பிப்ரவரி 24 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
நையாண்டி
மஜுலா சிங்கப்புரா
திடுக் ரிபோர்ட்
அமெரிக்க மேட்டர்ஸ்
முத்தொள்ளாயிரம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
கட்டுரை
ஆன்மீகக் கதைகள்
சமையல்
கவிதை
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  திடுக் ரிபோர்ட் : நமது நிருபர் வொளவாலாரின் திடுக் ரிபோர்ட்
  - திருமலை ராஜன்
  | Printable version |

  கிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி, ஆதி பராசக்தி, அருள்தரும் மாதா, மாண்புமிகு, டாக்டர், புரட்சித்தலைவி, அன்னை அவர்களின் ஆட்சியிலே, கொலை, கொள்ளை, இன்ன பிற கொடுமைகள் இல்லாத சுபிட்சமான, அமைதியான நல்லாட்சி மலர்ந்திட மாண்புமிகு அம்மா ஒரு முக்கியமான நடவடிக்கையினை எடுத்து வருகின்றார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். மாண்புமிகு அண்ணன் புரட்சித்தலைவன் கிஷ் எப்படி கிதாமை ஒழித்தால் உலகத்தில் தீவீரவாதம் ஒழிந்து விடும் என்று கண்டுபிடித்தாரோ அதே வழியில் அம்மாவும், கீஞ்சி கிங்கர மடத்தை ஒழித்து விட்டால்,  நாட்டில் நிலவும் அத்தனை கொடுமைகளும் மறைந்து அமைதிப் பூங்காவாக மாறிவிடும் என்ற அரிய உண்மையைக் கண்டு பிடித்து, நாட்டு மக்கள் பயமின்றி வாழ ஒரு வழியைக் காட்டியுள்ளார். அம்மாவின் கட்டளையை சிரமேற்று நடத்திட ·ப்ரேம் குமார் (வழக்குகளை ·ப்ரேம் செய்வதில் வல்லவர்), சகதி வேலு (எதிரிகளின் மேல் அவதூறுகளை சகதி வாறி இறைப்பவர்) ஆகிய இரு தளபதிகளை, கீஞ்சி நோக்கிப் படையெடுத்து எதிரிகளை அழித்தொழித்து நாட்டில் அமைதியை நிலைநாட்டிடப் பணித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.  நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்ற அம்மா எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளை நமது சிறப்பு நிருபர் வொளவாலார்  வாசகர்களுக்குச் சுடச் சுட அறியத் தருகிறார்.
   
   
  நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் செய்தியாளரான டூம் ·ப்ரீமான் என்பவர் தனது கட்டுரை ஒன்றில் கீஞ்சிபுரம் பழமையும், பெருமையும் வாய்ந்த நகரம் என்று எழுதியுள்ளதாக, அந்த அமெரிக்க நாளேட்டைப் படித்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்த ·ப்ரேம் குமார், டூமுக்கும் கிங்கரராமன் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்துள்ளார். சகதி வேலு அதைத் தொடர்ந்து, நடிகை ஜூலீயாவும், டூமும் விடுதிகளில் கிளு கிளுப்பாக இருந்ததாக தமக்கு உளவுத் துறை தகவல் கிடைத்தாகவும் கூறியுள்ளார். இந்தத் தகவல் அவர் மீதுள்ள சந்தேகத்தை வலுவூட்டுவதாகவும் ரகசியமாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நியூயார்க் நகரம் பலத்தப் பரபரப்பிற்குள்ளாகியது. இதை கபால் என்பவர் நடத்தும் 'மன்ஹாட்டன் மாமா' என்ற பத்திரிகை, டவுண்ஹாலில் டண்டணக்கா என்ற தலைப்பில் மிகவும் கிளுகிளுப்பாக செய்திகளாக வெளியிட்டுள்ளன.  ரெயில்களும், பஸ்களும், கார்களும் வேகமாகச் சென்று பரபரப்பூட்டுவதாக பொய்ட்டர் செய்தி ஸ்தாபனம் கூறியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் அம்மாவின் உத்தரவின் பேரில் டூமுக்குச் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மூன் தொல்லைக் காட்சி டூம் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டதாகப் பத்திரிகை தர்மப் படி தலைப்புச் செய்தி வாசித்துள்ளது. பிரபல செய்தியாளர் டூம் ஒரு பத்திரிகையாளரே அல்லர், பத்திரிகைகளில் எழுதுபவர்கள் எல்லோரும் பத்திரிகையாளர்கள் அல்லர், இந்த உலகில் தான் ஒருவர் மட்டுமே உண்மையான பத்திரிகையாளர், ஆகவே டூமைக் கைது செய்து முட்டிக் முட்டி தட்டுவது, நியாயமே என்று பத்திரிகை சுதந்திரம் மற்றும் எழுத்துரிமைக்காக போராடுபவரும், சிந்தனையாளரும், உண்மையாளரும், 'தாம் தட புட' பத்திரிகையின் ஆசிரியரும், அதன் ஒரே வாசகரும், இன்ன பிறவுமான திரு.போணி பேட்டியளித்துள்ளார். கிளு கிளு படங்கள் தொல்லைக் காட்சி நிறுவனங்களுக்கு ரகசியமாக யாரோ கொணர்ந்து அளீத்துள்ளதாகவும், சிறுவர்கள் நலன் கருதி அதில் அதிக கிளுகிளுப்புப் படங்கள் மட்டுமே தங்கள் தொல்லைக் காட்சிகளில் மீண்டும், மீண்டும் காட்டப் படும் என்றும் மூன் டிவி செய்தி அறிவிப்பாளர் மூதேவி அறிவித்தார்.
   

  அமெரிக்க அதிபர் கிஷ் தனது பூனை ஒன்றுக்கு ஏற்கனவே இந்தியா என்று பெயர் வைத்து இந்தியாவை அவமானப் படுத்தியது மக்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். நேற்று நள்ளிரவு கிடைத்த தகவலின் படி அந்தப் பூனை ஒரு ஆண் மகவை ஈன்றுள்ளது. அந்தப் பூனைக்கு இப்பொழுது அதிபர் கிஷ், கீஞ்சி எனப் பெயரிட்டுள்ளதாக ஏஜென்ஸியல்லாத செய்திகள் கூறுகின்றன. இந்த செய்தி கசிந்த பிறகு கீஞ்சிபுரத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. ரோட்டில் நான்கு சொறி நாய்கள், ஐந்து பன்றிகள், இரண்டு கழுதைகள் அங்கும் இங்கும் ஓடியது பரபரப்பை மேலும் அதிகப் படுத்தியது. தகவல் அறிந்த ·ப்ரேமும், சகதியும் அவசரமாக கோயஸ் தோட்டத்திற்கு சென்று, இந்த பெயரீட்டுக்கும் கிங்கரராமன் கொலைக்கும் உள்ள தொடர்பினை அம்மாவுக்கு நேரில் சென்று விளக்கினார்கள். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அம்மா, மிகுந்த மன வேதனையுடன், கிஷ்ஷ¤க்கு ஒரு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அமெரிக்க மக்கள் மீது தனக்கு மிகவும் அன்பிருந்தாலும், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டியதின் அவசியத்தை உணர்த்தினார். இந்தச் சம்மனை அடுத்து வரும் கைதினை எப்படி சமாளிப்பது, எப்படி முன் ஜாமீன் வாங்குவது என்று அமெரிக்க அமைச்சரவை அவசர அலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. இதன் காரணமாக இந்திய வக்கீல்களுக்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளதாக வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே வேலூர் சிறையில் சாக்கடையின் அருகே இருக்கும் ஒரு அறையில் சாக்கடைகள் அகற்றப் பட்டு, சாணி தெளிவிக்கப் பட்டு சுத்தம் செய்யப் பட்டு வருவது, கிஷ்ஷ¤க்காக இருக்கலாம் என நமது ஜீனியர் நிருபர் வொளவால் குஞ்சு தெரிவித்தார்.
   

  ஏற்கனவே கண்ணீர் விட்டோ வளர்த்தோம் என்ற கட்டுரைத் தொடரை எழுதிய சதிக் குற்றதிற்காக ஆடிட்டர் கருமூர்த்தியைப் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அந்தக் கட்டுரையின் தலைப்பை எழுதியவர் பாரதி என்ற ஒரு கவிஞர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளி வந்துள்ளது. யார் அந்தக் கவிஞர், அவருக்கும் கிங்கரராமன் கொலைக்கும் என்னத் தொடர்பு என்பதை கண்டுபிடிக்கும் பொருட்டு பல துப்பறியும் படைகள் அவரது சொந்த ஊரான எட்டய புரம் மற்றும் பாண்டிச்சேரி, கடையம் போன்ற ஊர்களுக்குப் பறந்துள்ளனர். அதனால் அந்த நகரங்களில் கடும் பரபரப்பேற்பட்டுள்ளது. பத்திரிகைகளுக்கு அளிக்கப் பட்ட உளவுத்துறையின் ரகசிய அறிக்கைகளின்படி அவர் ஏற்கனவே இறந்து விட்டத் தகவல் வெளியாகியுள்ளது, வழக்கை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் அவர் இறந்து விட்டாலும் பரவாயில்லை அவரது வாரிசுகளை குண்டர் சட்டத்தில் வைத்து உண்மை வெளிக் கொணரப்படும் என்று இன்று வராதராஜ கோவில் சன்னதியில் வைத்து ·ப்ரேம் குமார் தெரிவித்தார்.
   
   
  இதற்கிடையே கிங்கரராமன் கொலைவழக்கில் கைதான அனைவரும் அடுத்தடுத்து ஜாமீனீல் வெளியிடப் பட்டு வரும் நேரத்தில், மனிதர்களைப் பிடித்தால்தானே ஜாமீனீல் வெளிவருகின்றனர் என்று கூறி, பல்வேறு விலங்குகளைப் பிடித்து உள்ளே வைக்கப் படுவதாக ஆடு மாடு நலச் சங்கத் தலைவர் தெரிவித்தார். கிங்கரராமன் கொலைச் சதித்திட்டம் தீட்டப் படும் சமயத்தில், கிங்கர மடத்தின் மதில் சுவரில் உட்கார்ந்திருந்த நான்கு காகங்கள், அந்த நேரத்தில் பாலைத் திருடிக் குடிக்கச் சென்ற பூனை ஒன்று, மடத்தின் சுவற்றின் அருகே உள்ள கம்பத்தில் ஒண்ணுக்குப் போன நாய், மடத்துச் சுவரி ஒட்டியுள்ள போஸ்டரைச் சாப்பிடச் சென்ற ஆடுகள், என ஒரு பத்து மிருகங்கள், பறவைகளை, சதியை நேரில் கண்ட கேட்ட முக்கிய சாட்சிகளாக போலீசார் நேற்று சேர்த்துள்ளனர். வாயில்லாத ஜீவராசிகளுக்கு ஆதரவாக யாரும் வந்து ஜாமீனீல் எடுக்க முயல மாட்டார்கள் என்ற ·ப்ரேம் குமாரின் சந்தோஷத்தில், பிரியாணிகள் வதைத் தடுப்புச் சங்கத் தலைவரான திருமதி கேனகா காந்தி மண் அள்ளிப் போட்டு விட்டார். கொலைக்குச் சம்பந்தமில்லாத மிருகங்களை, சித்ரவதைப் படுத்தி பொய் சாட்சி கூற வற்புறுத்துவதாகக் கூறி, அனைத்து மிருகங்களையும், பறவைகளையும், கொணருமாறு ஒரு ஆடுகொணர்வு மனுவை உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதனை அறிந்த நாய்கள், சொறிந்து கொண்டும், காக்கைகள் கரைந்து கொண்டும், பன்றிகள் உறுமிக் கொண்டும், தத்தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டன. இது வழக்குக்கு மிகுந்த பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாக, வெறிநாய் வட்டாரங்கள் குரைத்தன. இதையெல்லாம் அவதானித்த பத்திரிகையாளர் திரு.போ, ஆதாரம் இல்லாமல் அம்மா ஆடு மாடுகளை கைது செய்திருக்க மாட்டார் என்று தான் நம்புவதாகவும் இருந்தாலும், ஆடு மாடுகளை வெளி மாநில போலீசார் விசாரிப்பதே நியாயமாக இருக்கும் என்றும் கருத்துத் தெரிவித்தார். அப்படிக் கருத்து தெரிவித்தற்காக மலைப் பங்களாவுக்கு வந்து விளக்கம் தருமாறு அவருக்கும் சம்மன் கொடுக்கப் பட்டது.
   
   
  அமெரிக்க அதிபர் கிஷ்ஷ¤க்கு ஒரு சம்மனும், பத்திரிகையாளர் டூமுக்கு ஒரு சம்மனும், அவர் எழுதியதைப் படித்த வாசகர்கள் அனைவருக்கும் சம்மனும், கொடுப்பதற்காக கோடிக்கணக்கான சம்மன்களைத் தயார் செய்து கொண்டு ·ப்ரேம் குமாரும், சகதி வேலுவும் அமெரிக்கா கிளம்பியதாகவும், ஆனால் அவர்களின் பெரிய தொந்திகளுடன் விமானத்துக்குள் செல்லக்கூடிய பெரிய கதவுகள் இல்லாததால் அவர்களது அமெரிக்கப் பயணம் தடைப் பட்டுள்ளதாக மூன் செய்திகள் முணங்கின. அவர்களின் தொந்திகளை உள்ளே விடும் அளவிற்கு பெரிய  கதவுகள் உடைய புதிய உலகின் மிகப் பெரிய ஏர் பஸ் விமானங்களுக்கு அம்மா, உடனடி டெலிவரிக்காக ஆர்டர் போட்டுள்ளதாகவும், மேலும் இனி வெண்ணை கீணம்பாக்கத்தில் இறங்கும் அத்துனை விமானங்களும் தங்கள் கதவுகளை போலீசாரின் தொந்திகளை அனுமதிக்கும் அளவிற்குப் பெரிதாக மாற்றுமாறு உத்தரவிட்டிருப்பதாக விமான நிலையச் செய்திகள் கூறுகின்றன. நீதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு கொடுக்காத விமானங்கள் முன்னால், அகில இந்திய அநியாய திருட்டு முட்டாள் கழகத்தின் மகளிர் அணியினர், தங்கள் ஆடைகளை அவிந்த்துப் போட்டு கண்ணியமான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் விமான நிலையப் பகுதிகளில் கடும் பரபரப்பும், கிளு கிளுப்பும் ஏற்பட்டன.
   

  நேற்று கீஞ்சிபுரத்து மடத்தின் திசையைப் பார்த்து, கன்யாக்குமரியில் நின்று கொண்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இத்துடன் இந்தச் சதி வழக்கில் பத்து கோடி மனிதர்களும், ஐந்து கோடி பிற ஜீவராசிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிங்கரராமன் கொலைச் சதியில் சம்பந்தமுள்ளதாகக் கூறி நாட்டில் உள்ள் அனேக மக்களும், பிற ஜீவராசிகளும் கைது செய்யப் பட்டு வருவதால், அவர்களை அடைத்து வைக்கப் போதுமான சிறைச்சாலைகள் இல்லாமல் கடுமையான சிறைத் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே க்யூபாப்வில் அமெரிக்க ஆளுகையில் உள்ள குவாண்டானமாத் தீவை குத்தகைக்கு எடுக்கலாம என அரசாங்கம் தீவீரமாகப் பரிசீலித்து வருகிறதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி குத்தகைக்குக் கொடுத்தால் அதிபர் கிஷ்ஷின் முன் ஜாமீன் விசாரணைக்கு வரும் பொழுது அரசு தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப் படமாட்டாது என்றும், அவர் ஆப்பிரிக்காவில் தங்கி, ஆழ்வார்பேட்டைக் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட அனுமதிக்கப் படும் என்றும் பேரம் நடத்தி வருவதாகப் டுபாக்கூர் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
   
   
  அம்மாவின் சாதனைகளையும், அவர் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளும் இரும்புக்கர நடவடிக்கைகளையும் கண்ட ஹிட்லர், ஸ்டாலின், முசோலினி, இந்திரா போன்றோர் பெருமகிழ்ச்சி அடைந்ததாகவும் தங்களது உண்மையான வாரிசு பூலோகத்தில் உருவாகி விட்டதாகவும் கூறி அந்த வாரிசின் வருகையினை பெரும் விழா எடுத்துக் கொண்டாடினார்கள் என்று 'நரகக் குரல்' மாலைப் பத்திரிகை செய்தி வெளியுட்டுள்ளது.
   

  கடைசியாக வெளி வந்த தகவலின் படி, குற்றவாளிகளை வைப்பதற்க்கு உலகத்தில் இனிமேலும் சிறைகள் இல்லாததால் குற்றம் சாட்டப் படாத மக்கள் அனைவரும் சிறைகளிலும், குற்றம் சாட்டப் பட்டவர்கள் அனைவரும் வெளியேயும் இருக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவு அளித்தது. அதன் படி, அம்மாவும் அவரது கோஷ்டியினரும், கேலூர், கீளை, வெண்ணை சிறைகளில் வைக்கப் பட்டனர் என்று நீதியல்லாதத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |