பிப்ரவரி 09 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : ராஜ்பக்சே அறிவிப்பும் இலங்கை மக்களும்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடையாது என்று இலங்கை அதிபர் ராஜ்பக்சே நேற்று அறிக்கை ஒன்றில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநாடு கேட்டு விடுதலைப்புலிகள் போராடிவரும் இந்நிலையில் " நாட்டில் நடக்கும் ஆட்சியைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் நாட்டைப் பிரிக்க இயலாது. அப்படி பிரிக்க நினைக்கும் போராளிகளை நிச்சயம் கட்டுப்படுத்துவோம்.." என்று தனது புலிகள் எதிர்ப்பு கொள்கையை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார் இலங்கை அதிபர்.

கடந்த பல வருடங்களாக நார்வே நாடு மேற்கொண்டுவரும் சமரச முயற்சிகளால் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் அவ்வப்போது போர் நிறுத்தம் ஏற்பட்டு வந்தாலும் பல இடங்களில் சிறு சிறு மோதல் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இலங்கையை ஆண்ட முன்னாள் அதிபர்கள் பலரும் புலிகள் இயக்கத்தின் மீது துவேஷம் கொண்டவர்கள் தான். என்றாலும் தன்னுடைய புலிகள் எதிர்ப்பு கொள்கையை கொஞ்சம் கூட ஒளிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாக காட்டும் ரஜ்பக்சே எப்போது இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டாரோ அப்போதிலிருந்தே இலங்கைப் பிரச்சனையை உன்னிப்பாக ஆராய்ந்துவரும் நடுநிலையாளர்கள் "இலங்கைத் தமிழ் மற்றும் சிங்கள மக்களின் கதி இனி என்ன ஆகுமோ?" என்று கவலைப்பட ஆரம்பித்தனர்.

உதட்டளவில் தானும் தனது அரசும் புலிகளுடனான மோதல்போக்கை கைவிட்டு விட்டு சமாதானமாகவே போக விரும்புவதாக இலங்கை அதிபர் கூறிவந்தாலும் புலிகளுக்கு எதிராக சமயம் கிடைக்கும்போதெல்லாம் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ராணுவத்திற்கு உத்திரவிடுவார் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ராஜ்பக்சேவின் தற்போதைய அறிக்கை கட்டாயமாக புலிகள் இயக்கத்தினரை கோபப்படுத்தும் என்பதிலும் அவர்களும் பதில் தாக்குதல் நடத்துவார்கள் என்பதிலும் மாற்று கருத்தே இல்லை.

ஒரு நாட்டின் அதிபராக உள்ளவர் தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை இப்படி அப்பட்டமாக காட்டுவது என்பது சிறுபிள்ளைத்தனமான செயலாகும். நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லவேண்டியதும், பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்துவைப்பதும் அதிபராக பதவியேற்றவரின் தலையாயக் கடமை. ராஜ்பக்சே தானே முனைந்து சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டாலும் பிற நாடுகளின் உதவியுடன் ஓரளவு வெற்றிகரமாக நடந்துவரும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை இப்படி அடியோடு முறிக்கும் செயல்களில் இனியாவது ஈடுபடாமல் இருந்தால் அது அவருக்கும் அவரது நாட்டு மக்களுக்கும் பல விதங்களில் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

| | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |