பிரெட் மில்ட் அல்வா
தேவையானப்பொருட்கள்
மில்க் பிரெட் அல்லது ஸ்வீட் பிரெட் - 10துண்டுகள் பால் - 2 கப் தேங்காய் துருவல் - 1/2 கப் சர்க்கரை - 1/2 கப் ஏலப்பொடி - 1/2 டீ ஸ்பூன் முந்திரி, பாதாம் - தலா 6 நெய் - 2 டேபிள் ஸ்பூன் மில்க்மெய்ட் - 1 டேபிள் ஸ்பூன் காய்ந்த திராட்சை - 1 டேபிள் ஸ்பூன் வெணிலாஎஸென்ஸ் - 3 துளிகள்
செய்முறை
பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸிநில் 1நிமிடம் அரைத்து எடுத்துக்கொள்ளவும். தேங்காய் துருவல்,முந்திரி,பாதாம் பருப்புகளை (ஊறவைத்து தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும்.) மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடிகனமான கடாயில் பாலை சேர்த்து பாதியாக குறயும்வரை காய்ச்சவும். பிறகு இதில் சர்க்கரை,அரைத்தவிழுது சேர்த்து நன்றாக கிளறவும். சர்க்கரை கரைந்ததும் பிரெட்துகள்களையும் ஏலப்பொடியையும் சேர்த்து மேலும் 2நிமிடம் குறைந்த தீயில் வைத்து கிளறவும். கடசியாக மில்க்மெய்ட்,நெய் சேர்த்து 1நிமிடம் கிளறி இறக்கிவைத்து திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து கிண்ணங்களில் பரிமாற குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைபார்கள்.
|