Tamiloviam
பிப்ரவரி 28 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அமெரிக்க மேட்டர்ஸ் : ஜனநாயகக் கட்சி - ஹில்லாரி வேண்டும்
- பாஸ்டன் பாலாஜி
  Printable version | URL |
ஏன்? உடனடியாகத் தோன்றிய எண்ணங்கள்:
  1. உருப்படியாகப் பேசுகிறார். வெற்று சவடால், புறக் கவர்ச்சி, பிரச்சார பூச்சு இல்லாமல், ஜாலமாக Hillary Clintonவாய்ப்பந்தலிடாமல் புள்ளிவிவரங்களுடன் 'என்ன செய்யப் போகிறேன்?' என்பதை பிட்டு வைக்கிறார் என்பதற்காக...
  2. அனுபவம். சபையறிந்து சமயோசிதமாக விவாதம் நடத்துதல், செனேட்டராக, முன்னாள் ஆளுநர் & ஜனாதிபதி க்ளின்டனின் மனைவியாக, பெண்களின் உள்ளக்கிடக்கைகளை அனுபவித்தவராக இருக்கிறார் என்பதற்காக...
  3. ஒபாமா என்பது மயிற்பீலிகளால் எழுப்பப்படும் மாளிகை. அன்றைய மோனிகா லூயின்ஸ்கி முதல் இன்றைய அயோவா சறுக்கல் போன்ற பல சம்பவங்களில் நெஞ்சுரத்துடன் எதிர்க்கட்சி தாக்குதல்களையும் அவதூறுகளையும் திறனாகத் தாங்கி, மக்களை தன் பக்கம் வசமாக்கக் கூடியவர் ஹில்லரி க்ளின்டன் என்பதற்காக...
  4. ஆளுமை. அழ வேண்டிய நேரத்தில் சிறிதாக நீர்த்துளி இறைத்து, புருஷனை கொம்பு சீவ வேண்டிய நேரத்தில் ஏவி, சொந்தப் பணத்தை கொடுக்க வேண்டிய நேரத்தில் தாரை வார்த்து, தலைமைப் பண்புகள் அனைத்தும் இயல்பாக வாய்க்கப்பெற்றவர் என்பதற்காக...
  5. வயது. ஒபாமாவிற்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கக்கூடும். மீண்டும் ப்ரைமரி பந்தயத்தில் தம் கட்டலாம். இன்னொரு பெண் வேட்பாளர் கிடைக்கும் அறிகுறி எதுவும் இல்லாத இந்த சூழலில் 61 வயது நிறைந்த ஹில்லரிக்கு தூஸ்ரா வராமல் போகலாம் என்பதற்காக...
  6. அரசியல்வாதி. பொதுஜனத்துடன் இணைந்து பழகி நெஞ்சில் நிறுத்தி நெருங்க வைப்பது இயல்பாக எழும் சமூக ஆர்வத்தின் பங்கு என்றால், வெல்லவேண்டிய நேரத்தில் வெற்றிக்கான உபாயங்களை ட்ரம்ப் சீட்டாய் இறக்கி தேர்ந்த அரசியல் செய்யத் தெரிந்தவர் என்பதற்காக...
  7. ஆண்கள்தான் அலைபாயக் கூடியவர்கள்; பெண்கள் வாக்கு சிந்தாமல், சிதறாமல் வந்து சேரும். ஒபாமாவை துணை ஜனாதிபதிக்கு சேர்த்துக் கொள்ளாவிட்டால் கூட எப்படியும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், குடியரசு கட்சி பக்கம் சுண்டுவிரல் கூட சாய்க்க மாட்டார்கள் என்பதற்காக...
  8. பண்பட்டவர். செனேட்டர் தேர்தலில் நின்றபோது, 'இறுக்கமாக இருக்கிறார்' என்னும் குற்றச்சாட்டு எழுந்தவுடன் அச்சங்களை உதறி வாக்காளர்களோடு இயைபாக பழகியவர்; க்ளின்டன் ஆட்சியில் நிறைவேற்ற முடியாத, ஆனால் காலப்போக்கில் அதைவிட மேம்பட்ட உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களை முன்வைப்பவர்; இல்லத்தரசியலில் இருந்து இரும்புக் கோட்டை டி.சி. வரை கண்டுணர்ந்து சாதாரணர்களின் அன்றாட வாழ்க்கையை அனுபவித்தவர் என்பதற்காக...
  9. முன்னணி வேட்பாளர். பில் ரிச்சர்ட்சன் போன்ற அடக்கம் இருந்தால் மட்டும் போதாது; சகா ஜோசெப் பிடன் போன்ற அயல் அனுபவம் இருந்தால் மட்டும் பத்தாது. க்ளின்டன் என்னும் The Distinguished Gentleman போன்ற புகழ்பெற்ற பெயர் பெற்று வாஷிங்டனில் மாற்றத்தைக் கொணரக் கூடியவர் என்பதற்காக...
ஹில்லரி க்ளின்டன் வேண்டும். தொடர்புடைய இடுகை: ஒபாமா வெல்லட்டும் - வெங்கட்
oooOooo
                         
 
பாஸ்டன் பாலாஜி அவர்களின் இதர படைப்புகள்.   அமெரிக்க மேட்டர்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |