மார்ச் 09 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உடல் நலம் பேணுவோம் : வைட்டமின் C
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

Vitamin Cவைட்டமின் C நீரில் கரையக்கூடியதும் மிக அத்தியாவசியமான ஒரு வைட்டமின் ஆகும். எல்லா தாவர இனங்கள், மிருகங்கள்  வைட்டமின்C யை தானே தயாரித்துக்கொள்ளப்பட கூடியன. ஆனால் மனிதனுக்கு இந்த சக்தி இல்லை.

முதன் முதலாக 1928இல் வைட்டமின் C கண்டறியப்பட்டது, பிறகு 1932இல் ஸ்கர்வி என்ற நோய் வருவதற்கு வைட்டமின் C குறைபாடே காரணம் என்று அறியப்பட்டது. 1937 இல் திரு. ஆல்பர்ட்  ஜியாகி என்பருக்கு வைட்டமின் C யில் அவர் நடத்திய ஆராய்ச்சிகளுக்காக நோபல் பரிசு தரப்பட்டது.

வைட்டமின் C மிகவும் தீவிரம் குறைந்த அஸ்கார்பிக் அமிலம் என்று வேதியியல் பண்புகளில் இருந்து தெரிய வருகிறது. இதில் அதிக வினைவிளைவிக்க கூடிய பகுதி அஸ்கார்பேட் மூலக்கூறு ஆகும் இது சில சமயம் அமில தன்மையுடையதாக அல்லது காரத்தன்மை உடையதாக இருக்க கூடும்.

உடல் நோய்வாய்ப்படுவதை தவிர்க்க பலவகை இயற்கை உனவுகளை தேடி உண்பது ஆதிகாலம் தொட்டே நடந்து வருகிறது. இப்போதும் இயற்கை உணவுகள், காய்கறிகள் கனிகள் இவற்றிற்கு கிடைக்கும் முக்கியத்துவம் இதன் பலனை பொறுத்தே அதிகம் இருக்கிறது. அவ்வைக்கு  அதியமான் தந்த நெல்லிக்கனி கூட வைட்டமின் C நிறைந்ததே. ஒருமுறை ஸ்கர்வியால் இறந்து போகக்கூடிய நிலையில் இருந்தவர்களை காப்பாற்ற இயற்கை மரத்தின் பட்டையை அல்லது இலைகளை உபயோகித்திருக்கின்றனர். பின்னாளில் இவற்றில் வைட்டமின் C அதிகம் இருந்ததாக கண்டறியப்பட்டது.

அதேபோல தேநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதும் சளி போன்றவைக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.

வைட்டமின் C  உடலை இளமையாக வைத்துக்கொள்வது முதல், உடலின் எதிர்ப்பு சக்திவரை பலவற்றிற்கும் பயன் படுகிறது. இரும்பு சத்து, வைட்டமின் D போன்றவை உறிஞ்ச வைட்டமின் C வினையூக்கியாக தேவைப்படுகிறது.

வைட்டமின் C அதிகம் இருக்கும் சில தாவர வகை உணவுகள் : ரோஜா மலரின்  பூ உதிர்ந்த பின் இருக்கும் அடிப்பாகம் வைட்டமின் C அதிகம் உள்ள ஒரு பகுதி. இதில் இருந்தே பல சமயம் வைட்டமின் C பிரித்தெடுக்க ப்படுகிறது. சிட்ரிக் அமிலம் உள்ள ஆரஞ்சு, நெல்லிக்கனி, மற்றும் எலுமிச்சை பழம் இவற்றீலும், பிராக்கோலி, பால், ஸ்ட்ராபெரி, காலிபிளவர், சிவப்பு மிளகாய் (red bell pepper) , கீவி பழம், க்ரான்பெரி, களாப்பழம் போன்றவையில் அதிகம் இருக்கிறது. பழங்கள் காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் C அவை பறித்து எத்தனை காலம் ஆகிறது, மண்ணின் தன்மை, சேகரித்த விதம் பாதுகாத்து வைத்திருக்கும் விதம் ஆகியவற்றை பொறுத்து அமையும். வைட்டமின் C அதிகம் இருக்கும் சில விலங்கு உணவுவகைகள்: நிறைய மாடு, ஆடு  போன்ற மிருகங்கள் குளுக்கோஸ் என்ற சர்க்கரையிலிருந்து வைட்டமின் C யை சில என்ஸைம்கள் என்ற புரதங்களில் இருந்து உருவாக்கிகொள்ள முடியும். ஆனால் அதிகம் சமைப்பதன் மூலம் இவற்றில் உள்ள வைட்டமின் C சக்தியை இழக்கிறது.

வைட்டமின் C ஆல் என்ன பயன்? வைட்டமின் C வேதிவினைகளில் நீர் சேர்க்க வல்லது ஆகையால் எலும்புகள் சேர்க்கும் தசைகள் வலுவாக வைப்பதில் மிக முக்கிய பணியாற்றுகிறது. முன்பே சொன்னபடி இரும்பு சத்து உறிஞ்ச அவசியம் வினையூக்கியாக தேவைப்படுகிறது பற்கள், எலும்புகள், தோல், மூக்கில் உள்ள மியுக்கஸ் படலம் ஆகியவற்றில் உள்ள கொலாஜன் எனப்படும் பொருள் தயாரிக்க அவசியம் தேவைப்படுகிறது. டோபமின் எனப்படும் மூளையில் உணர்ச்சிகளை எடுத்து செல்லும் வேதிப்பொருளை தயாரிக்க வைட்டமின் C மிக அவசியம். அட்ரீனலின், நாரடிரீனலின் போன்ற உடலின் மிக முக்கிய ஹார்மோன்கல் சுரக்க வைட்டமின் C தேவை. மைட்டோகாண்டிரியா எனப்படும் உடலின் செல்களில் உள்ள சக்திமையத்தில் கார்னிடின் எனப்படும் அத்தியாவசியமான வேதிப்பொருள் சுரக்க வைட்டமின் C தேவை. உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அடிக்கடி சளி பிடித்துக்கொள்ளாமல் இருக்க வைட்டமின் C தேவைப்படுகிறது. வைட்டமின் C பற்றாக்குறை இருந்தால் ச்கர்வி என்ற நோய் ஏற்படும். இதனால் பற்கள் வலுவிழந்து போகும். இரத்தம் உறைவது நீண்ட நேரம் பிடிக்கும். உடலில் இரத்த நுண் குழாய்களில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும். மேலும் தசை வறண்டு போய் வெடிப்புகள் ஏற்படக்கூடும். இரத்த சோகை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

தினமும் எவ்வளவு வைட்டமின் C சேர்த்துக்கொள்ள வேண்டும் ?

நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள் தினமும் காய்கறிகளும் கனிகலும் உண்டுவந்தாலே போதுமானது. ஆனால் கரு உற்றிருக்கும் பெண்கலும் அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களும் கூடுதல் வைட்டமின் C சேர்த்துக்கொள்வது அவசியம். ஒரு நாளைக்கு 40 மில்லிகிராம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இயற்கையாக கிடைக்கும் ஆரஞ்சு, நெல்லிக்கனி இவற்றை சேர்த்துக்கொள்வது மாத்திரிகளை விழுங்குவதை விட இன்னும் நலம் பயக்கும்.

| |
oooOooo
பத்மா அர்விந்த் அவர்களின் இதர படைப்புகள்.   உடல் நலம் பேணுவோம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |