பிப்ரவரி 09 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : காதல் கதறல்
- சத்தி சக்திதாசன் [sathnel.sakthithasan@bt.com]
| Printable version | URL |


கண்களெனும் வில்லெடுத்து பார்வையெனும் கணை பொருத்தி
    காதலெனும் உணர்ச்சிதனையென் நெஞ்சினிலே புகுத்தி
காலமெலாம் என்னுயிரை தனிமையெனும் கானகத்தில் இருத்தி
    கண்டதென்ன சொல்லு மங்கை நீயும் எனை வருத்தி

நினைவெனும் தேரை நான் கனவெனும் காட்டில் செலுத்தி
    நித்தமும் உள்ளத்தை உன்நினைவெனும் முட்களால் துருத்தி
நிகழ்த்துவது நெஞ்சத்திலே காதல் யுத்தம் மகராணியுனை நிறுத்தி
    நேசக்கரம் நீட்டி பாவை நீ மாற்றாயோ காலம்தனை திருத்தி    

கனவிலெல்லாம் தேவியுந்தன் அழகின் திருவுருவம் போற்றி
    காத்திருந்தேன் காதல் விளக்கை இதயக்கோவிலில் ஏற்றி
கன்னி நீயும் காதலுடைத்து இருத்திடுவாய் இதயங்களை மாற்றி
   கடைசிவரை காணவில்லை காதலில் இன்றுவரை வெற்றி

மென்மையான உணர்வுகளால் காதல் தினமும் எனை மாட்டி
     மெல்லிடையாள் நினைவுகளால் சுட்டெரித்து வாட்டி
மோகினிமேல் தென்றலிலே கோர்த்தெடுத்த பாமாலை சூட்டி
     மொத்தமாகக் காத்திருப்பேன் பாவைமேலான காதலைப் பூட்டி


| | |
oooOooo
சத்தி சக்திதாசன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |