பிப்ரவரி 16 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உடல் நலம் பேணுவோம் : வைட்டமின் D கோலி கால்சிஃபெரால்
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

வைட்டமின் D கொழுப்பில் கரையக்கூடிய ஒரு வைட்டமின். இது இயற்கையாகவே சூரிய ஒளியில் உள்ள UV கதிர்கள் மூலம் தோலில் தயாரிக்க படுகிறது.

கால்சிஃபெரால் எனப்படும் வடிவம் மிக அதிகமாக காணப்படும் வீரியம் மிகுந்த வடிவம் ஆகும். கல்லீரல், சிறுநீரகங்கள் வைட்டமின் D ஐ  வீரியம் உள்ளதாக மாற்றுகின்றன.

இந்த வீரியம் உள்ள வடிவம் 1, 25 டிஹைய்டிராக்சி வைட்டமின் D என அழைக்க படுகிறது. இது ஒருவகையில் ஹார்மோனாக அழைக்கப்படுகிறது. ஏனென்றால் செயல்படும் நிலையில் உள்ள வைட்டமின் D சிறுகுடலுக்கு பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தனிமங்களை உறிஞ்ச  செய்தி அனுப்புகிறது.

வைட்டமின் D யின் முக்கியமான உடலியல் செயல்பாடு, இரத்ததில் உள்ள கால்சியம் பாஸ்பரஸ் அளவை சீராக்கி வைப்பது மட்டுமே ஆகும். கால்சியம் அதிகரிக்க உடல் எலும்புகள் பற்கள் வலுவானதாக மாறுகின்றன. மேலும் இதர வைட்டமின்கள், என்சைம்கள், ஹார்மோன்கள் செயல் பட கிரியாஊக்கியாக கால்சியம் செயல் பட , எலும்புகளில் தனிமங்கள் சேர வைட்டமின் D அவசியம் ஆகும்.

 சைட்டோகுரோம் 450 இன் செயல் திறன், உடலின் சக்தியை சேகரிக்கும் மைடோகாண்டிரியாக்களின் செயல் பாடு, உடலின் எதிர்ப்பு சக்தியை வளர்க்க, போன்ற பல வற்றின் சீரான செயல்பாட்டிற்கு வைட்டமின் D தேவை.

வைட்டமின் D கிடைக்கும் உணவுப்பொருட்கள் என்ன? 1930இல் அமெரிக்காவில் ரிக்கெட்ஸ் நோய் பரவலாக இருந்தது. ஆகையால் பால் முதல் எல்லாவற்றிலும் செயற்கையாக வைட்டமின் D சேர்த்து விற்க தொடங்கினார்கள்.  விற்கப்படும் பால் அனைத்தும் 100 உலக அளவு குறியீடு வைட்டமின் D சேர்த்தே விற்கப்படுகிறது.

சில காலை உணவு தானியங்களிலும் வைட்டமின் D சேர்க்கப்படுகிறது.

காட் என்ற மீனின் கல்லீரலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய்  ஒரு மேசைக்கரண்டியில் கிட்டதட்ட 1300 IU இருக்கிறது. இது ஒரு நாளைக்கு தேவையான அளவைவிட 340% அதிகம்.

சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பது தோல் வைட்டமின் D தயாரிக்க உதவும். ஆனால் இது கால நிலை, பூமியில் இருக்கும் இடம் பொறுத்து மாறுபடும். அதேபோல  இயந்திரங்களில் இருந்து வரும் புகையும் மாசும் சூரிய ஒளியின் சக்தியை குறைப்பதால் வைட்டமின் D தயாரிப்பு குறையக்கூடும்.

சில சூரிய கதிர்களை மறைக்கும் திரவியங்கள் (SPF 8) போன்றவை சருமத்தின் பாதுகாப்புக்குத்தேவை என்றாலும் வாரத்தில் இரண்டு நாளேனும் சூரிய ஒளி உடலில் படுதல் நலம்.

பொதுவாகவே நல்ல சரிவிகித உணவு உண்ணாமல் இருப்போருக்கே வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது.

குளிர் பிரதேசங்களில் சூரிய ஒளி குறைவாக இருக்கும் இடத்தில் வசிப்போருக்கும், சிறுநீரகங்கள் வைட்டமின் D ஐ,  வைடமின் 1, 25 டிஹைடிராக்ஸி வைட்டமின் ஆ  க மாற்றமுடியாத போதும்,  சிறுகுடல் சரியாக வைட்டமின் Dஐ  உறிஞ்ச முடியாமற் போகும் போதும் வைட்டமின் D குறைபாடு ஏற்படுகிறது.

சிலருக்கு பால் அருந்தினால் ஒவ்வாமை ஏற்படும். லக்டோஸ் எனப்படும் சர்க்கரை மீது உள்ள ஒவ்வாமை  அல்லது செரிமானத்திறன் இல்லாதவர்கள், முழுமையான தாவர உணவு உண்பவர்கள் (vegan வகை, இவர்கள் பால், சீஸ் கூட சேர்த்துக்கொள்வதில்லை), ஆகியோருக்கும் வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படும்.

வைட்டமின் D பற்றாக்குறையால் ரிக்கெட்ஸ், ஆஸ்டியோமலசியா போன்ற எலும்புகளை தாக்கும் நோய் ஏற்படக்கூடும். 1930 இல் அமெரிக்காவில் பலருக்கு ரிக்கெட்ஸ் நோய் ஏற்பட்டதன் காரணமாகவே இங்கே பாலில் வைட்டமின் D சேர்த்து விற்க கட்டளை இட்டு அதன்படி பாலில் வைட்டமின் D கூடுதலாக சேர்த்து விற்கிறார்கள்.
நீண்ட காலத்திற்கு தாய்ப்பாலை மட்டுமே பருகி வரும் குழந்தைகள், பாதுகாப்பகங்களில் அதிக நேரம் செலவழித்து வெளியே சூரிய ஒளியில் விளையாட வாய்ப்பு கிட்டாத குழந்தைகள் மற்றும் சூரிய ஒளியை தடுத்து உடல் நிறத்தை காக்க உப்யோகிக்கும் திரவியங்கள் (sun screen lotions) உப யோகிக்கும் குழந்தைகள் இவர்களுக்கு வைட்டமின் D பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

1980 இல் கொண்டுவந்த சட்டத்தின் படி கடைகளில் கிடைக்கும் குழந்தைகளுக்கான பாலில் (infant formula)வைட்டமின் D சேர்க்க படுகிறது.

முதுமை அடையும் போது சிறுகுடல் வைட்டமின் D ஐ  நல்ல செயல் திறன் உள்ள வைட்டமினாக மாற்றுவதில்லை. எனவேதான்  வயதானவர்களின் 30 முதல் 50% உடல் எலும்பு முறிவுகளுக்கு வைட்டமின் D காரணமாகிறது.

மத காரணங்களுக்காக உடல் முழுதும்  மூடி மறைத்து ஆடை அணியும் பெண்கள், மற்றும் வீட்டினுள்ளேயே அதிக நேரம் தங்கி இருக்கும் பெண்கள், அலாஸ்கா போன்ற இடங்களில் வசிப்பவர்கள் இவர்கள் அனைவரும் வைட்டமின் D உணவை தவிர்த்து தனியாக  உட்கொள்ள வேண்டும்.

அல்பினிஸம் போன்ற சரும நோய் உள்ளவர்கள், இயல்பாகவே மெலனின் அதிகம் உடையவர்கள் வைட்டமின் D அவசியம் உட்கொள்ள வேண்டும்.

சிறுகுடலில் கொழுப்பை உரிஞ்சக்கூடிய செயல் சீர்கெடும்போது வைட்டமின் D உறிஞ்சப்படுவதும் தடையாகிறது. உதாரணமாக க்ரோன் நோய், சிலவகை கணைய சம்பந்தமான நோய்கள், சிறுகுடலில் ஏற்படும் புண் இ  வை யாவும் வைட்டமின் D உறிஞ்சப்படுவதை குறைக்கிறது.

சிஸ்டிக் ஃபைரோஸிஸ் எனப்படும் நோய் உண்டாக்கும் ஒருவித அடர்த்தியான திரவம்  கணையம்,  சிறுகுடலை அடைத்து விடுவதால், வைட்டமின் D உரிஞ்சுதல் தடைபடுகிறது.

வைட்டமின் D எப்படி சில வகை நோய்கள் வருவதை தடுக்கிறது என்பதையும், அதன் காரணங்களையும் வரும் வாரம் பார்க்கலாம்.

|
oooOooo
பத்மா அர்விந்த் அவர்களின் இதர படைப்புகள்.   உடல் நலம் பேணுவோம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |