மார்ச் 16 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : பாட்டுக்கு பாட்டு (பின் பாட்டு)
- கோவி.கண்ணன் [geekay@singnet.com.sg]
| Printable version | URL |

தேர்தல், தேர்தல் ! சோர்ந்து போய், நம் அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே இடத்தில் தற்செயலாக சந்தித்துக் கொள்கிறார்கள். ஆவலுடன் பார்த்த திருவாளர் பொதுஜெனங்கள் எல்லோரும், கூட்டாக சேர்ந்து, அவர்களிடம் ஒரு கோரிக்கையை  வைக்கிறார்கள். அதாவது,

திருவாளர் பொதுஜெனம்: அன்பார்ந்த அரசியல்வியாதி, மண்ணிக்கவும் அரசியல்வாதி தலைவர்களே, உங்களையும் உங்கள் கூத்தணியையும், மறுபடியும் மண்ணிக்கவும் கூட்டணியையும் நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறேம், வரும் தேர்தலுக்கும் பின் உங்களில் யார் சிரிப்பீர்கள், யார் அழுவீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது, அதனால் இன்று நீங்களும் மகிழ்ந்து, எங்களையும் மகிழ்விக்க வேண்டுமென்பது எங்களின் விருப்பம். அதற்கு ஒரு யேசனையை முன்வைக்கிறோம் என்று நிறுத்துகிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெ: என் ரத்திதின் ரத்தமான, என் அன்பு செல்வங்களே, உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவிடம் உங்களுக்கு தயக்கம் வேண்டாம், அதைப்பார்த்து தாங்காது இந்த தாய் மனசு, உடனடியாக சொல்லுங்கள்.

கலைஞர்: கடந்த ஆட்சியின் வேதனையை மறந்து சிரிப்பதற்கு ஒரு வாய்பு கேட்கிறீர்கள். எங்களுக்கு புரிகிறது, சொல்லுங்கள் தமிழ்தாயின் செல்வங்களே, நானும், கழகத்தாரும் காத்திருகிறோம்.

புரட்சிகலைஞர்: காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒவ்வொரு இந்தியனும் தலை நிமிரனும், அதற்கு இந்த கேப்டனின் தலை குனிந்தாலும் அது தாழ்வில்லை, உங்கள் யோசனையை சொல்லுங்கள் எதுவானாலும் தயங்காமல் சொல்லுங்கள்

திருவாளர் பொதுஜெனம்: நன்றி அன்புத்தலைவர்களே, இங்கு இப்பொழுது அனைத்துக்கட்சி பாட்டுக்கு பாட்டு போட்டி நடைபெறும், உங்களில் ஒவ்வொருவராக பாட்டை தொடங்கவேண்டும், முதல்வர் என்ற முறையில், முதலில் முதல்வர் ஜெ. அவர்கள் தொடங்கட்டம்.

எல்லோரும் கைதட்டுகிறார்கள்

உடனே முதல்வர் ஜெ, வைகோவை பார்த்தபடி, பாட ஆரம்பிக்கிறார்.

ஜெ: அடிக்கிற கைதான் அணைக்கும் ... கசக்குற வாழ்வே இனிக்கும், அடிக்கிற கைதான் அ...

'அ' என நிறுத்த, வைகோ தொடர்கிறார்

வைகோ: அண்ணன் காட்டிய வழியம்மா, இது அன்பால் விளைந்த பழியம்மா ... இது அன்பால் விளைந்த ப....

கலைஞர்: பாலுட்டி வளர்த்த கிளி பழங்கொடுத்து பார்த்த கிளி, நான் வளர்த்த பச்சை கிளி நாளை வரும் கச்சேரிக்..  என நிறுத்த

விஜயகாந்தை பார்த்தபடி,

மருத்துவர் ராமதாஸ்:  கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், உன்னை ஏமாற்றும் நீ கானும் தோற்றம் ... க...பதிலுக்கு,

புரட்சிகலைஞர்:  கலக்க போவது யாரு .. நான் தான்... ஜெயிக்க போவது யாரு நான் தான் ... டாக்டர் ஒழிக ... ராஜா வசூல் ராஜா..

திருமாவளவன்: ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை, நான் தாண்ட என் மனசுக்கு ராஜா வாங்குகடா வெள்ளியில் கூஜா, ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எ..

இல.கனேசன்: எங்கே செல்லும் எங்கள் பாதை யாரோ யார் அறிவார்கள்... காலம் காலம் செல்ல வேண்டும் யாரோ யார் அறிவார்கள், எங்கே செல்லும் எங்கள் பாதை யாரோ யார் அ..

வாசன்: அன்னையை போல் ஒரு தெய்வமில்லை அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை, மன்னில் மனிதரில்லை, அன்னையை போல் ஒரு தெய்வமில்லை. அவர் அடி தொழ மறுப்ப..

தன்னையே நினைத்தபடி,

கார்த்திக்: பாடி திறிந்த கிளி பாதை மறந்ததடி பூமானே, ஆத்தாடி உன்னால கூத்தடி நின்னே, கேட்காத மெட்டெடுத்து பாடு பாடு, பஞ்சு வெடிச்சா அது காயம் காயம், நெஞ்சு வெடிச்சா அது தா...

திண்டிவனம் ராமமூர்த்தி : தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா, இன்று நீ தந்த பிச்சையிலே வளர்வேனம்மா, தாய் த...

இல.கனேசனைப் பார்த்து..

தமிழக முதல்வர் ஜெ : தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே தனிமையிலே...

இல.கனேசன் : லேசா லேசா நீ இல்லாமல வாழ்வது லேசா, நீண்ட கால உறவிது லேசா, லேசா லேசா நீ இல்லாமல வா..

வைகோ : வானத்தை பார்தேன் பூமியை பார்தேன் மனுசன இன்னும் பார்க்கலெயே, நான் 'பல நாள் இருந்தேன் உள்ளே', அந்த நிம்மதி இங்கில்ல, உள்ள போன அனைவருமே குற்றவாளி இல்லேங்க, வெளிய உள்ள அ...

வைகோவை பார்த்து நொந்து போய்,

கலைஞர் : அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, ஆசைகொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் கட்சியிலே.. அண்ணன் என்னடா, தம்பி என்னடா ...

திருவாளர் பொதுஜெனம் : போதும் போதும் நிறுத்துங்க, ஏதோ சந்தோசமா பாடுவிங்கன்னு பார்த்தால், லாவனி பாடிடிங்களே.

நொந்து கொண்டு கலைந்து செல்கிறார்கள்

| | |
oooOooo
கோவி.கண்ணன் அவர்களின் இதர படைப்புகள்.   நையாண்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |