Tamiloviam
பிப்ரவரி 28 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
இது ஆம்பளைங்க சமாச்சாரம் : சிக்னல் தேவதை
- குகன் [tmguhan@yahoo.co.in]
  Printable version | URL |

நில நிற மேகம் வாகனத்தில் என்னை கடந்து சென்றதை பார்த்தேன். ஆண்களை விட பெண்கள் வேகமான வாகனங்கள் ஓட்டுவார்கள் என்று உன்னை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். உன் வலையல்களை கூட நீ இப்படித்தான் வளைப்பாயா என்று கேட்கும் அளவிற்கு உன் வாகனத்தை அப்படி வளைத்து செல்கிறாய். எனக்கு பழைய வண்டி வாங்கி தந்த தந்தையை திட்டிக் கொண்டு இருந்தேன். என்னால் உன்னை முந்தி உன் முகம் பார்க்க முடியவில்லை என்பதற்காக....

பெண்களை தொடர்வது இழுக்கு என்று சொன்னவன் நான்.... உன்னை தொடர்வதில் தவறில்லை... காரணம் நீ பெண்ணல்ல தேவதை. பலர் இங்கு காமத்திற்காகவே பெண்ணை பின் தொடர்ந்து செல்கிறார்கள். நான் தேவதை உன் தரிசனம் கிடைப்பதற்காக பின் தொடர்கின்றேன். உனக்காவே SCOOTY  நிறுவனம் வடிவம் ஆமைத்தார்களோ என்ற சந்தேகம். அந்த வாகனம் உனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அதன் வேகமும் அதிகமாகவே இருந்தது. நான் எங்கு செல்ல வேண்டும் என்ற இடத்தை கூட மறந்து விட்டேன். என் பின்னால் வா என்று உன் SCOOTY சொல்வது போல் உணர்வு. நான் நீ போகும் இடத்தை எல்லாம் தொடர்ந்தேன். ஆனால், நீண்ட நேரம்...... உன் பின் அழகை மட்டும் ரசிப்பது என்ற எண்ணம்.  உன் முகத்தை பார்க்க முடியாதா எனற் ஏக்கத்துடன் வேகமாக உன்னை தொடர்ந்தேன்.

நல்ல வேலை நம் ஊரில் ஒவ்வொரு சாலையிலும் நான்கு சிக்னல்கள் இருந்தன. பல முறை அவசரத்தில் செல்லும் போது இந்த சிக்னல்களை திட்டியிருப்பேன். ஆனால், இன்று தான் இந்த சிக்னல் நல்ல வேலை செய்ய தொடங்கியது. சிக்னலுக்காக நீ வண்டியை நிருத்த நானும் உன் அருகில் வண்டியை நிருத்தி பார்த்தேன்.... உன் முகத்தை. உன் அழகை என்ன வென்று சொல்வது. உன்னை வர்ணிக்க உயிருடன் இருக்கும் கவிஞர்கள் போதாது. இறந்த கவிஞர்களும் போதாது. இன்னும் கடவுள் பல கவிஞர்களை படைக்க வேண்டும்.....உன் அழகை பற்றி எழுதுவதற்காக....

என் மனதில் ஒரு குரல்.... அட மடையா... கவிஞர்களை உருவாக்கத் தான் கடவுள் இவளை படைத்தான்... உனக்கு புரியவில்லையா என்றது. அவளை பார்த்த சில நோடியில் நான் கூட கவிஞனாகிவிட்டேன் என்று அப்பொது தான் நானும் உணர்ந்தேன்.

நம் அரசாங்கம் ஒவ்வொரு சாலையிலும் சிக்னல் வைத்து இருக்கிறார்களே ..... பின்பு எதற்கு உன் நெற்றியிலும் இத்தனை சிக்னல். சற்று உற்று பாருடா என்று என் மனது சொன்னது.... அது சிக்னல் அல்ல அவள் நெற்றியில் இருக்கும் குங்குமம், சந்தனம், விபூதி.... என்று பார்த்தேன்.  சிக்னலின் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் பிறந்தது அவளின் நெற்றியை பார்த்து  தான் வந்தது போலும் என்று எனக்கு தோன்றியது.

அவள் அழகை ரசிக்கும் வேளையில்..... எதிரே விழுந்த பச்சை நிற சிக்னலை கவனிக்க மறந்தேன். பச்சை நிறம் விழுந்தவுடன் அவள் மின்னலாக பறந்தால்..... நானும் என்னால் முடிந்த வேகத்தில் பின் தொடர்ந்தேன். என்னை விட மிக தொலைவிலே சென்று விட்டாய். எப்படியாவது அவளை பிடித்தவிட வேண்டும் என்று என் வண்டிக் கூட வேகமாக ஓட தொடங்கியது. அடுத்த சிக்னல் வந்தது. அதில் பிடித்து விடலாம் என்ற கனவுடன் இருந்தேன். பாவி , சிக்னல் அவள் கடந்த பிறகு சிவப்பு விழுந்தது. மேலும் அவளை பின் தொடர முடியாமல் போனது. சற்று முன் தான் சிக்னலை பாராட்டினேன். அவள் நெற்றியில் இருக்கும் ஆன்மிக சின்னத்தை கூட சிக்னலுக்கு உவமையாக்கினேன். ஆனால், அந்த நன்றி மறந்த சிக்னல் என்னை ஏமாற்றி விட்டது. ஏமாற்றத்துடன் வந்த வழியே சென்றேன். மீண்டும் வழிக்காட்ட அந்த தேவதையில்லை. ஆனால், அவள் நெற்றியின் நினைவாக ஒவ்வொரு சாலையிலும் சிக்னல் இருக்கிறது.

oooOooo
                         
 
குகன் அவர்களின் இதர படைப்புகள்.   இது ஆம்பளைங்க சமாச்சாரம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |