதாப்பச்சன் உத்தரப் பிரதேசத்தில் கல்வி நிறுவனங்கள் தொடங்கியதுதான்.  மும்பையிலே சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு மஹாராஷ்டிரத்தில் கல்வி நிறுவனங்கள் தொடங்காது, உ.பி.யில் தொடங்கியதே காரணம்.

Amitab Bacchanநடிகர் அமிதாப்பச்சன் சம்பாதித்த பணம் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தது எப்படி என்று தான் புரியவில்லை.  அவர் ஒரு நடிகர்.  அவர் நடித்த படங்கள் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஓடி தயாரிப்பாளர்களுக்குப் பெரும் பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்தன. அப்படித் தயாரிப்பாளர்களுக்கு உலகளாவிய வருமானம் இருப்பதால் அவருக்கு அவர் கேட்ட பணம் கொடுக்கப் பட்டது.  அந்தப் பணம் எப்படி மஹாராஷ்டிராவு மட்டும் சொந்தமாகும்?  மிகக் குறுகிய, விசாலமற்ற பார்வை.

பொதுவாக மும்பையைச் சேர்ந்தவர்களுக்கே தாங்கள்தான் "இந்தியாவையே வாழ வைப்பவர்கள்" என்ற எண்ணம் உண்டு. அவர்களுடைய வேலை வாய்ப்புக்களையெல்லாம் மற்ற மாநிலத்தவர்கள் அபகரித்துக் கொள்வது போன்ற எண்ணமும் உண்டு. சென்ற ஆண்டு ஓர் ஆங்கில தினசரியில் இந்தியாவின் மொத்த வருமான வரி வருமானத்தில் மும்பையின் பங்கு சுமார் 40% என்று ஒரு விசாலமான பெட்டிச் செய்தி வெளியிட்டது.  அத்துடன் அந்த தினசரி நிற்கவில்லை.  மத்திய அரசு அந்த வருமானத்திலிருந்து பெரும் தொகையை மும்பையின் வளர்ச்சிக்குக் கொடுக்க வேண்டுமென்றும் எழுதி இருந்தது.  இது தொடர்பாக வாசர்கள் தங்கள் கருத்துக்களை எழுதலாம் என்றும் அந்த மும்பையிலிருந்து வெளியாகும் தினசரி வெளியிட்டது. 

அதிலிருந்து தினமும் "மத்திய அரசு சுமார் 40% வருமானத்தையும் மும்பை வளர்ச்சிக்கே ஒதுக்க வேண்டும்" என்பது போன்ற கருத்துக் கொண்ட வாசகர் கடிதங்கள் வந்து கொண்டே இருந்தன.  ஏன்! ஓய்வு பெற்ற ஒரு கிரிக்கெட் கேப்டன் கூட இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார்.

மும்பையிலே பல நிறுவனங்களின் தலைமையகங்கள் இருக்கின்றன.  மற்ற நகரங்களில் உள்ள தலைமையகங்களைவிட மும்பையில் அதிகம். வருமான வரிக்கணக்கும் தலை மையகத்தில் தான் தாக்கல் செய்வார்கள். ஆனால் வருமான வரி என்பது ஒரு நிறுவனத் தின் அகில இந்திய அளவில் அதன் விற்பனையிலிருந்து வரும் நிகர லாபத்திருந்து செலுத்தும் வரியாகும்.  It is a tax on the net profit of its all India activity.

ஆக அந்த வரி எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கும் சொந்தம் கிடையாது. சொந்தம் கொண்டாடவும் முடியாது.

ஆனால் அந்த தினசரி ஒரு தவறான கண்ணோட்டத்துடன் செய்தி வெளியிட்டது.  இந்தக் கண்ணோட்டம் போன்றதுதான் அமிதாப்பச்சன் விவகாரமும்.

இதே போன்று ஒரு மாநிலத்தவரை மற்றொரு மாநிலத்தில் தாக்குவது இந்திய அரசியலில் புதிதல்ல. அறுபதுகளிலே தமிழர்கள் மும்பையில் தாகுதலுக்குள்ளானார்கள். தமிழர்களுக்கு வீடுகூட வாடகைக்கு விடக்கூடாது என்ற கோஷமும் எழுந்தது.. சில ஆண்டுகளுக்கு முன் கர்நாடகத்தில் காவிரிப் பிரச்சனை காரணமாகத் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.  சென்ற ஆண்டு அசாமில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப் பட்டனர். நமது நாட்டிலேயே அடுத்த மாநிலத்தவரை அண்டை நாட்டினராகக்  கருதும் மனப்பான்மையை வளரவிடக்கூடாது.

ஏன்! தமிழ்நாட்டிலேயே "வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது!", "அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு" என்பது போன்ற பிரிவினை கோஷங்களும் ஐம்பதுகளில் எழுந்தன.

நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் எத்தகைய செயல்களையும், மத்திய, மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

| |
oooOooo
                         
 
அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |