Tamiloviam
மார்ச் 08 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : தீபாவளி
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

Jeyam Ravi, Bhavanaசென்னை ராயபுரம் பகுதியில் வசிக்கும் செல்வாக்கு மிக்க மனிதர் விஜயகுமார். இவரது மகன் ஜெயம் ரவி. அப்பகுதியில் வசிக்கும் ஹனிபாவின் வீட்டுக்கு விருந்தாளியாக வரும் பாவனாவிற்கும் ரவிக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்நிலையில் தான் பாவனாவின் மறதி நோய் பற்றி ரவிக்கு தெரியவருகிறது, விபத்து ஒன்றில் சிக்கி தன் பழைய நினைவுகளை மறந்துவிட்ட பாவனா தற்போது நடந்துவரும் நிகழ்வுகளை மறந்து பழைய நினைவுகளுக்கு எப்போது வேண்டுமானாலும் போய்விடுவார் என்று ரவியை எச்சரிக்கிறார் மனநோய் மருத்துவரான ரகுவரன். தனக்கு என்ன ஆனாலும் - தான் ரவியையே மறந்துவிட நேர்ந்தாலும் தன்னை ரவி கைவிட்டுவிடக்கூடதென்று ரவியிடம் கெஞ்சுகிறார் பாவனா. என்ன ஆனாலும் சரி - உன்னை கைவிடமாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறார் ரவி.

ரவி பாவனா காதலுக்கு ரவியின் பெற்றோர் பச்சை கொடி காட்ட எதிர்ப்பு பாவனாவின் அப்பா லாலிடமிருந்து வருகிறது. பெங்களூர் பகுதியின் பெரிய தாதாவான லால் தன் மகளின் காதலை எதிர்க்கிறார். ஒரு கட்டத்தில் ரவியை சாமர்த்தியமாக ராயபுரம் பகுதியை விட்டு வெளியே வரவழைத்து கொலை வெறித்தாக்குதல் நடத்துகிறார்கள் லாலின் ஆட்கள். எல்லாவற்றியும் மீறி பெங்களூருக்கு பாவனாவைச் சந்திக்க செல்லும் ரவியைப் பார்த்து "நீ யார்" என்று பாவனா கேட்கிறார். மேலும் அப்பா லால் பார்த்த மாப்பிள்ளை மணக்கத் தயாராகிறார் பாவனா.

தன்னுடன் பாவனா பழகிய நாட்களை அவருக்கு நினைவுபடுத்த ரவி எடுக்கும் எல்லா முயற்சிகளும் கானல் நீராகப் போகின்றன. பாவனா ரவியுடன் பழகிய நாட்கள் அவருக்கு நினைவில் வந்ததா? லாலின் வில்லத்தனத்தையும் மீறி ரவி பாவனாவுடன் இணைந்தாரா?  என்பதுதான் மீதிக்கதை.

ராயபுரம் முழுவதும் பில்லு பில்லு என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் கேரக்டர் ரவி. சுசி.. சுசி என்று பாவனாவிற்காக உருகுவது சூப்பர். பாடல் மற்றும் ஆக் ஷன் காட்சிகளில் அசத்து ரவியின் நடிப்பிலும் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

ரவிக்கு சற்றும் குறைந்து விடவில்லை பாவனா. வழக்கமாக இரண்டு காட்சிகளிலும் நாலு டூயட்டுகளிலும் தலையைக் காட்டிவிட்டு காணாமல் போகும் நாயகிகள் மத்தியில் முழுபடத்திலும் வந்து - நன்றாக நடிக்கவும் செய்கிறார் பாவனா. முதல் பாதியில் ராயபுரம் பகுதியில் ரவி மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து அடிக்கும் கும்மாளத்திலும் சரி, ரவியிடம் என்னைக் கைவிட்டுவிடாதே என்று கெஞ்சுவதிலும் சரி, பிற்பாதியில் ரவியை யார் என்றே தெரியாத நிலையில் தனக்காக இவன் ஏன் அடிவாங்கிச்சாகிறான் என்று குழம்பும்போது சரி நடிப்பில் அசத்துகிறார் பாவனா.

பாவனாவின் அப்பாவாக வரும் லாலின் வில்லத்தனத்தில் புதிதாக ஒன்றும் இல்லை. ரவியின் அப்பாவாக விஜயகுமார், பக்கத்து வீட்டுத்தம்பதியாக ஹனிபா மற்றும் தேவதர்ஷிணி மற்றும் மனநல மருத்துவராக வரும் ரகுவரன் போன்றவர்கள் கொஞ்ச நேரமே தோன்றினாலும் மனதில் நிற்கிறார்கள்.

யுவனின் இசையில் பாடல்கள் ஓக்கே. விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் செல்வகுமாரின் ஆர்ட் டைரக்ஷனும் படத்திற்கு பெரிய பலம். கணல் கண்ணனின் சண்டை பயிற்சி சூப்பர். ஒரு காலத்தில் தான் உயிருக்கு உயிராகக் காதலித்தவனையே மறந்துவிடும் காதலி - அந்தக் காதலியை மீண்டும் அடைய போராட்டம் நடத்தும் காதலன் என்ற மென்மையான கதையில் ஏகப்பட்ட சண்டைக்காட்சிகளையும் - உயிருக்குப் போராடும் நாயகன் மருத்துவமனையிலிருந்து அப்படியே வளியே வந்து பத்து பேருடன் மோதி ஜெயிப்பதும் வழக்கமாக பார்த்து சலித்த காட்சிகள் என்றாலும் ஒரு நல்ல அழகான காதல் கதையை வித்தியாசமாகக் கொடுத்ததற்காக இயக்குனர் எழில் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு பாராட்டுகள்.

| | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |