Tamiloviam
மார்ச் 15 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
World Cup 2007 : இந்தியா சூப்பர் 8
- மணிகண்டன் அழகப்பன் [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

இந்தியா மிக மோசமாக பங்களாதேஷிடம் தோற்றதும் அனைவரின் மனதிலும் எழுந்த கேள்வி இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லுமா அல்லது இன்று பாக்கிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலைமை தானா என்பதே. இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது என்றாலும் கடுமையாக முயற்சிக்க வேண்டும். இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்ல என்ன செய்யவேண்டும் அல்லது போட்டிகளின் முடிவு எவ்வாறு இருக்க வேண்டும் எனப் பார்க்கலாம்.

இன்று பெர்முடாவை 257 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சற்று ஆறுதல் தந்துள்ளது இந்தியா. இன்றைய நிலவரப்படி இலங்கையின் நெட் ரன்ரேட் 4.86, இந்தியா 2.5, பங்களாதேஷ் 0.14. மூன்று அணிகளும் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.
 
சாத்தியக்கூறு - 1

Gangulyபுதனன்று நடைபெறும் போட்டியில் இலங்கை பங்களாதேஷை வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளாகும். வெள்ளியன்று நடைபெறும் போட்டியில் இந்தியா இலங்கையை வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்த புள்ளிகள் நான்காகும்.  இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் பெர்முடாவை வெல்லும் பட்சத்தில் அதுவும் நான்கு புள்ளிகள் பெற்றிருக்க்கும். இந்நிலையில் மூன்று அணிகளும் 4 புள்ளிகளுடன் இருப்பதால் சிறந்த நெட் ரன்ரேட் உள்ள முதலிரு அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும். இதன்படி இந்தியா அடுத்த போட்டியில் வெல்வதுடன், சிறந்த ரன்ரேட் வித்தியாசத்திலும் வெல்ல வேண்டும். ஒருவேளை அடுத்த போட்டியில் இலங்கை 250 ரன்கள் அடித்து பங்களாதேஷை 200 ரன்களுக்கு அவுட்டாக்கினால்,  இலங்கையின் நெட்ரன்ரேட் 2.93 ஆக இருக்கும். இலங்கை 300 ரன்கள் அடித்து பங்களாதேஷ் 200 ரன்களுக்கு அவுட்டாக்கினால் 3.43 ஆக இருக்கும். இந்நிலையில் இந்தியா இலங்கையை குறந்தது 100 ரன்கள் அல்லது 15 ஓவர்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் வெள்ளியன்றே அடுத்த சுற்றுக்கு செல்லலலம். இல்லையேல் ஞாயிறன்று நடைபெரும் பங்களாதேஷ்-பெர்முடா போட்டியின் முடிவு தெரியும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

சாத்தியக்கூறு - 2

புதனன்று நடைபெறும் போட்டியில் இலங்கையை பங்களாதேஷ் வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளாகும். இந்நிலையில் பங்களாதெஷ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி . இந்தியா இலங்கை இரு அணிகளும்  மோதும் போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும்.

Sehwaqசாத்தியக்கூறு - 3

இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி வெற்றி தோல்வியின்றி முடியும் பட்சத்தில் இரு அணிகளும் ஒரு புள்ளி பெற்று மொத்தம் மூன்று புள்ளிகளாகும்.இந்நிலையில் இந்தியா இலங்கை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால்  அடுத்த சுற்றுக்கு செல்லும்.

சாத்தியக்கூறு - 4

இலங்கை பங்களாதேஷையும் இந்தியாவையும் வெல்லும் பட்சத்தில், பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்றால், மீண்டும் நெட் ரன்ரேட் மூலம் இந்தியா அல்லது பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு செல்லும்.
 
இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

| | |
oooOooo
                         
 
மணிகண்டன் அழகப்பன் அவர்களின் இதர படைப்புகள்.   World Cup 2007 பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |