பிப்ரவரி 09 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : உலகின் மிகப் பெரிய சேரி
- ராமசந்திரன் உஷா
| Printable version | URL |

Kishanவிமானம் தரையிறங்கும்பொழுது சன்னல் வழியாய் எட்டிப் பார்த்தால் பொதுவாய் பச்சை சதுரங்கள், நீர் நிலைகள், கடலை ஒட்டிய நகரமென்றால்  தென்னை மரங்கள், அங்கங்கு அடர்ந்த காடுகள், நடுவில் நகரம் என்று இருக்கும். எல்லா நகரங்களும் இப்படித்தான் இருக்கும். ஆனால் மும்பை மட்டும் வித்தியாசமாய் இருந்தது. எங்குப் பார்த்தாலும் நீல நிற பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட குடிசை தொடர்கள் வளைந்து வளைந்துப் போய் கொண்டிருக்க சம்மந்தமேயில்லாமல் நடுவில் உயரமான கட்டிடங்கள்.

ஊரில் டாக்சியில் வலம் வரும்பொழுது நீக்கமற நிறைந்த குடிசைகள் மற்றும் இடிந்து விழம் நிலையில், எந்த வித பராமரிப்பும் இல்லாத விக்டோரியா மகாராணி காலத்து கட்டிடங்கள். அதிலும் குடியிருப்பவர்களின் தைரியத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். மறுநாள் ஒருநாள் சுற்றுலாவாக மும்பையை சுற்றி வந்தோம். பஸ்ஸில் கைட் என்ற கணக்கில் அரைகுறை ஆங்கிலமும், ஹிந்தி/மராத்தி கலவையில் நேரடி ஒலிப்பரப்பு தொடங்கியது. அந்த பதினைந்து வயது பயலுக்கு சினிமா மோகம் அதிகம் போல. குமார்கள், கான்கள், கபூர்கள் என்று மலபார் ஹில்ஸ் பகுதியில் நுழைந்ததும், திரைப்பட நட்சத்திரங்களின் வீடுகளைப் பார்க்கவே வந்துப் போல, சொல்ல ஆரம்பித்துவிட்டான்.

அனைத்தும் பிரமாண்ட மாளிகைகள் அல்லது வானை தொடும் அடுக்குமாடி குடியிருப்புகள். அடிக்குமாடி குடியிருப்பின் விலையும் பல கோடிகள். பார்த்துக் கொண்டு வரும்பொழுது, ஒரு நடிகரின் பங்களா. தோட்டமும், துறவுமாய் மும்பையா இது என்று ஆச்சரியப்படும்பொழுது, முறன்பட்ட நகைச்சுவையாய் அவர் வீட்டு கம்பவுண்ட் சுவரை ஒட்டி நீள குடிசை வீடுகள். அங்கு குடியிருப்பவர்களும் அந்நடிகரின் படங்களை சில நூறு ரூபாய்கள் செலவழித்துப் பார்த்திருப்பார்கள்.

ஆனந்தவிகடனில் முன்பு நடிக, நடிகையின் வீடுகளில் பற்றி எழுதிக் கொண்டு இருந்தார்கள். எல்லாமே பங்களாக்கள். ஓடுகிற குதிரை மேல் பணம் கட்டுவதுப் போல என்று சொல்லப்பட்டாலும், தயாரிப்பு செலவில் பெரும்பகுதி நடிகர்களுக்கே போய் விடுகிறது. உயிரை பயணம் வைத்து சண்டைக்காட்சிகளில் தோன்றும் ஸ்டண்டு நடிகர்களுக்கு தரப்படும் ஊதியமும் வெகு குறைவுதான். படப்பிடிப்பின் போது, அடிப்பட்டால், அவர்கள் கதி அதோகதி. படத்தில் சம்மந்தப்பட்ட உதவி இயக்குனர்கள், கதாசிரியர்கள், பாடலாசிரியர்கள்
உட்பட,  அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் ஊதியம் சில ஆயிரங்களாம்.

மும்பையில் பார்த்த இன்னொரு விஷயம், ஊர் எங்கும் கண்ணில் பட்ட குழந்தை தொழிலாளர்கள். பீகார் போன்ற பின் தங்கிய மாநிலங்களில் இருந்து பிழைக்க வந்த சிறுவர்கள். பதினெட்டு மணிநேரத்திற்கு குறைவில்லாமல் உழைத்து அவர்கள் அனுப்பும் பணத்தை எதிர்ப்பார்த்து ஊரில் காத்திருக்கும் உறவுகள்.  தமிழ்நாட்டில், சிறுநகரமான சீர்காழியில் கூட இங்கு குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்வதில்லை என்ற பலகையை ஒரு ஹோட்டலின் வெளியே பார்த்து அந்த உரிமையாளரிடம் கேட்டேன். பலரும் இப்பொழுது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என்றார்.

Kishanஆனால் இந்த விஷயத்தில் இன்னொரு பரிமாணம், நீங்களே பார்த்திருக்கலாம். ஒவ்வொருமுறையும் பத்தாவது, பன்னிரண்டாவது வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களை வாங்கி பல ஏழை மாணவர்கள், பள்ளிக்கூடம் போக மற்ற நேரங்களில் வேலை செய்து தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்துக் கொண்டதாக சொல்வார்கள். பல்வேறு பிரச்சனைகளால் இவர்களுக்கு பெற்றோர்களின் பண உதவி கிடைப்பதில்லை. ஆக படிப்புக்கு ஒதுக்கிய நேரம் போக, வேலை செய்வது சம்பாதிப்பதை தடை செய்வது சரியில்லை.

சென்னை கடற்கரையில் பூ விற்கும் சிறுமிகள், சுண்டல், முறுக்கு விற்கும் சிறுவர்கள் அனைவரும் சொல்லும் ஓரே விஷயம், தந்தை சரியில்லை, தாய்க்கு உதவியாய் மாலை நேரம் வேலை செய்கிறோம் என்று. ஆனால் அனைத்து பிள்ளைகளும் பள்ளியில் படிப்பதாகவே சொல்வார்கள்.

டைரக்டர் கிஷன் ஸ்ரீகாந்த், இயக்கும் கேர் ஆப் பு·ட் பாத் ( பிளாட்பாரம்) படத்தின் கதையும் இதுதான். பிளாட்பாரத்தில் வளரும் அனாதை சிறுவன், படித்து முன்னேறுவதை சொல்கிறது இப்படம். கன்னடத்தில் தயாராகும் இப்படம் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் இந்திய  மொழிகளில் டப் செய்யப்படப் போகிறது. ஆகஸ்ட் 2006 கின்னஸ் சாதனையில் பெயர் பெறப்போகும் இப்படத்தில் நடிக்க விருப்பப்பட்டதால்  ஜாக்கி ஷராப் அவர்களுக்கு கதையில் வரும் ஒரு பாத்திரம் சரியாய் இருக்கும் என்று நினைத்து டைரக்டர் வாய்ப்புக் கொடுத்துள்ளார். நடிகருக்கு பாத்திரம் உருவாக்கப்படவில்லை, பாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்.

காமிரா கோணங்கள், அதற்கு தேவையான பிலிம் ரோல் போன்ற தொழில் நுட்பங்களை வெகு சாதாரணமாய் சொல்லும் அப்படத்தின் கதாநாயகனும் டைரக்டருமான கிஷன் குமாருக்கு வயது ஒன்பது.

| | | |
oooOooo
ராமசந்திரன் உஷா அவர்களின் இதர படைப்புகள்.   கொஞ்சம் கதைக்கலாம் வாங்க பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |