பிப்ரவரி 10 2005
தராசு
வ..வ..வம்பு
பங்குச்சந்தை ஒரு பார்வை
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
சிறுகதை
நையாண்டி
மஜுலா சிங்கப்புரா
கவிதை
ஆன்மீகக் கதைகள்
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கட்டுரை : எஸ். என். நாகராஜன் - ஒரு சந்திப்பு
  -
  | Printable version |
  "இந்துக்களோட ஆதிக்கத்துக்கே வெள்ளைக்காரன் காரணமாகிறான். அதுவரைக்கும் இந்தியாவுல ஆதிக்கத்துல முஸ்லீம் உக்காண்டிருந்தான். இந்த முஸ்லீம் ராஜ்யத்துலே பெரும்பகுதி வெள்ளைக்காரன்தானே ஒழிச்சான். அதனால் இந்த முஸ்லீம் யாருமே இங்கிலீஷ் படிக்கல்லே."

  (1995 ஆண்டு காலச்சுவடு இதழ் எண் 10ல் இடம்பெற்ற எஸ்.என் நாகராஜன் நேர்காணல் 1993ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அந்தப் பேட்டியில் இருந்து காந்தி குறித்த அவருடைய கருத்துக்கள்)

  * தேசிய இயக்க காலகட்டத்துல இந்தியாவுல ஒரு பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டதுன்னு நம்பறீங்களா ?

  சாதாரணமா கீழ்மட்டத்தில பார்த்தீங்கன்னா இந்த அதிகார மாற்றம் என்பது தங்களுடைய நல்வாழ்விற்காக இருக்கும் என்ற அபிப்ராயம் இருந்தது. அவங்கதான் பாடுபட்டு வாங்கி கொடுத்தாங்க. ஆனா மேல் மட்டத்துலே இருக்கிறவங்களுக்கு அந்த அபிப்பிராயம் இருக்கல்ல. வட்டமேசை மாநாட்டுல அம்பேத்கார் காந்தி கேள்வி வருது பாருங்க. அதுல பார்த்தீங்கன்னா எந்த அளவுக்கு இவங்களுடைய அபிப்பிராயம் இருந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம்.

  * இந்தியாவுல ஒரு மாற்றம் ஏற்படணும், மக்கள் விடுதலை பெறணும் அப்படிங்கற எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லையா ?

  அதன் தலைமைக்கு அடிப்படையான சமுதாய மாற்றம் வேணும்ங்கற எண்ணம் இருக்கவில்லை.

  * காங்கிரஸ் இயக்கத்துல முக்கியமான ஆளுமையான காந்திக்கு இருந்ததா ?

  காந்திக்கும் இருக்கவில்லை. காந்தியினுடைய தர்மகர்த்தா ராஜ்யத்தை நீங்க பார்த்தீங்கன்னா அவர் மேல் சாதி ஆதிக்கத்தைத்தான் விரும்பராருன்னு தெரியும். காந்தியைப் பற்றி இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஒரு நூல் எழுதியிருக்காரு. Gandhi and his Ismன்னு சொல்லி. அதுல காந்தி சொன்னதை முக்கியமா போடறாரு. 'ஆங்கில ஏகாதிபத்தியம் அழிந்துவிட்டால் என்னுடைய கனவு எல்லாம் அழிந்துவிடும்'. அப்ப ஏகாதிபத்தியம் ஒழியக்கூடாதுங்கறதுதான் அவரோட அபிப்பிராயம். அதே ஏகாதிபத்தியத்தை மாவோ எப்படிப் பார்த்தாரு? ஏகாதிபத்தியத்தை ஒழிச்சாத்தான் மக்கள் வாழ முடியுங்கறது அவருடையன் நிலைப்பாடு. காந்தி தாழ்த்தப்பட்டவங்கள எப்படிப் பார்க்கறாரு? அடுத்தாப்ல உடலை எப்படிப் பார்க்கறாரு? பெண்களை எப்படிப் பார்க்கறாரு? இந்திய பண்பாட்டுல ஆன்மிகவாதம் சாதாரண மக்களையும் பெண்களையும் உடலையும் ஒரே தரத்தில்தான் வைக்கின்றது. அந்த மூணுமே மயக்கத்தை உருவாக்கக்கூடியதுங்கறதுதான் நம் ஆன்மீகத்தின் ஆதிக்கக் கருத்து. காந்தியினுடைய அணுகுமுறை துறவியினுடைய அணுகுமுறை. இறுதியில் துறவிக்கோலம் போலியாகத்தான் முடியும். இதற்கு காந்தியும் விதிவிலக்கல்ல. உடலை வருத்திக்கறாரு. அயுதத்தை எடுக்காதேங்கறாரு. சௌரி சௌராவிலே அவர் எடுத்த முடிவு அதுதான். ஆயுதத்தை எடுத்தா ஆங்கில பூர்ஷ்வா மட்டும் ஒழியமாட்டான். நம் பூர்ஷ்வாவும் ஒழிஞ்சுடுவான். காந்தி அதற்குத் தயாராக இல்லை. ஆக காந்தி ஒரு பூர்ஷ்வா வர்க்கத்தோட பிரதிநிதி. காந்திக்கு மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கணும்னு இல்லை. அவருக்கு மேல்தட்டு ஜாதியோட நல்ல ஆட்சி அமையணும்னுதான் விருப்பம். காந்தியைப் பற்றி இதுதான் என்னுடைய உறுதியான கணிப்பு. ஆனால் ஒண்ணு சொல்லணும். தொழில் நுட்பத்தைப் பொறுத்தவரையில் காந்திக்கு இருந்த புரிதல் வந்து நேருவைக் காட்டிலும், மார்க்ஸிஸ்டுகளைக் காட்டிலும் மேலானது.

  லூயி ·பிஷர்கிட்ட ஒரு பேட்டியில் காந்தி சொல்றாரு, 'என்னுடைய அடுத்த திட்டமாக உழவர்களே நிலத்தை எடுத்துக்கும்படி சொல்லப் போறேன்.' 1942-43லன்னு நினைக்கிறேன். அப்போ வன்முறை இருக்காதான்னு ·பிஷர் கேக்கறதுக்கு, 'இருக்கும். ஆனா அதை என்னுடைய கட்டுப்பாடில கொண்டு வந்துடுவேன்'னு காந்தி...

  காந்தி சொன்னதை சொல்றேன். இவங்க விடலைன்னா வன்முறை ஜாஸ்தியாகும்னாரு.

  * அப்ப இந்த நிலச் சீர்திருத்தம் வந்து மேல் வர்க்கத்துக்கு எதிரானது இல்லையா ?

  நிலச் சீர்திருத்தம் பூர்ஷ்வா வளர்ச்சிக்கு தேவையாயிருக்கு. ஏன்னா கிராமப்புறத்தினுடைய வாங்கும் சக்தி அதிகமானாதான் உள்நாட்டு பூர்ஷ்வா வளர முடியும். அதனால் அது பூர்ஷ்வாவுக்கு எதிரானதல்ல. அதோட நிலச் சீர்திருத்தம் சோசலிசம் அகாது.

  * அப்ப நிலப் பிரபுத்துவத்துக்கு எதிரான குரல் காந்தியுடையதுன்னு சொல்லலாமா ?

  நிலப்பிரபுத்துவம் கூடாதுங்கறது காந்திக்கு இருந்தது. ஐயாயிரம் ஏக்கர் ஒருத்தன் வச்சிண்டிருக்கிற வரைக்கும் பம்பு செட்டு ஓடாது. 5 ஏக்கர், பத்து ஏக்கராக இருந்தாத்தான் நூற்றுக்கணக்கான பம்பு செட்டு ஓடும். அப்ப அவன் என்ன சொல்லுவான்? நிலப்பிரபுத்துவம் ஆகாதும்பான். நிலச் சீர்திருத்தம் சம்பந்தமா காந்தி எடுத்த முடிவு பூர்ஷ்வாவுக்குத் தேவையான முடிவு. பிர்லாவும், டாட்டாவும், நம்ப டி.வி.எஸ்ஸ¤ம், பி.எஸ்.ஜி. நாயுடுவும் விரும்பக்கூடிய முடிவு.

  விஞ்ஞானத்தைப் பொறுத்தவரையில் அவருடைய மதிப்பீடு வந்து...

  நவீன கால விஞ்ஞானத்தைப் பொறுத்தவரையில் அவருடைய மதிப்பீட்டுல ஒரு நியாயம் இருக்கு.

  * அவருடைய மதிப்பீடு என்ன ?

  இதுவந்து பொதுவா ஒரு மக்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஆயுதமே தவிர மக்களை சொந்தக் காலுல நிக்க வைக்கறதுக்கான ஒரு அறிவு அல்ல என்பது அவருடைய கருத்து உதாரணமாக அவர் என்ன சொல்லறாரு. 'தொழில் நுட்பத்திற்கு நான் விரோதி அல்ல. தையல் இயந்திரம் ஒரு அருமையான தொழில் நுட்பம். கைராட்டினமும் ஒரு தொழில் நுட்பமே. இந்த தையல் இயந்திரமும், கைராட்டினமும் உங்களை அடிமைப் படுத்தவில்லை. வேலை எளிதாச்சு. நேர்த்தியாகவும் ஆச்சு; உங்களுடைய சுதந்திரத்தை அபகரிக்காத தொழில் நுட்பத்தை நான் விரும்புகின்றேன்.' இது காந்தியினுடைய நிலை. இதில் அவர் மார்க்சுடைய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் எதற்காக என்பதில்தான் மார்க்சிடமிருந்து வேறுபடுகிறார்.

  இதுல ஒரு முரண்பாடு இருக்கே. ஒண்ணு நான் ஏகாதிபத்தியத்தோட நண்பன்னு சொல்லறாரு. இன்னொரு பக்கத்துல மக்களுடைய விடுதலையைப் பற்றி பேசறாரு.

  இதுல ஒரு உள்நோக்கம் ஒண்ணு இருக்குன்னு நான் பார்க்கிறேன். இந்துக்களோட ஆதிக்கத்துக்கே வெள்ளைக்காரன் காரணமாகிறான். அதுவரைக்கும் இந்தியாவுல ஆதிக்கத்துல முஸ்லீம் உக்காண்டிருந்தான். இந்த முஸ்லீம் ராஜ்யத்துலே பெரும்பகுதி வெள்ளைக்காரன்தானே ஒழிச்சான். அதனால் இந்த முஸ்லீம் யாருமே இங்கிலீஷ் படிக்கல்லே. அவன் விரோதியா நினைச்சாங்க. சர் சையத் அலிகார் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்த அப்புறம்தான் முஸ்லீம் மக்கள் மனதில் திருப்பம் வந்தது. அதுவரைக்கும் முஸ்லீம் மக்கள் வந்து ஆங்கிலேயருக்கு எதிராக இருந்தாங்க. வெள்ளைக்காரன் ராஜ்யத்துக்கு வந்ததுக்கு அப்புறம் ஒரு காலகட்டத்துல பூரா பார்த்தீங்கன்னா இந்துக்கள் அரசு பொறுப்புகளில் முக்கியமானவங்களா இருக்காங்க. இந்த ஏகாதிபத்தியம் வந்து இந்துக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகத்தான் காந்தி பார்க்கிறார். சாதாரண மக்களுடைய ஆதிக்கத்தை அவர் விரும்பவே இல்லை. இரண்டாவது அவர் அடிப்படையில் ஜனநாயகத்தை விரும்பினதாக நான் ஏத்துக்க முடியாது. அவரும் ஒரு Autocratதான்.

  இந்த வகையான தொழில் வேணும், இந்த வகை வேண்டாம் அப்படீன்னு பாகுபாடு இருக்கு அவர்கிட்ட. அந்தப் பாகுபாட்டுக்கு அடிப்படை ஒண்ணே ஒண்ணுதான்; நம்முடைய மக்கள் வந்து நிரந்தரமான அடிமை ஆயிடுவாங்க. முக்கியமான எதிர்ப்பு என்ன? மேற்கத்திய நாகரீகத்தை ஏத்துக்க மாட்டேன்னுட்டாரு. இயந்திர நாகரீகம்ங்கறாரு. அவர்கிட்ட முரண்பாடு இருக்கு. நீங்க சொல்லறது என்னன்னு கேட்டா, முரண்பாடு இருக்கா? இருக்கு. There is a paradox in him. "Consistency is only a virtue of an ass"ன்னு அவரே தமாஷா சொன்னாரு.

  * இன்னிக்கு இந்தியாவுல வந்து பல்வேறு இயக்கங்கள்ல காந்திய முன்னிறுத்தி பேசற அவரை மறுபரிசீலனை செய்யற மனோபாவம் இருக்கற மாதிரி தெரியுது. இதற்கு என்ன காரணம் ?

  என்னுடைய நண்பர் சைலன் கோஷ், சூழலியல், இயற்கை வேளாணமை பற்றி எல்லாம் நிறைய எழுதியும் பேசியும் வராரு. காந்திகிட்ட இருந்து எனக்கு இந்த தெளிவு வந்ததுன்னாரு. சைலன் கோஷ் ஆரம்பத்தில் ஒரு மார்க்சிஸ்டு. கட்சி உறுப்பினரா இருந்தவர். ரொம்ப நாணயமானவர். நான் சொன்னேன். நான் காந்தியை ஒத்துக்கலை ஐயா. அனால் நானும் சூழலியல் பேசறேன். மக்களுடைய விஞ்ஞானம், தொழில் நுட்பம் பத்தி பேசறேன். இதுக்கு காந்தியா தூண்டுகோல்? மார்க்ஸ்தான் தூண்டுகோல்.

  நன்றி : காலச்சுவடு நேர்காணல்கள் (95-97) - தொகுப்பாசிரியர்: கண்ணன் - காலச்சுவடு பதிப்பகம் - ISBN 81-87477-16-4 :
  ரூ. 120/-

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |