Tamiloviam
மார்ச் 01 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
World Cup 2007 : முதல் சுற்றில் இந்தியாவின் வாய்ப்பு
- மணிகண்டன் அழகப்பன் [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

இந்தியா, இலங்கை, பெர்முடா மற்றும் பங்களாதேஷ் அணிகள் க்ரூப் Bல இருக்கு. முதல் சுற்றுல இந்த நாலு அணிகளும் தங்களுக்குள்ள விளையாடும். முதல் இரண்டு இடத்தை பிடிக்கிற அணிகள் அடுத்த சுற்றான Super 8க்கு தகுதிபெறும். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்.

இந்தியாவின் முதல் சுற்று போட்டிகளின் விவரம்

மார்ச் 17 - India Vs Bangladesh
மார்ச் 19 - India Vs Bermuda
மார்ச் 23 - India Vs Srilanka

எல்லா க்ரூப்புமே ரெண்டு பலமான அணி, ரெண்டு சற்றே அனுபவம் குறைந்த அணின்னு பிரிக்கப்பட்டிருக்கு. நம்ம க்ரூப்புல இந்தியாவும் இலங்கையும் பலம் வாய்ந்த அணிகள். பங்களாதேஷ் சமீபகாலமா நெறைய போட்டிகள்ல ஆடினாலும் சற்று பலவீனமான அணிதான். இருந்தாலும் இவங்களை அப்படி ஒரேயடியா ஒதுக்கிடவும் முடியாது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கைன்னு பலம் வாய்ந்த அணிகளை இவங்க ஜெயிச்சும் இருக்காங்க.

பெர்முடா இந்த உலகக்கோப்பைக்கு புதுவரவு. இவங்களை பத்தி அவ்வளவா ஒன்னும் தெரியாது. புதுவரவு தானேன்னு இவங்களையும் ஒதுக்க முடியாது. 1983 உலகக்கோப்பைல இதேமதிரி புதுவரவான ஜிம்பாப்வே முதல் போட்டிலயே ஆஸ்திரேலியாவை தோக்கடிச்சாங்க. இந்தியாவுக்கும் தண்ணி காட்டுனதை மறக்கமுடியாது. கபில்தேவ் 175 அடிச்சிருக்காட்டி நாமளும் தோத்திருப்போம். சமீபத்தில திராவிட் பேட்டில சொன்ன மாதிரி எந்த ஒரு அணியையும் சுலபமா எடைபோடக் கூடாது. கிரிக்கெட்ல என்னைக்கு எது நடக்கும்னு தெரியாது. 1996 உலகக்கோப்பைல கென்யா மேற்கிந்தியத்தீவுகளை 93க்கு சுருட்டினாங்க, 2003 உலகக்கோப்பைல அரைஇறுதி வரைக்கும் வந்தாங்க.

அதனால எந்த ஒரு அணியையும் சுலபமா எடைபோடக்கூடாது. இன்னோரு முக்கியமான் விஷயம், இந்த உலகக்கோப்பைல புது விதிகளின்படி முதல் சுற்றுல தகுதி பெறும் மற்ற அணிக்கு எதிரா எடுக்கற புள்ளிகள் இரண்டாவது சுற்றுக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சூப்பர் 8ல முதல் நாலு அணிகள் தான் அரைஇறுதிக்கு போகமுடியும். அதனால் முதல்சுற்றுல எல்லா போட்டிலயும் ஜெயிக்கறது ரொம்ப முக்கியம். ஒருபோட்டில தோற்கறதால் இழக்கற 2 புள்ளிகள் கோப்பைக் கனவையே கலைக்க வாய்ப்பிருக்கு. வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் 2 புள்ளிகளும், டை அல்லது கைவிடப்படும் போட்டிகளுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படும். முதல் சுற்றின் இறுதியில் இரு அணிகள் சமமான் புள்ளிகள் பெற்றிருந்தால் கீழ்கண்ட வரிசையில் தகுதி பெறும் அணி தேர்ந்தெடுக்கப்படும்

1. அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணி

2. அதிக னெட் ரன்ரேட் உள்ள அணி

3. அதிகமான விக்கெட் சராசரி (எடுத்த விக்கெட்கள்/வீசிய பந்துகள்) உள்ள அணி

4. அவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்ற அணி

5. இவை எல்லாவற்றிலும் சமமாக இருப்பின் 'லாட்' முறை

அதேமாதிரி புதுவிதிகளின்படி இரண்டாம் சுற்றுக்கு போகும் அணிகளின் எண்கள் ஐசிசியின் தரவரிசைப்படியே தீர்மானிக்கப்படும். அதாவது இந்தியா முதல் சுற்றுல எல்லா போட்டிலயும் ஜெயிச்சு புள்ளிகள் பட்டியல்ல முதல் இடத்தை பிடிச்சாலும், சூப்பர் 8 சுற்றுக்கு B2 ஆகவே செல்லமுடியும். ஏன்னா இலங்கை தரவரிசைல நம்மள விட முன்ன இருக்காங்க. சூப்பர் 8ல எப்படியிருந்தாலும் மத்த 6 அணிகலோடயும் விளையாடனும்னனலும், இந்த சிஸ்டத்தால போட்டிகளின் நாளும் இடமும் மாறும். இதுவும் ஒரு போட்டியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்கறதால் கவனிக்கனும். இப்போதைய தரவரிசைப்படி இலங்கை B1, இந்தியா B2. இதில் ஏதவது ஒருநாடு தகுதி பெறலைன்னா, தகுதிபெறும் நாடு அந்த இடத்தை எடுத்துக்கும். உதாரணமா இந்தியாவும், பங்களாதேஷும் சூப்பர் 8க்கு தகுதி பெற்றால், பங்களதேஷ் B1 எனவும் இந்தியா B2 எனவும் கருதப்படும். இலங்கையும் பங்களதெஷும் தகுதி பெற்றால் இலங்க B1 எனவும் பங்களாதேஷ் B2 எனவும் கருதப்படும்.

Trinidad Stadiumஅடுத்ததா இந்தியா முதல்சுற்று போட்டிகளை ஆடப்போற மைதானம் பற்றி பார்ப்போம். முதல் சுற்றுல ஒவ்வொரு க்ரூப்பும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தீவில் மட்டுமே ஆடுகின்றன. அதன்படி இந்தியா தனது அனைத்து முதல் சுர்று ஆட்டங்களையும் Trinidad & Tobago தீவில் உள்ள Port of Spain'ன் Queen'sPark Oval மைதானத்தில் விளையாட உள்ளது.

இது மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள பழமையான மைதானமாகும். அதிக டெஸ்ட் போட்டிகளை நடத்தியுள்ள பெருமையும் உடையது. 25,000 மக்கள் அமர்ந்து பார்க்கும் வசதியுடைய இம்மைதானம் இயற்கை அழகு கொஞ்சும் அழகான மைதானமாக கருதப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் ராசியான மைதானம் இது. இதுவரை இங்கு 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்தியா 3 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பெற்றுள்ளது. 1976ல் இங்கு நடந்த டெஸ்ட் போடியின் இறுதி நாளில் இந்தியா 406 ரன்கள் அடித்து வென்று சாதனை படைத்தது.

ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரையில் இந்தியா இங்கு 8 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது வருத்தமான விஷயம். இங்கு முதலாவதாக விளையாடி இந்தியா அடித்த அதிகபட்ச ஸ்கோர் 217 மட்டிமே என்பது அதைவிடவும் வருத்தமான விஷயம் இரண்டாவதாக விளையாடி இந்தியா அடித்த அதிகபட்ச ஸ்கோர் 236. மொத்தமாக இங்கு நடந்துள்ள 50 போட்டிகளில் 10 வீரர்கள் சதமடித்துள்ளனர். இதில் இந்தியர் யாரும் இல்லை. 16 பவுலர்கள் 4 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர்.
இதில் நான்கு பேர் சுழல்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

45.7% முதலில் ஆடியவர்கள் வெற்றி பெற்றுள்ளனர், 54.3% இரண்டாவதாக் ஆடிய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஓவருக்கான சராசரி ரன்விகிதம் 4.69. ஒரு விக்கெட்டுக்கான சராசரி ரன் 29.44. பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகள் ஒருமுறையும், இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகள் ஒருமுறையும் ஆக இரண்டு முறை மட்டுமே 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள மைதானங்களிலேயே சுழற்பந்துக்கு அதிகம் உதவக்கூடிய மைதானமாக் இது கருதப்படுகிறது. இலங்கையின் முரளிதரன் இந்திய அணியினருக்கு கடும் தலைவலியாக இருப்பார் என்றே தோன்றுகிறது. முதல் சுற்றில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

| |
oooOooo
                         
 
மணிகண்டன் அழகப்பன் அவர்களின் இதர படைப்புகள்.   World Cup 2007 பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |