பிப்ரவரி 17 2005
தராசு
பங்குச்சந்தை ஒரு பார்வை
மஜுலா சிங்கப்புரா
முத்தொள்ளாயிரம்
கவிதை
ஆன்மீகக் கதைகள்
வ..வ..வம்பு
நூல் மதிப்புரை
நையாண்டி
கட்டுரை
சமையல்
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  பங்குச்சந்தை ஒரு பார்வை : தொடரும் தள்ளாட்டம்...
  - சசிகுமார்
  | Printable version |
  "வெறுமனே சந்தையை கவனித்துக் கொண்டிருங்கள். பங்குகளை விற்கவோ, வாங்கவோ முயல வேண்டாம்."

  சென்ற வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தையில் தள்ளாட்டமே நிலவியது. மும்பை பங்குச்சந்தைக் குறியீடு இந்த வாரம் 50 புள்ளிகள் சரிவுற்றது. பட்ஜெட்டிற்கு முன்பு பங்குகளை பணமாக மாற்றி விடவே பல டிரேடர்கள் முனைந்துக் கொண்டிருக்கின்றனர். தற்பொழுதுள்ளச் சூழலில் எச்சரிக்கை உணர்வுடன் கூடிய வர்த்தகமே நடைபெறுகிறது. பட்ஜெட்டிற்கு பின்பு பங்குச்சந்தையில் மறுபடியும் வர்த்தகம் சூடு பிடிக்கக் கூடும். இந்த ஏற்ற இறக்கச் சூழ்நிலைகளைப் பற்றி  நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் அதிகம் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

  திங்களன்று, வரலாறு காணாத உயர்வை எட்டியக் குறியீடு பின் சரிந்தது. திங்களன்று காலை வர்த்தகம் தொடங்கிய முதலே சந்தையில் ஆரோக்கியமானச் சூழலே நிலவியது. பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவிக்கத் தொடங்கினர். குறிப்பாக மென்பொருள் பங்குகளுக்கு நல்ல உயர்வு இருந்தது. இன்போசிஸ், சத்யம் போன்ற பங்குகள் நல்ல உயர்வைப் பெற்றன.

  வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு மறுபடியும் சந்தைக்கு வரத் தொடங்கியது. சுமார் 250 கோடிக்கு இந் நிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டன (1229 கோடிக்கு பங்குகளை வாங்கினர், 980 கோடிக்கு பங்குகளை விற்றனர்). ஒரு கட்டத்தில் குறியீடு 80 புள்ளிகள் உயர்வடைந்து 6719 என்ற இது வரைக் காணாத உயர்வைப் பெற்றது. பின் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்க, குறியீடு சரிந்து, ஆனால் 45 புள்ளிகள் லாபத்துடன் வர்த்தகம் முடிவடைந்தது.

  செவ்வாயன்று 9 புள்ளிகளும், புதனன்று 62 புள்ளிகளும் குறியீடு சரிந்தது. புதனன்று காலை வர்த்தகம் தொடங்கியப் பொழுது 44 புள்ளிகள் உயர்ந்திருந்தச் சந்தை, கடைசி ஒரு மணி நேரத்தில் கடுமையாகச் சரிவுற்றது. ஒரு கட்டத்தில் 44 புள்ளிகள் உயர்வு, பின் 80 புள்ளிகள் சரிவு என்ற தள்ளாட்டத்துடன் சென்று இறுதியாக 62 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவுற்றது. வியாழனன்று மறுபடியும் மற்றொரு தள்ளாட்டம். ஒரு கட்டத்தில் சுமார் 70 புள்ளிகள் சரிந்திருந்தக் குறியீடு பின்  ஓரளவுக்கு உயர்ந்து 18 புள்ளிகள் மட்டும் சரிவடைந்தது. வெள்ளியன்றும் இதே தள்ளாட்டம் தான். குறியீடு 5 புள்ளிகள் சரிவுற்றது.

  இந்த வாரச் சந்தை நிலவரம்

  வர்த்தகம் தொடங்கிய நிலை

  • மும்பை பங்குச் சந்தைக் குறியீடு = 6,633.76
  • தேசியப் பங்குச் சந்தைக் குறியீடு = 2,082.05


  வர்த்தகம் முடிவுற்ற நிலை

  • மும்பை பங்குச் சந்தைக் குறியீடு = 6,584.32
  • தேசியப் பங்குச் சந்தைக் குறியீடு = 2,055.55


  சரிவு/உயர்வு நிலை

  • மும்பை பங்குச் சந்தைக் குறியீடு = - 49.44
  • தேசியப் பங்குச் சந்தைக் குறியீடு = - 26.5

  குறியீட்டுப் பங்குகளில் கடந்த வாரம் சரிவுற்றிருந்த பார்தி, இந்த வாரம் அதிக உயர்வைப் பெற்றிருந்தது. பார்தி பங்குகள் 10 ருபாய் - 4.6% உயர்வைப் பெற்றிருந்தன. இது தவிர பெல் (BHEL), TISCO, இன்போசிஸ், L&T போன்ற பங்குகள் 3% அதிகமான உயர்வைப் பெற்றன.

  கடந்த வாரம் நல்ல உயர்வைப் பெற்றிருந்த ஆட்டோமோபைல் பங்குகள் இந்த வாரம் சரிவுற்றன. மாருதி இந்த வாரம்  8% வீழ்ச்சி கண்டது. இது சுமார் 37 ரூபாய் வீழ்ச்சி. மாருதிப் பங்குகள் கடந்த வாரம் இதே அளவுக்கு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர பிற ஆட்டோமோபைல் பங்குகளான டாட்டா போட்டார்ஸ், மகேந்திரா & மகேந்திரா, பஜாஜ் போன்றவையும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியடைந்தன.

  இந்துஸ்தான் லீவர் மறுபடியும் தனது பயணத்தை கீழ்நோக்கி தொடர்ந்தது. 7% வீழ்ச்சியடைந்திருந்தது.

  குறியீடுகளின் இந்த வீழ்ச்சிப் பற்றிக் கவலையடையத் தேவையில்லை. சென்ற வாரம் பார்த்ததைப் போல பட்ஜெட்டை ஒட்டிய வாரங்களில் இந்த தள்ளாட்டம் இயல்பான ஒன்று தான். இது தவிர அடுத்த வாரம் வியாழனன்று F&O முடிவடைவதால் சந்தையின் தள்ளாட்டம் நீடிக்கக் கூடும். பங்குச்சந்தைக்கு புதியதாக வருபவர்கள் இந்தச் சூழ்நிலையை கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. முதலீட்டாளர்கள் பங்குகள் உயரும் பொழுதெல்லாம், அதை விற்று லாபமடைய  முனைவதும், அதனால் குறியீடு சரிவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு பட்ஜெட் பற்றிய அச்சம் என்று சொல்வதை விட அது குறித்த ஒரு எச்சரிக்கையுணர்வே முதலீட்டாளர்களை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது.

  தற்பொழுதுள்ள சூழலில் நம்முடைய முதலீட்டு உத்தி எப்படி அமைய வேண்டும் ?

  எதுவும் செய்யக்கூடாது. வெறுமனே சந்தையை கவனித்துக் கொண்டிருங்கள். பங்குகளை விற்கவோ, வாங்கவோ முயல வேண்டாம். பட்ஜெட்டிற்கு பிறகு முடிவெடுங்கள்.

  இந்த வாரம் பங்குச்சந்தையின் மற்றொரு முக்கிய நிகழ்வு ஜெட் ஏர்வேஸ் பங்குகளின் IPO.

  ஜெட் ஏர்வேஸ் சுமார் 1,350-1,600 கோடி ரூபாய்க்கு IPO வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ8,201-9,712 கோடி ரூபாயாக இருக்கும். 10 ரூபாய் பங்குகளின் குறைந்தப்பட்ச விலை ரூ950. அதிகபட்ச விலை ரூ1,125. இந்தப் பங்குகள் வெள்ளியன்று வெளியான சில மணி நேரங்களில் 73 மில்லியன் பங்குகளுக்கு விண்ணப்பம் குவிந்து விட்டது. ஆனால் இருக்கும் பங்குகளோ 17.3 மில்லியன் மட்டுமே.

  இந்தப் பங்குகளின் விலை அதிகமாக இருக்கிறது. பொதுவாக ஒரு நிறுவனத்தின் பங்குகளை ஆராயும் பொழுது அந்தத் துறையில் உள்ள பிற நிறுவனங்களை ஆராய வேண்டும். இவ்வாறு ஆசியாவில் உள்ள பிற நாடுகளைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் பங்குகளுடன் ஒப்பிடும் பொழுது இதன் விலை சற்று அதிகமாகவே இருக்கிறது. உதாரணமாக கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் போன்ற விமானங்களின் பங்குகளை விட ஜெட் ஏர்வேஸ் பங்குகளின் விலை சற்று அதிகமாகத் தான் இருக்கிறது.

  இந்தப் பங்குகளுக்கு ஏற்றமிருக்கிறதா ?

  இந்தியாவில் தற்போதையச் சூழலில் விமானப் போக்குவரத்து என்பது மிகக் குறைவுத் தான். ஆனால் இதற்கு நிச்சயம் நல்ல எதிர்காலமிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் வளரும் சூழலில், தொழில் வளர்ச்சியடையும் நிலையில் இத் துறைக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும். இது தவிர தற்பொழுது மைய அரசு இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கும் சேவை செய்ய வழி ஏற்படுத்தியுள்ளது. இதுவும் இத் துறைக்கு நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும். இத் துறையில் ஜெட் ஏர்வேசுக்கு போட்டியாளர்கள் தற்போதையச்
  சூழலில் குறைவு தான்.

  பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்படும் பொழுது இந்தப் பங்குகள் உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |